தமிழ்நாட்டைப் பிரித்தால் கடும் போராட்டம் வெடிக்கும் - பழ. நெடுமாறன் எச்சரிக்கை
சென்னை: தமிழ்நாட்டைப் பிரித்து கொங்கு தனி மாநிலம் உருவாக்கினால் கடும் போராட்டம் வெடிக்கும் என்று தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக பழ. நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களைப் பிரித்து கொங்கு நாடு என்ற பெயரில் புதிய மாநிலத்தை உருவாக்குவது பற்றி இந்திய அரசு ஆராய்ந்து வருவதாகச் செய்தி வெளியாகியுள்ளது.
இம்முயற்சி உண்மையாக இருக்குமானால், அதை எதிர்த்துத் தமிழர்கள் மிகக் கடுமையாகப் போராட வேண்டிய சூழ்நிலை உருவாகும் என எச்சரிக்க விரும்புகிறேன்.

வட தமிழகம், தென் தமிழகம்
சில ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ்நாட்டை வடக்கு, தெற்கு என பிரித்து இரு மாநிலங்களாக்கும் கோரிக்கையை சிலர் எழுப்பினர். அப்போதும் தமிழர்களின் கடும் எதிர்ப்பின் விளைவாக அத்தகைய கோரிக்கை கைவிடப்பட்டது.

தமிழகத்தின் வரலாறு
சங்க காலத்திலிருந்து 1956ஆம் ஆண்டு மொழி வழியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட காலம் வரை தமிழ்நாடு என்றும் ஒரே நாடாக இருந்ததில்லை. மூவேந்தர்களும், வேறு பல மன்னர் குலத்தினரும் பிரித்து ஆண்ட சிறுசிறு நாடுகளாகத்தான் திகழ்ந்தது. பிறகு, அந்நியர்களின் படையெடுப்புக்கு ஆளாகி அடிமைப்பட்டது.

மொழிவாரி பிரிவினையால் பாதிப்பு
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சென்னை மாகாணம் என்ற கூண்டிற்குள் தமிழகம் அடைக்கப்பட்டுத் தவித்தது. 1956ஆம் ஆண்டில்தான் தமிழ்நாடு முதன்முதலாக ஒன்றுபட்ட மாநிலமாக ஆக்கப்பட்டது. அப்போதும் சில பகுதிகளை நாம் இழக்க நேரிட்டது.

போராட தயாராக இருக்க வேண்டும்
தமிழ்நாட்டுத் தமிழர்களும், உலக நாடுகளில் வாழும் தமிழர்களும் பல்வேறு சிக்கல்களை சந்தித்துவரும் இவ்வேளையில், தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஒன்றுபட்டு நின்று போராடாவிட்டால், நம்மையும் காப்பாற்றிக்கொள்ள முடியாது, நம்மை நம்பியிருக்கிற உலகத் தமிழர்களையும் காக்க முடியாது. எனவே, தமிழ்நாட்டைப் பிரிக்கும் செயல் எந்த வடிவத்தில் வந்தாலும் அதை எதிர்த்துப் போராடத் தயாராகுமாறு அனைவரையும் வேண்டிக்கொள்கிறேன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications