ஆத்தீ.. ஜூலையில் வெளுத்தெடுத்த மழை.. டாப் 10 லிஸ்ட்டை பாருங்க! ஆனா இங்க 1 சொட்டு கூட பெய்யலயாம்!
சென்னை: இந்திய அளவில் தென் மேற்குப் பருவமழையால் இந்த ஜூலை மாதத்தில் அதிக மழைப்பொழிவு பெற்ற இடங்கள், தமிழ்நாட்டில் மிக அதிக மழையைப் பெற்ற டாப் ஊர்களை பட்டியல் போட்டுள்ளார் தமிழ்நாடு வெதர்மேன். நீலகிரி, கோவை பகுதியில் ஜூலை மாதத்தில் நல்ல மழை பெய்தபோதும் தென் மாவட்டத்தின் ஒரு பகுதியில் 1 மி.மீ கூட மழை பதிவாகவில்லை.
இந்தியாவில் ஆண்டுதோறும் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் தென்மேற்குப் பருவமழை பரவலாகப் பெய்யும். தென்மேற்குப் பருவ மழை நம் நாட்டின் நீர்த்தேவையில் பெரும்பான்மையை நிறைவேற்றுகிறது. இந்தத் தென்மேற்குப் பருவமழையால் அரபிக்கடலை ஒட்டியுள்ள மாநிலங்கள் தொடங்கி மத்திய மாநிலங்கள் வரை பெரும்பாலான பகுதிகள் மழையைப் பெறுகின்றன.

கொட்டித்தீர்த்த தென்மேற்குப் பருவ மழை: தெற்மேற்குப் பருவமழையை முன்னிட்டு டெல்லி, இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட வட இந்தியாவின் பல மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கேரளா, கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களிலும் நல்ல மழை பெய்தது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஜூலை மாதத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்தது. சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களிலும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக மழை பெய்தது. நாடு முழுவதும் ஜூலையில் 31.59 செ.மீ மழை பெய்துள்ளதாகவும், தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட 13% அதிகம் பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வெதர்மேன் அப்டேட்: இந்நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ஜூலை மாதத்தில் பெய்த மழை பற்றிய முக்கிய அப்டேட்களை தனது வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்தியா முழுவதும் இந்த ஜூலை மாதத்தில் எங்கெங்கெல்லாம் மிக அதிக மழை பொழிந்தது என்ற விவரங்களை வெளியிட்டுள்ளார் தமிழ்நாடு வெதர்மேன்.
ஜூலை 1 2023 முதல் ஜூலை 31 2023 வரை இந்தியா முழுமைக்கும் மழைப்பொழிவில் டாப் 10 இடங்கள் பெற்ற இடங்கள்:
1. மவ்சினராம், மேகாலயா - 5871 மி.மீ
2. படகோன், மகாராஷ்டிரா - 5000
3. அம்போலி, மகாராஷ்டிரா - 4860
4. சிரபுஞ்சி, மேகாலயா - 4760
5. தாமினி, மகாராஷ்டிரா - 4578
6. தாவடி, மகாராஷ்டிரா - 4344
7. கமான், மகாராஷ்டிரா 4319
8. மாதேரன், மகாராஷ்டிரா - 4154
10. வால்வான், மகாராஷ்டிரா - 4128
10. தாவடி முகாம், மகாராஷ்டிரா - 4002
தமிழ்நாடு டேட்டா: தென்மேற்குப் பருவமழை காரணமாக தமிழ்நாட்டில் ஜூலை மாதம் முழுவதும் அதிக மழைப்பொழிவு இருந்த இடங்கள்:
(குறைந்தது 1000 மிமீ)
1. சின்னக்கல்லார், கோயம்புத்தூர் - 1861 மி.மீ
2. அவலாஞ்சி, நீலகிரி - 1803
3. முகூர்த்தி, நீலகிரி - 1406
4. பந்தலூர், நீலகிரி - 1401
5. பெரியகல்லார் (வால்பாறை பி.டி.ஓ), கோயம்புத்தூர் - 1320
6. சின்கோனா, கோயம்புத்தூர் - 1166
7. தோவாளை, நீலகிரி - 1161
தமிழ்நாடு முக்கிய நகரங்கள் மற்றும் விமான நிலையங்களில் மழைப்பொழிவு 01.06.2023 முதல் 31.07.2023 வரை
1. சென்னை ஏர்போர்ட் - 324 மி.மீ.
2. வேலூர் - 293
3. சென்னை சிட்டி - 267
4. பாண்டிச்சேரி - 263
5. சேலம் - 161
6. திருப்பத்தூர் - 160
7. மதுரை நகரம் - 156
8. கடலூர் - 149
9. தருமபுரி - 149
10. காரைக்கால் - 110
11. தஞ்சாவூர் - 107
12. மதுரை ஏர்போர்ட் - 99
13. நாகப்பட்டினம் - 90
14. ஓசூர் - 75
15. நாமக்கல் - 69
16. திருச்சி ஆந்திரம் - 61
17. கோவை ஏர்போர்ட் (பீளமேடு) - 30
18. கன்னியாகுமரி - 25
19. ஈரோடு - 24
20. திருநெல்வேலி (பாளையங்கோட்டை) - 17
21. கரூர் - 11
22. தூத்துக்குடி - 5
23. பாம்பன் - 0
ஒரு சொட்டு கூட: இந்தியாவில் மிக வறண்ட இடங்கள் 01.06.2023 முதல் 31.07.2023 வரை
மழைப்பொழிவு (குறைந்தபட்சம் 25 மி.மீ)
1. பாம்பன், தமிழ்நாடு - 0
2. தூத்துக்குடி, தமிழ்நாடு - 5 மி.மீ
3. கரூர், தமிழ்நாடு - 11
4. திருநெல்வேலி (பாளையங்கோட்டை), தமிழ்நாடு - 17
5. ஈரோடு, தமிழ்நாடு - 24
6. கன்னியாகுமரி, தமிழ்நாடு - 25
All India South West Monsoon Rainfall Toppers and State Toppers from 01.06.2023 to 31.07.2023
— Tamil Nadu Weatherman (@praddy06) August 1, 2023
Wettest cities this monsoon.
The driest places this monsoon too. Some places have not got drop of rains and that too it lies in TN.
More on the link - https://t.co/pKIqImS4Uh
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications