'சென்னையில் அட்டகாசம்' மிகப்பெரிய சம்பவம் தொடங்கிடுச்சு.. தமிழ்நாடு வெதர்மேன் ட்வீட்.. அங்கேயேவா!

Subscribe to Oneindia Tamil

சென்னை : கேரளா, கர்நாடகா, தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் அடுத்த 3 நாளைக்கு மிகப்பெரிய அளவில் மழை பெய்யப்போவதாக தமிழ்நாடு வெதர்மேன் தனது ட்வீட் பதிவில் கூறியுள்ளார்.

தென்மேற்கு பருவ மழை இந்தாண்டு இதுவரை சரியாக பெய்யவில்லை. கேரளாவிற்கே மிகப்பெரிய ஏமாற்றம் நடந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் வெறும் இரண்டு நாள் மட்டுமே சென்னையில் நல்ல மழை பெய்தது. மற்ற பகுதிகளில் அதுவும் இல்லை. ஓரளவே மழை பெய்துள்ளது.

Tamil Nadu Weatherman tweet that The big event has commenced in Kerala , heavy rain in the next 3 days

கர்நாடகாவில் உள்ள காவேரி நீர் பிடிப்பு பகுதிகள், கேரளா, கடலோரா கர்நாடகா போன்ற பகுதிகளில் மழை சரியாக பெய்யவில்லை. தமிழகத்தில் சரியான மழை பெய்யவில்லை. மழை இல்லாத காரணத்தால் காவேரியில் இருந்து தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடகா கைவிரித்துவிட்டது. கோவையில் சிறுவாணி அணையில் குடிக்கவே தண்ணீர் இல்லை. இன்னும் சில நாட்களில் அங்கு சரியான மழை பெய்யாவிட்டால் குடிநீருக்கு பெரிய பஞ்சமே ஏற்படும். வற்றாத தாமிரபரணி பாயும் திருநெல்வேலியிலேயே தண்ணீர் பஞ்சம் அதிகமாகி உள்ளது.

குடிநீர் பற்றாக்குறை தென்மாவட்டம் முழுவதுமே அதிகமாக உள்ளது. தென்மேற்கு பருவ காற்றால் இந்தாண்டு இதுவரை சரியான மழை பெய்யவில்லை.இந்நிலையில் முதல்முறையாக பெரிய சம்பவம் நடக்க போகிறது.

தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், கேரளாவில் மிகப்பெரிய சம்பவம் தொடங்கிடுச்சு.. நீலகிரி (கூடலூர் மற்றும் அவலாஞ்சி பகுதிகள்), வால்பாறை மற்றும் குமரி பெல்ட்டில் இன்றிரவு பெரிய மழை இருக்க போகிறது. அடுத்த 3 நாட்களுக்கு கேரளா மற்றும் வயநாடு மற்றும் குடகில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்யும். கடலோர கர்நாடகா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளிலும் கனமழை பெய்யும்" என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட் பதிவில் கூறியுள்ளார். சென்னை குறித்து வெதர்மேன் கூறும் போது, சென்னையில் அட்டகாசமான தட்பவெப்ப நிலை நிலவும் என்றும் இரவு நேரத்தில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும்

இதனிடையே சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்கு திசை காற்றின் வேசுமாறுபாடு காரணமாக, (03.07.2023) இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகனில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

(04.07.2023) நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமுதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல். தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

(05.07.2023) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கள முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கணமழை பெய்யக்கூடும்.

(06.07.2023) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் நிலகிரி, கோயம்புந்தார், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஏரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

(07.07.2023) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+