காவிரி ஆறும்.. கைக்குத்தல் அரிசியும்! கலாச்சாரத்தில் கலக்கிய தமிழ்நாடு! புவிசார் குறியீட்டில் சாதனை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: புவிசார் குறியீடு பெறுவதில் இந்திய அளவில் தமிழ்நாடு குறிப்பிடத்தக்க சாதனையை படைத்துள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மற்றும் விளையும் 74 வகையான பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ள நிலையில், மாநிலங்களுக்கிடையிலான பட்டியலில் தமிழ்நாடு 2-வது இடத்தை பிடித்துள்ளது. முதலிடத்தில் உள்ள உத்தரபிரதேச மாநிலம், 77 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்று முன்னிலையில் உள்ளது.

ஒரு பொருளின் தரம், உற்பத்தி முறை மற்றும் அதன் தனிச்சிறப்புகள் அந்த இடத்தின் மண் வளம், காலநிலை அல்லது அங்கு வாழும் மக்களின் பாரம்பரியத் திறமை ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கும் போது, அந்த பொருளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது.

இது ஒரு பொருளின் பூர்வீகத்தை உலகிற்கு அடையாளம் காட்டும் முக்கிய சான்றாக விளங்குகிறது. நுகர்வோர் ஒரு பொருளை வாங்கும் போது, அது உண்மையான இடத்தில் இருந்து வந்த தரமான தயாரிப்பே என்பதை உறுதி செய்யும் அடையாளமாகவும் இந்த குறியீடு செயல்படுகிறது.

Tamil Nadu GI tag Geographical Indication

புவிசார் குறியீடு

புவிசார் குறியீடு விவசாயம், கைவினை, உணவுப் பொருட்கள், இயற்கை மற்றும் கைத்தொழில் சார்ந்த தயாரிப்புகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஒரு மாநிலத்தின் மண் சார்ந்த பாரம்பரியம், மக்களின் உழைப்பு மற்றும் தலைமுறைகளாக கடந்து வந்த திறமைகளை உலகளவில் அங்கீகரிக்கும் கவுரவமாக இது கருதப்படுகிறது. அதே நேரத்தில், போலித் தயாரிப்புகளால் பாதிக்கப்படும் உள்ளூர் உற்பத்தியாளர்களை பாதுகாக்கும் கேடயமாகவும் புவிசார் குறியீடு திகழ்கிறது.

தமிழ்நாடு

இந்த வகையில், புவிசார் குறியீடு பெறுவதில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னேறி வருகிறது. இதுவரை 74 பொருட்களுக்கு இந்த அங்கீகாரம் கிடைத்துள்ள நிலையில், சமீப காலங்களில் உறையூர் பருத்திச் சேலை, கவுந்தப்பாடி நாட்டுச் சர்க்கரை, நாமக்கல் கல்சட்டி, தூயமல்லி அரிசி மற்றும் அம்பாசமுத்திரம் சொப்புச் சாமான்கள் உள்ளிட்ட பொருட்களுக்கும் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பாரம்பரிய பொருட்கள்

இதற்கு முன்னரே, பழனி பஞ்சாமிர்தம், காஞ்சிபுரம் பட்டுச்சேலை, பண்ருட்டி பலாப்பழம், பண்ருட்டி முந்திரி, புளியங்குடி எலுமிச்சை, விருதுநகர் சம்பாவத்தல், செட்டிகுளம் சின்ன வெங்காயம், ராமநாதபுரம் சித்திரை கார் அரிசி மற்றும் உடன்குடி பனங்கருப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பாரம்பரியப் பொருட்கள் புவிசார் குறியீடு பெற்றுள்ளன.

விவசாயப் பொருட்கள்

தமிழ்நாடு அரசின் சுற்றுலாத் துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி, இதுவரை புவிசார் குறியீடு பெற்ற 74 பொருட்களில், கைவினைப் பொருட்கள் பிரிவில் 38 பொருட்களுக்கும், விவசாயப் பொருட்கள் பிரிவில் 24 பொருட்களுக்கும், உணவுப் பொருட்கள் பிரிவில் 9 பொருட்களுக்கும், உற்பத்திப் பொருட்கள் பிரிவில் 3 பொருட்களுக்கும் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. 2024-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை 58 பொருட்களுக்கு மட்டுமே இந்த அங்கீகாரம் கிடைத்திருந்த நிலையில், கடந்த 21 மாதங்களில் கூடுதலாக 16 பொருட்கள் புவிசார் குறியீடு பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு 2-வது இடம்

இந்த புவிசார் குறியீடுகள், தமிழ்நாட்டின் செழுமையான பாரம்பரியம், திறமையான கைவினைத்திறன் மற்றும் விவசாய சிறப்புகளை உலகிற்கு எடுத்துக்காட்டுகின்றன. புகழ்பெற்ற கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் முதல், தனித்துவமான விவசாய விளைபொருட்கள், பாரம்பரிய உணவு வகைகள் மற்றும் உற்பத்திப் பொருட்கள் வரை, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளின் தனித்துவமான அடையாளங்களையும் வரலாற்றையும் இந்த புவிசார் குறியீடுகள் பிரதிபலிக்கின்றன. இதன் மூலம், புவிசார் குறியீடு பெறுவதில் மாநிலங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில், தமிழ்நாடு 2-வது இடத்தில் தன்னை நிலைநிறுத்தி, நாட்டின் பாரம்பரிய அடையாளங்களை கொண்ட முன்னணி மாநிலமாக தொடர்ந்து விளங்கி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+