வங்கக்கடலில் ஏற்பட்ட திடீர் மாற்றம்.. இன்று தமிழ்நாட்டில் என்ன நடக்கும்? முக்கியமான வானிலை அப்டேட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களில் இன்று மழை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 4 நாட்களாக வறண்ட வானிலை நிலவி வருகிறது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த 'மாண்டஸ்' புயல் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை இரவு கரையை கடந்தது. மாமல்லபுரத்திற்கு அருகே கரையை கடந்து வலிமை இழந்தது.

அதி தீவிர புயலாக இருந்த இந்த மாண்டஸ் புயலாக வலிமை குறைந்தது. கரையை கடந்த பின் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து வட தமிழக பகுதிகளில் நிலவி வந்தது.

மழை

மழை

இந்த புயல் கரையை கடந்த நேரத்தில் சென்னையில் பல இடங்களில் 11 செமீக்கும் அதிகமான மழையை கொடுத்தது. இதன் பின் மேலும் நகர்ந்த புயல் தற்போது அரபிக்கடலை நோக்கி சென்றுள்ளது. இதனால் இன்னும் தமிழ்நாட்டில் ஆங்காங்கே மழை பெய்து வந்தது. இந்த புயல் காரணமாக பெரிய சேதம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டதால், புயலால் ஏற்பட வேண்டிய சேதம் தவிர்க்கப்பட்டது. அதேபோல் மிகப்பெரிய அளவில் வெள்ளம் ஏற்படுவதில் இருந்தும் தமிழ்நாடு தப்பியது.

வானிலை

வானிலை

இந்த நிலையில் புதிய தாழ்வு பகுதி வங்கக்கடலில் கடந்த 16ம் தேதி தொடங்கியது. இந்த தாழ்வு பகுதி இனிதான் இலங்கையை நோக்கி நகரும். இது புயலாக மாற வாய்ப்புகள் குறைவு. இந்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் மழை தீவிரம் அடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளை தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 எச்சரிக்கை

எச்சரிக்கை

நாளை மறுநாள், அதாவது 20ம் தேதியில் இருந்து மழை தீவிரம் அடையும். இந்த தாழ்வு பகுதியின் பாதிப்பை அப்போதுதான் நாம் உணர தொடங்குவோம். அப்போதில் இருந்து மழை தீவிரமாக இருக்கும். அதன்படி, தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை மழை அப்டேட்

வானிலை மழை அப்டேட்

21ம் தேதி அன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலைக்கு பின்பே ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் என்று அளவில் இருக்கும். அதேபோல் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+