ஓய்ந்தது மழை.. தொடர்கிறது பனிமூட்டம்.. அடுத்த 2 நாட்களுக்கு மழை வறண்ட வானிலை.. புது அப்டேட்
தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது
சென்னை: தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த மாதங்களில் தமிழகம் முழுக்க பெய்து வந்த மழை, தற்போது ஓய்ந்துள்ளது.. மாறாக கடும்பனி நிலவி வருகிறது.. இதனால் பல்வேறு மாவட்டங்களில் மக்கள் குளிருக்கு காலை 7 மணி வரை வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர்.
இதனிடையே, குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி சமீபத்தில் வலுவிழந்தது. மேலும், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவியது.

புதுவை
கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஒரு அறிக்கையை வானிலை மையம் வெளியிட்டிருந்தது.. அதில், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுவதால், 28.12.2022 முதல் 30.12.2022 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், 31.12.2022 மற்றும் 01.01.2023: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் அறிவித்திருந்தது.

மேகமூட்டம்
அதன்படியே சில மாவட்டங்களில் லேசான மழைப்பொழிவு இருந்தது.. இந்நிலையில், நேற்றைய தினம் மற்றொரு அறிவிப்பு வெளியாகி உள்ளது.. அதில், இன்று முதல் 2ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. 31.12.2022 முதல் 02.01.2023 வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வறண்ட வானிலை
இதனிடையே வறண்ட வானிலை மற்றும் பனிமூட்டம் குறித்து செந்தாமரைக்கண்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.. அதில், நாட்களுக்கு முன்பு, குமரிக் கடல் பகுதியில் நிலவிய வளி மண்டல கீழடுக்கு சுழற்சி, இப்போது தென் கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.. ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மக்கள் தயாராகி வரும் நிலையில், இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு, வட மாவட்டங்களின் உள்பகுதிகளில் காலை நேரத்தில் பனிமூட்டம் காணப்படும்.

பனிமூட்டம்
அடுத்து வரும் நாட்களிலும் பனிமூட்டம் தொடர வாய்ப்புள்ளது.. இன்றும், நாளையும், பிறகு 1ம் தேதி மற்றும் 2ம் தேதிகளில், தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த இரண்டு நாட்களுக்கு, வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும் என்று தெரிவித்துள்ளார். வறண்ட வானிலை நிலவினாலும், அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு ஓரளவு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications