வானிலையில் ட்விஸ்ட்.. வேறு "பெல்டிற்கு" மாறிய மழை மேகங்கள்.. தமிழ்நாடு வெதர்மேன் முக்கிய வார்னிங்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு வானிலை தொடர்பாக காலை 4.30 மணிக்கு தமிழ்நாடு வெதர்மேன் முக்கிய அப்டேட் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று 20 மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும்.

மதுரை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் இன்று லேசான மழை பெய்யும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும். விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை,, புதுக்கோட்டை மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்யும்.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மழை

மழை

சென்னை உள்ளிட்ட வடக்கு மாவட்டங்களில் மழை வெகுவாக குறைந்துவிட்டது. இந்த நிலையில் தமிழ்நாடு வானிலை தொடர்பாக காலை 4.30 மணிக்கு தமிழ்நாடு வெதர்மேன் முக்கிய அப்டேட் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் நான்கு முக்கியமான விஷயங்களை குறிப்பிட்டு உள்ளார். கடந்த 4 மணி நேரமாக சென்னையில் எந்தப் பகுதியிலும் மழை பெய்யவில்லை. இனி வரும் மணி நேரங்களிலும் இதே நிலை நீடிக்கும். பள்ளிக் குழந்தைகளும் ஆசிரியர்களும் பள்ளிக்குத் தயாராக இருக்க வேண்டும்.

தமிழ்நாடு வெதர்மேன்

தமிழ்நாடு வெதர்மேன்

லீவ் விடுவார்கள் என்ற அறிவிப்புக்காக டிவி பார்க்க வேண்டாம். மழை சென்னையில் இருந்து மழை கடலூர் பெல்ட் நோக்கி சென்றுள்ளது. அதன்பின் அது டெல்டா மற்றும் தெற்கு பெல்ட் நோக்கி நகரும். விருதுநகர், ராமதாபுரம் மதுரை மாவட்டம் முழுவதும் நல்ல மழை பெய்ய போகிறது. அடுத்த இரண்டு தினங்களுக்கு மழை உள் தமிழ்நாடு டெல்டா மாவட்டங்களுக்கு, தென் மாவட்டங்களுக்கு நகரும்.

மழை நிலவரம்

மழை நிலவரம்

சென்னை மற்றும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் இங்கும், அங்கும் லேசான மழை பெய்யும். ஆனால் தீவிர மழை பெய்ய வாய்ப்பு கிடையாது என்று தமிழ்நாடு வெதர்மேன் தனது போஸ்டில் குறிப்பிட்டு உள்ளார். சென்னை வானிலை மையமும் இதே தகவலை வெளியிட்டு உள்ளது. அதன்படி சென்னையில் இன்று மழை ஆங்கங்கே சில இடங்களில் பெய்யும் . ஆனால் கடந்த இரண்டு நாட்கள் போல கனமழைக்கு வாய்ப்பே இல்லை என்று சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

சென்னை

சென்னை

சென்னையில் கடந்த 7-8 மணி நேரமாக எங்கும் மழை பெய்யவில்லை. இதையடுத்து பள்ளிகளும் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டில் பள்ளிகள் இயங்கும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது. சென்னையில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸ ஆக இருக்கும். குறைந்தபட்ச வெப்பநிலை 22- 23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+