தமிழக நிதிநிலை கவலைக்கிடம்?.. கடன் வளர்ச்சி 14.3%.. வெள்ளை அறிக்கை தகவல்
சென்னை: தமிழ்நாட்டின் நிதி நிலைமை குறித்து நிதியமைச்சர் மரியவில்சன் இன்று தலைமைச் செயலகத்தில் வெள்ளை அறிக்கை வெளியிட்டு, மாநிலத்தின் தற்போதைய பொருளாதார சூழல் குறித்து விரிவாக விளக்கமளித்தார். இந்த அறிக்கையில் மாநிலத்தின் கடன் சுமை, வருவாய் பற்றாக்குறை மற்றும் நிதி மேலாண்மை தொடர்பான பல முக்கிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் திமுக ஆட்சிக்காலத்தில் ரூ.5 லட்சம் கோடி அளவிற்கு கடன்கள் பெறப்பட்டுள்ளதாகவும், மாநிலத்தின் மொத்த கடன் வளர்ச்சி 14.3 சதவீத அளவிற்கு சென்றுள்ளதாகவும் நிதியமைச்சர் தெரிவித்தார்.
வெள்ளை அறிக்கையை வெளியிட்டு பேசிய நிதியமைச்சர், தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளதாக தெரிவித்தார். கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் மாநிலத்தின் மொத்த கடன் சுமை இரு மடங்காக அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், "வரவை விட செலவைக் கட்டுப்படுத்துவதே முக்கியம்" என்ற திருக்குறள் கருத்தை மேற்கோள் காட்டிய அவர், தற்போது மாநிலத்தின் செலவினங்கள் வருவாயை விட அதிகமாக உள்ளதாக சுட்டிக்காட்டினார். 2021 முதல் 2026 வரையிலான காலகட்டத்தில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
தமிழக அரசின் மொத்த நிலுவைக் கடன் தற்போது ரூ.10 லட்சம் கோடியாக உள்ளது. மாநிலத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.78,326 கோடியாக உள்ளது. வருவாய் பற்றாக்குறை முன்பு எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. அதேபோல், மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் கடன் சுமை 28.3 சதவீதமாக உள்ளதாகவும், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக கடன் உள்ளது. ஒவ்வொரு குடிமகனின் மீதான கடன் சுமையும் கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இரு மடங்கு உயர்ந்துள்ளது.
மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் திமுக ஆட்சிக்காலத்தில் ரூ.5 லட்சம் கோடி அளவிற்கு கடன்கள் பெறப்பட்டுள்ளது. மாநிலத்தின் மொத்த கடன் வளர்ச்சி 14.3 சதவீத அளவிற்கு சென்றுள்ளதாகவும் நிதியமைச்சர் தெரிவித்தார்.
-
"தமிழ்நாட்டின் வருவாயில் 3-ல் 1 ரூபாய் வட்டிக்கு மட்டுமே செல்கிறது.." வெள்ளை அறிக்கை ரிப்போர்ட் -
இனி யாரும் தப்ப முடியாது.. 16 நாட்களில் 16 ஆயிரம் வழக்குகள்.. ரூ.3.13 கோடி வசூல்! -
4874 EV சார்ஜிங் நிலையங்கள் ரூ.2000 கோடியில்! தமிழகத்தில் எங்கே தெரியுமா? மத்திய அரசின் மாஸ் பிளான் -
நடுக்கடலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. 3 நாட்களுக்கு பிறகு ஒரு வழியாக மீட்கப்பட்ட உடல்! என்ன நடந்தது? -
தமிழகத்தின் தனிநபர் ஒவ்வொருவர் மீதும் ரூ 1,28,934 கடன்! வெள்ளை அறிக்கையில் மரிய வில்சன் தகவல் -
வெளியானது தமிழக நிதி நிலை வெள்ளை அறிக்கை! திமுக ஆட்சியில் கடன் 2 மடங்கானதாக குற்றச்சாட்டு! -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
தமிழ்நாட்டில் ஹையோசங் டிஎன்எஸ் புதிய தொழிற்சாலை.. ஏடிஎம் உற்பத்திக்கு திட்டம்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்!












Click it and Unblock the Notifications