தமிழக போக்குவரத்து ஆணையர் சண்முக சுந்தரம் ஐஏஎஸ் சென்னை போலீசில் பரபரப்பு புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக போக்குவரத்து ஆணையர் சண்முக சுந்தரம் சென்னை காவல் ஆணையரை சந்தித்து பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகாரில் தனது புகைப்படத்தை வாட்ஸ்-அப்பில் டி.பி.யாக வைத்து சக அதிகாரிகளிடம் பணம் வசூலிக்கிறார்கள் என்று சிலர் மீது குற்றம்சாட்டினார்.

தமிழ்நாட்டில் உள்ள முக்கிய ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை குறிவைத்து பல்வேறு சமூக ஊடக தளங்களில் போலி ஐடிக்கள் உருவாக்கப்படுகிறது. அந்த ஐடிக்கள் மூலம் அவர்களின் உறவினர்கள் மற்றும் உடன் பணியாற்றுவோர்களிடம் பணம் பறிக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நடக்கிறது. அவசரமாக பணம் தேவைப்படுகிறது என்று கூறி பணத்தை பறிக்கும் மோசடி கும்பல்கள் அதிகரித்துள்ளன..

Tamil Nadu Transport Commissioner Shanmuga Sundaram IAS complaint to Chennai Police

இது தொடர்பாக அண்மையில் எழுந்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் க்ரைம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் தொடர்புடையவர்களை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.

எனினும் இதுபோன்ற மோசடிகள் அவ்வப்போது நடந்து வருகிறது. அண்மையில் தமிழக அரசு போக்குவரத்து துறை ஆணையர் சண்முக சுந்தரத்தின் புகைப்படத்தை வாட்ஸ்அப்பில் டி.பி.யாக வைத்து சக அதிகாரிகளிடம் பணம் கேட்டு அழைப்பு வந்துள்ளது. இதுபற்றி சண்முக சுந்தரத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில், போலீசில் தற்போது புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

தமிழக அரசு போக்குவரத்து துறை ஆணையர் மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் சண்முக சுந்தரம் ஐஏஎஸ் தனது அலுவலக தனி உதவியாளர் அருண்குமார் மூலம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அந்த புகார் மனுவில், "வாட்ஸ்-அப், சினாப்சாட்களில் எனது புகைப்படத்தை டி.பி.யாக வைத்து , சக ஊழியர்களிடம் பணம் கேட்டு சிலர் தகவல் அனுப்பி வருகிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சண்முக சுந்தரம் ஐஏஎஸ் கூறினார். இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் தலைமையிலான சைபர் க்ரைம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+