அர்ஜுன் சம்பத் கட்சி போட்ட ஒரு டுவிட்.. குபீர்ன்னு கிளம்பிய "ஒன்றிய உயிரினங்கள்.." கலகல டுவிட்டர்
சென்னை: டுவிட்டர் தளத்தை இன்று பார்த்தால் மனிதர்கள் பெயருக்கு சமமாக விலங்குகள் பெயர்களாக வந்தன. ஓட்டேரி நரி மாதிரி.. டைனோசர் டயானா, மாடு மன்மதன், சிங்கம், புலி என இஷ்டத்திற்கு டுவிட்டர் பயனர்கள் ஹேண்டில் நேம் மாறிப்போயிருந்தது.
Recommended Video
என்னடா என்று விசாரித்து பார்த்தால் மேட்டரே வேறு.
மத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் அழைக்கத் தொடங்கியிருப்பது தெரிந்த விஷயம்தான். இதனால் பாஜக ஆதரவாளர்கள் கோபமடைந்துள்ளனர்.

தமிழ்நாடு, ஒன்றிய அரசு
இதே மாதிரித்தான் தமிழகம் என்று அழைக்க கூடாது, தமிழ்நாடுதான் சரியான வார்த்தை என்பதும், திமுகவினர் வாதமாக இருக்கிறது. இந்த கோபத்தில் இருந்ததாலோ என்னவோ, இந்து மக்கள் கட்சி சார்பிலான டுவிட்டர் பக்கத்தில், சமீபத்தில், ஒரு ட்வீட் வெளியானது. அதில், இவனுங்க பேசற பேச்ச பார்த்தா டைனோசர் கூட தமிழ்லதான் பேசிச்சின்னு சொல்லுவானுங்க போல இருக்கு.. என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

பொங்கிவிட்டார்கள்
தமிழை குறைத்து பேசினால் நம்மவர்கள் பொறுத்துக் கொள்வார்களா. இப்போ கட்சி பேதமில்லாமல் எல்லாரும் ஒரே அணியில் திரண்டு விட்டார்கள். பாஜக ஆதரவாளர்களை கேலி செய்யும் விதமாக, #ஒன்றியஉயிரினங்கள் என்ற பெயரில் டுவிட்டரில் ஹேஷ்டேக் போட்டு, டிரெண்ட் செய்து வருகிறார்கள். இந்திய ஒன்றியத்தில் உள்ள உயிரினங்கள் நாங்கள் என்பது இதற்கு அர்த்தமாம்.

ஜுராசிக் பார்க்
இந்தா கிளம்பிடுச்சில்ல, டைனோசர். ஜுராசிக் பார்க் மாதிரி, விலங்குகள் டுவிட்டர் தளத்திற்குள் புகுந்து விட்டன என்று தோன்ற வைக்கிறது இந்த ட்வீட்.

புது புது விலங்குகள்
இதோ தமிழ் பேசும், டார்டிகேட் எப்படி இருக்கும் என்று டிஆர்பி.ராஜா ட்வீட் செய்துள்ளார்.

ஸ்விகி நிறுவனத்திடம் ஆர்டர்
ஸ்விகி நிறுவனத்திடம் போய் ஹலோ சொல்ல, அவர்கள் என்ன வேணும்னு கேட்க, டைனோசர் சாப்பிடுற மாதிரி என்ன இருக்கு என கேட்டு இந்த நெட்டிசன் லொல்லு செய்துள்ளார்.

தமிழ் சுறா
நான்தான் தமிழ் பேசும் சுறா பேசுறேன்.. என்று என்ட்ரி கொடுக்கிறது இந்த ட்வீட்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications