ப்பா மெய் சிலிர்க்குது.. பெண்கள் வேலைவாய்ப்பில் நாட்டிலேயே தமிழ்நாடுதான் "நம்பர் 1".. சூப்பர் டேட்டா

இந்தியாவில் உற்பத்தி தொழிற்சாலையில் தமிழ்நாடு தவிர வேறு எந்த மாநிலத்திலும் பாலின சமத்துவம் இல்லை என்று கூறப்பட்டு உள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவிலேயே அதிகம் பெண்கள் தமிழ்நாட்டில் இருந்துதான் தொழிற்சாலைகளில் வேலை செய்கிறார்கள் என்று புள்ளி விவரம் ஒன்று தெரிவிக்கிறது. இந்த புள்ளி விவரத்தில் இடம் பெற்று இருக்கும் தகவல்கள் ஆச்சர்யம் அளிக்கும் விதத்தில் உள்ளன.

தமிழ்நாடு பல்வேறு துறைகளில் முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. 60 வருட திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விட பல்வேறு துறைகளில் முன்னேறி உள்ளது. வறுமை ஒழிப்பு என்று மட்டுமில்லை ஐடி துறை, கல்வி, தொழிற்துறை, ஆராய்ச்சி துறை, ஏற்றுமதி, உற்பத்தி துறை என்று பல துறைகளில் தமிழ்நாடு முன்னேறிய மாநிலமாக உள்ளது.

பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு பல மடங்கு முன்னேறி உள்ளது. ஜிடிபியில் இரண்டாவது பெரிய மாநிலம் தமிழ்நாடு என்பது குறிப்பிடத்தக்கது.

 பெண்கள்

பெண்கள்

அந்த வகையில் பெண்கள் முன்னேற்றத்திலும் தமிழ்நாடுதான் முன்னிலை வகிக்கிறது. அசோகா பல்கலைக்கழகம் வெளியிட்டு இருக்கும் Centre for Economic Data and Analysis (CEDA) என்ற அறிக்கை இதை உறுதி செய்கிறது. அந்த அறிக்கையில், இந்தியாவில் உற்பத்தி தொழிற்சாலையில் தமிழ்நாடு தவிர வேறு எந்த மாநிலத்திலும் பாலின சமத்துவம் இல்லை என்று கூறப்பட்டு உள்ளது. இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் மொத்தம் 8 மில்லியன் பேரில் 5 சதவிகிதம் பேர் கூட பெண்கள் இல்லை என்று கூறப்பட்டு உள்ளது.

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

அதாவது பெண்கள் தொழிற்சாலைகளில் பணிக்கு சேர்க்கப்படுவது இல்லை. இதற்கான திறன் அவர்களுக்கு வழங்கப்படுவது இல்லை. அதற்கான பயிற்சியும் அவர்களுக்கு கொடுக்கப்படுவது இல்லை, என்று கூறப்பட்டு உள்ளது. இந்தியாவில் 1.6 மில்லியன் பெண்கள் மட்டுமே தொழிற்சாலைகளில் வேலை பார்க்கிறார்கள். அதாவது ஐடி போன்ற துறைகளை சேர்க்காமல் உற்பத்தி தொழிற்சாலைகளில் 1.6 மில்லியன் பேர் மட்டுமே வேலை பார்க்கிறார்கள். அதில் 0.68 மில்லியன் பேர் தமிழ்நாட்டில் மட்டுமே வேலை பார்க்கிறார்கள். அதாவது இந்தியாவில் தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் மொத்த பெண்களில் 43 சதவிகிதம் பேர் தமிழ்நாட்டில் இருந்துதான் வேலை பார்க்கிறார்கள்.

தென் மாநிலங்கள்

தென் மாநிலங்கள்

இந்தியாவிலேயே அதிகம் பெண்கள் தமிழ்நாட்டில் இருந்துதான் தொழிற்சாலைகளில் வேலை செய்கிறார்கள் என்று இந்த புள்ளி விவரம் தெரிவிக்கிறது. அதோடு இந்தியாவில் தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் பெண்களில் 72 சதவிகிதம் பேர் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய தென் மாநிலங்களில் வேலை பார்க்கிறார்கள் என்று இந்த புள்ளி விவரம் தெரிவிக்கிறது. தமிழ்நாட்டில் வேலை பார்க்கும் மொத்த தொழிற்சாலை ஊழியர்களில் 40.4 சதவிகிதம் பெண் ஊழியர்கள் என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது. டெல்லியில் தொழிற்சாலை ஊழியர்களாக இருப்பவர்களில் வெறும் 4.7 சதவிகிதம் பெண்கள் என்று இந்த அறிக்கைகூறுகிறது . மேற்கு வங்கத்தில் இது வெறும் 5.5 சதவிகிதம்தான். மஹாராஷ்டிராவில் இது 12 சதவிகிதம் மட்டுமே.

மோசமான நிலை

மோசமான நிலை

உத்தரப் பிரதேசம் (5.7 சதவீதம்) மற்றும் குஜராத் (6.8 சதவீதம்) என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது. இந்தியாவில் பெண்கள் சமத்துவம் மோசமாக இருப்பதாக இந்த அறிக்கை கூறுகிறது. தொழிற்சாலைகளில் பெண்களுக்கு இடம் இல்லாத நிலை இருக்கிறது. அவர்களுக்கான போதிய பயிற்சி இங்கே வழங்கப்படுவது இல்லை. தென் மாநிலங்களில் இது மோசமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டுமே நிலைமை சரியாக உள்ளதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+