இருக்கு, இன்று இரவு மிக கன மழை இருக்கு! எங்கெல்லாம் பெய்யும்? தமிழ்நாடு வெதர்மேன் முக்கிய எச்சரிக்கை
சென்னை: காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையை கடந்து சென்று விட்டது என்ற போதிலும் இன்று இரவு, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் வாய்ப்பு இருக்கிறது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இன்று மாலை காரைக்கால் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே சென்னைக்கு அருகே, கரையை கடந்தது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, சென்னை, காஞ்சிபுரம் , திருவள்ளூர், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கடந்த இரு தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது.

சென்னை வெள்ளம்
சென்னையின் பல்வேறு பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் செல்லும் அளவுக்கு நிலைமை மோசமாக இருந்தது. இந்த நிலையில்தான், நவம்பர் 11ம் தேதி இரவு தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: இன்று மாலை 4.30 முதல் 5.30 மணிக்குள், சென்னை அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது. தற்போது அது, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களின் மேலே இருப்பது செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் உறுதியாக தெரிகிறது. தமிழகத்தின் வட மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.

மழை பெய்கிறது
தற்போதைய நிலையில், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் , திருவள்ளூர், சித்தூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது. வேலூரை மையமாகக் கொண்டு அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் இன்று இரவு முழுக்க இதே போன்ற மழை தொடரும்.

இரவு மிக கன மழை
அதிலும் குறிப்பாக, வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று இரவு மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு மற்றும் வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் என்பதால் உள் மாவட்டங்களில் நல்ல மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

சென்னை மழை குறையும்
அடுத்தடுத்த நாட்களில் சென்னையில் மழை பொழிவு குறையும். வழக்கமான பருவ மழை தொடரும். ஆனால் அது மிரட்டக் கூடிய அளவுக்கு இருக்காது. இவ்வாறு பிரதீப் ஜான் தெரிவித்து உள்ளார். பொதுவாக புயலோ, காற்றழுத்த மண்டலமோ நிலப் பகுதிக்குள் நுழைந்த பிறகு, அது, கடலில் இருக்கும்போது கொடுத்த அளவுக்கு பிரச்சினைகளை கொடுக்காது. ஆனால் வேலூர் முதல் கிருஷ்ணகிரி வரையிலான தமிழக மாவட்டங்களிலும், பெங்களூர், கோலார், ராம்நகர் உட்பட தெற்கு கர்நாடக மாவட்டங்களிலும் இன்று இரவு நல்ல மழை பெய்யும் வாய்ப்பு இருக்கிறது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications