சின்ன திரையில் என்ட்ரி கொடுத்த தமிழ்நாடு வெதர்மேன்! அதுவும் இந்த ஹிட் சீரியலில்! வெளியான பரபர போட்டோ
சென்னை: தமிழ்நாடு வானிலை குறித்து கரெக்ட்டான நேரத்தில் அப்டேட்களை தந்து வரும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், சின்ன திரையில் அறிமுகமாகியுள்ளதாக அவரே ட்வீட் செய்துள்ளார்.
தமிழ்நாட்டில் வானிலை கணிப்பது ரொம்பவே கடினம்.. என்ன தான் மிகச் சிறந்த கருவிகள் டேட்டாக்கள் இருந்தாலும், நமது தமிழக வானிலை தொடர்ந்து மாறிக் கொண்டே தான் இருக்கும். இதைக் கணிப்பது அந்தளவுக்கு எளிதான காரியம் இல்லை.
இதனால் தான் வானிலை முன்னறிவிப்புகள் கூட சில நேரங்களில் பொய்த்தும் போகிவிடுகிறது. இப்படியிருக்கும் தமிழக வானிலை குறித்த கரெக்ட்டான அப்டேட்களை தந்து வருவர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்.

தமிழ்நாடு வெதர்மேன்
இப்போது சமூக வலைத்தளங்களில் பலர் வானிலை முன்னறிவிப்புகளை வெளியிட்டாலும் இதற்கெல்லாம் விதை போட்டவர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தான். இவர் கடந்த 2008ஆம் ஆண்டு முதலே வானிலை குறித்து blogஇல் எழுதி வருகிறார். கடந்த 2014 முதல் சமூக வலைத்தளங்களிலும் வானிலை முன்னறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். குறிப்பாக 2015 பெரு வெள்ளத்தின் போது இவரது முன்னறிவிப்புகள் மிக்க பயனுள்ளதாக அமைந்தது.

துல்லிய அப்டேட்
அதன் பின்னர் சமூக வலைத்தளங்களில் இவரைப் பின்தொடர்வோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தது. சென்னை மற்றும் தமிழ்நாடு குறித்த இவர் பதிவிடும் வானிலை முன்னறிவிப்புகள் பெரும்பாலான நேரங்களில் சரியானதாகவே இருந்துள்ளது. வானிலை தொடர்பாக இவர் வெளியிடும் பதிவுகளுக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி கூட பாராட்டியுள்ளார். பருவ மழை தொடங்கிவிட்டாலே, ஸ்கூல் லீவ் தகவல்களுக்குக் கூட இவரது ட்விட்டர் பக்கத்தை ஆர்வமாக நோட் பண்ண தொடங்கிவிடுவார்கள் 2கே கிட்ஸ். இவரே தமிழ்நாடு வானிலையைக் கணிப்பது கடினமான ஒன்று எனப் பல முறை கூறியுள்ளார்

ராஜா ராணி-2
அந்தளவுக்குப் பிரபலமான ஒரு நபர் தான் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான். இதற்கிடையே இவர் சின்ன திரையில் அறிமுகமாகியுள்ளதாக அவரே ட்வீட் செய்துள்ளார். என்ன சீரியல் என்ன ரோல் என கேட்கிறார்களா.. வாங்க பார்க்கலாம். விஜய் டிவியில் ஒளிபரப்பான இந்தி டப்பிங் சீரியலான "என் கணவன் என் தோழன்" சீரியலை மையமாக வைத்து எடுக்கப்படும் சீரியல் தான் 'ராஜா ராணி-2'.. இதுவும் விஜய் டிவியில் தான் ஒளிபரப்பாகி வருகிறது.

சின்னதிரையில் தமிழ்நாடு வெதர்மேன்
போலீசாக துடிக்கும் மனைவியின் கனவைப் பலரது எதிர்ப்பை தாண்டி கணவன் நிறைவேற்றுவதே இதன் மையக்கரு. இதில் கதாநாயகனாக சித்துவும் கதாநாயகியாக ராஜா ராணி முதல் பாகத்தில் நடித்த ஆல்யா மானசா நடித்து வந்தனர். கர்ப்பமாக இருந்த ஆல்யா மானசா டெலிவரி காரணமாக சீரியலை விட்டு வெளியேறினார். அவருக்குப் பதிலாக ரியா இந்த சீரியலில் ஒப்பந்தமானார்.. இப்போது விஜய் டிவியில் நல்ல ஹிட் அடித்த ஒரு சீரியலாகவே இது உள்ளது. இந்த சீரியிலில் தான் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் நடித்துள்ளதாக பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

வெதர்மேன் ட்வீட்
இது குறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில், "கடவுளின் ஆசியாலும், மக்கள் ஆசீர்வாதத்துடனும், ராஜா ராணி 2இல் முனுசாமியாக சின்னதிரையில் அறிமுகமாகியுள்ளேன். படப்பிடிப்பில் மிகவும் பதட்டமாக இருந்தது, ஆனால் இயக்குநரும் என்னுடன் நடித்தவர்களும் என்னை ஆசுவாசப்படுத்தினர். எல்லா வழிகளிலும் என்னை ஆதரித்தனர். எனது ராக்கிங் பர்பமனஸுக்கு இதுவே காரணம்.. எனது ஆற்புதமான ஆக்டிகை இந்த லிங்கில் சென்று பார்க்கலாம்" என்று கூறி அதன் வீடியோ இணைப்பையும் கூட பகிர்ந்துள்ளார். அவரது இந்தப் பதிவு தான் சமூக வலைத்தளங்களில் இப்போது வேகமாகப் பரவி வருகிறது.

குபீர் சிரிப்பு
இது குறித்த ஃபோட்டோ ஒன்றையும் பகிர்ந்திருந்தார். ஆர்வமாக இதைச் சென்று பார்த்தவர்களுக்கு ஒரே சிரிப்பு தான். ஏனென்றால், உண்மையில் அவர் அந்த சீரியலில் நடிக்கவில்லை. ஆனால், அவரது படத்தை கட்அவுட் ஒன்றில் பயன்படுத்தியுள்ளனர். பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் அவர் வைத்துள்ள முகப்பு படத்தை எடுத்து முனுசாமி என்று வைத்து கட் அவுட்டில் வைத்துள்ளனர். இதை ஸ்க்ரீன்ஷாட் எடுத்துப் பதிவிட்டுள்ள வெதர்மேன் தனக்கே உரிய நக்கல் பாணியில் போஸ்ட் ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

வானிலை
அது சரி தமிழ்நாடு வெதர்மேன் குறித்த பார்க்கும் போது வானிலை அறிவிப்பை மிஸ் செய்ய முடியுமா. அடுத்து வரும் நாட்களில் எப்படியிருக்கும் என்பது குறித்து சென்னை வானிலை மையம் முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. வரும் நாட்களில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
-
எல்லாரும் மன்னிச்சிருங்க.. வாழ்க்கையில் நடந்த சோகம்! உருக்கமாக பேசிய பாக்கியலட்சுமி சீரியல் கோபி -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்!












Click it and Unblock the Notifications