விதவை மறுமணம் திட்டத்தில் ரூ 50 ஆயிரம் + ஒரு பவுன் தங்கம்! விண்ணப்பிப்பது எப்படி?
சென்னை: டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவி திட்டத்தின் மூலம் கணவனை இழந்த பெண்ணிற்கு மறுமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தால், அவர்களுக்கு ரூ 50 ஆயிரம் ரொக்கமும் தாலிக்கு 8 கிராம் தங்கமும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தை பயன்படுத்துவது எப்படி என்பதை பார்க்கலாம்.

கணவனை இழக்கும் பெண்கள் தங்கள் வாழ்க்கையை எண்ணி முடங்கிக் கிடக்கக் கூடாது என்பதற்காக விதவைகள் மறுமணத்தை ஊக்குவிக்கும் விதமாக முன்னாள் முதல்வர் கருணாநிதி டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவி திட்டம் என்ற திட்டத்தை 1975 ஆம் ஆண்டு தொடங்கினார்.
கணவனை இழந்த பெண்ணிற்கு மறுமணத்திற்கு ஏற்பாடு செய்தால் இந்த திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்படும். இந்த திட்டத்தில் பயன்பெற வேண்டுமானால் கணவனை இழந்த பெண்ணிற்கு 20 வயதிற்கு அதிகமாகவும், மணமகனுக்கு முதல் திருமணமாகவும் அவருக்கு 40 வயதுக்குள்பட்டும் இருத்தல் வேண்டும்.
பட்டதாரி அல்லாதவர்களுக்கு ரூ 25 ஆயிரம் வழங்கப்படும். மின்னணி பரிமாற்ற சேவை மூலம் ரூ 15 ஆயிரமும், ரூ 10 ஆயிரம் தேசிய சேமிப்பு பத்திரமாகவும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் 8 கிராம் தங்க நாணயமும் வழங்கப்படும்.
ஒரு வேளை பட்டதாரிகள் என்றால் கல்லூரியிலோ அல்லது தொலைதூரக் கல்வி மூலமாகவோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளி பல்கலைக்கழகங்களிலோ படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
டிப்ளமோ படித்தவர்கள் எனில் தமிழக அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். இவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்.
இந்த பணமும் மின்னணு பரிமாற்ற சேவை மூலம் ரூ 30 ஆயிரமும், மீதமுள்ள ரூ 20 ஆயிரம் தேசிய சேமிப்புப் பத்திரமாகவும் வழங்கப்படும். 8 கிராம் தங்க நாணயமும் வழங்கப்படும். உதவித் தொகைக்கான விண்ணப்பத்துடன் கைம்பெண் சான்று, மறுமணம் செய்ததற்கான திருமண அழைப்பிதழ், மணமகன், மணமகள் ஆகிய இருவரின் வயதுச் சான்றுகள், பள்ளி அல்லது கல்லூரி அல்லது பாலிடெக்னிக் டிசி மற்றும் மதிப்பெண் பட்டியல் ஜெராக்ஸ் ஆகியவற்றை இணைந்து திருமணம் முடிந்த நாளில் இருந்து 6 மாதங்களுக்குள் திருமண உதவித் தொகைக்கான விண்ணப்பத்தை மாவட்ட சமூகநல அலுவலரின் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ரூ.140 சரக்கு பாட்டிலில் அரசுக்கு மட்டும் இவ்வளவு லாபமா? தலை சுற்ற வைக்கும் டாஸ்மாக் வரி கணக்கு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications