ஈழத் தமிழ்ப் பெண்களை 'வேறு மாதிரி' சித்தரிக்கும் ஒற்றைப் பனைமரம் படம் ரிலீசானால்... சீமான் மிரட்டல்
சென்னை: ஈழத் தமிழ்ப் பெண்களை "ஒற்றைப் பனைமரம்" திரைப்படம் பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களாக சித்தரிப்பதாகவும் இந்த திரைப்படத்தை திரையிட மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்துள்ளன. ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்தை ஒற்றைப் பனைமரம் திரைப்படம் கொச்சைப்படுத்துகிறது என்கிற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.
இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை: ழத்தாயக விடுதலைப்போராட்டத்தை இழிவுபடுத்தும் விதமாக 'ஒற்றை பனைமரம்' திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.

தாய் மண்ணின் விடுதலைக்குப் போராடி தங்கள் இன்னுயிரை இழந்த மாவீரர்களின் ஈகத்தைக் கொச்சைப்படுத்தும் யாதொரு பொய்ப்பரப்புரையையும் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
ஈழத்தில் நடைபெற்றது வெறும் வன்முறை வெறியாட்டம் அல்ல; உலகத்தமிழர் உணர்வோடும், உயிரோடும் இரண்டற கலந்துவிட்ட விடுதலைப்போராட்டம். ஈழத்தில் வாழ்ந்த தொப்புள்கொடி உறவுகள் வன்முறையின் மீது தீராக்காதல் கொண்டு மனநோயாளிகள் போல ஒரே நாளில் ஆயுதப்போராட்டத்தில் ஈடுபடவில்லை.
இனவெறி சிங்களவர்களின் இனவழிப்பு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு, தமிழர் அடிப்படை உரிமைகள் அனைத்தும் மறுக்கப்பட்டு இனி தங்கள் தாய் மண்ணில் வாழவே முடியாது என்ற கொடுஞ்சூழல் ஏற்பட்ட பிறகு முதலில் தொடங்கப்பட்டது தந்தை செல்வா தலைமையில் அகிம்சை போராட்டம்தான். 30 ஆண்டுகாலம் இனவாத இலங்கை அரசின் கொடும் அடக்குமுறைகளால் ஒடுக்கப்பட்டு தோல்வியடைந்த பிறகு, வேறுவழியின்றிதான் தமிழினத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட ஆயுதப்போராட்டம் என்பது இனவெறி இலங்கை அரசால் தமிழர்களின் மேல் திணிப்பட்ட ஒன்றாகும். எதிரி எந்த மொழியில் பேசுகிறானோ அதே மொழியில் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தமிழர்கள் தள்ளப்பட்டனர் என்பதே வரலாற்றுப் பேருண்மை.
போராடினாலும் சாவோம்; போராடாவிட்டாலும் சாவோம்! ஆனால் போராடினால் ஒருவேளை வாழ்வதற்கு வாய்ப்பிருக்கிறது என்ற காரணத்தாலேயே அடிமை வாழ்வினை விட உரிமைச்சாவு மேலானது என்ற உன்னதக் கோட்பாட்டை ஏற்றே எம்மினச்சொந்தங்கள் ஈழத்தில் போராடி இன்னுயிரை ஈந்தனர்.
கடந்த 2009ஆம் ஆண்டு இருபது நாடுகள் கூடி தமிழீழத்தில் நிகழ்த்திய இனப்படுகொலைக்கு நீதி கேட்டு இன்றளவும் தமிழினம் போராடிக்கொண்டிருக்கும் வேளையில், மண் விடுதலைக்குப் போராடி வீரக்காவியங்களான மாவீரர்த்தெய்வங்களை இழிவுபடுத்தவோ அல்லது அவதூறு பரப்பவோ முயலும் எந்தவொரு படைப்பையும் தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது என எச்சரிக்கிறேன்.

ஆகவே, ஈழவிடுதலைப் போராட்டத்தை இழிவுபடுத்தும் 'ஒற்றை பனைமரம்' திரைப்படத்தை தமிழ் மண்ணில் திரையிடக்கூடாது என திரையரங்க உரிமையாளர்களுக்கு நாங்கள் அன்புடன் கோரிக்கை வைக்கிறோம். இத்திரைப்படத்தைத் திரையிடக்கூடாது என திரையரங்கங்களை முற்றுகையிட்டு போராடும் நிலைக்கு எங்களைத் தள்ளமாட்டீர்கள் என்று உறுதியாக நம்புகிறோம். மேலும், தமிழ்நாடு அரசு இதனை உடனடியாகக் கவனத்தில் எடுத்து, தேவையற்ற சட்டம்-ஒழுங்கு சீர்கெடாமல் இருப்பதற்கு இத்திரைப்படத்தை தமிழ்நாட்டில் திரையிடவிடாமல் தடுக்குமாறு இவ்வறிக்கையின் வாயிலாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை: ஈழத்தாயக விடுதலைப்போராட்டத்தை இழிவுபடுத்தும் விதமாக 'ஒற்றை பனைமரம்' திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.
தமிழீழப் போருக்குப் பின்பு ஈழத்தமிழர்களின் வாழ்வியல் முறையானது சிங்கள பௌத்த இனவாத அரசால்
எண்ணற்ற சிக்கல்களோடு தங்களது சொந்த நிலத்திலேயே நாலாந்தர குடிமக்களாக துயரத்தோடு வாழுகின்ற ஈழத்தமிழ்ச் சொந்தங்களை மேலும் காயப்படுத்தி, அவமதிக்கும் விதமாக அமைந்துள்ளது இத்திரைப்படம்.

போருக்குப் பின்னர் அங்குள்ள தமிழ்ப் பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டு பிழைப்பது போலவும், 50 வயது கடந்த ஒரு தமிழ்ப்பெண்ணை குடிகாரியாகவும்,பாலியல் வக்கிரமுள்ள பெண்ணாகவும் சித்தரித்து அக்கதைக்கு எவ்வித சம்பந்தமுமின்றி திரையில் உலவ விட்டிருக்கிறார். அயலகத்தில் குடிபெயர்ந்த தமிழர்களை பெண் பித்தர்களாக சித்தரித்து கொச்சைப்படுத்தியுள்ளார். ஆயுதப் போராட்டத்தை விடுத்து அரசியல் போராட்டமான அறிவாயுதப் போராட்டத்தைக் கையிலெடுத்துள்ள ஒவ்வொரு தமிழர்கள் நெஞ்சிலும் தமிழீழ விடுதலை நெருப்பு இன்றும் கனன்றுகொண்டுதான் உள்ளது.

ஆனால் சிங்களப் பேரினவாத அரசிற்கு அடிமையாகவே தமிழர்கள் வாழ வேண்டும் என்பதை இப்படத்தின் வாயிலாக வலிந்து திணிக்க முயற்சி செய்துள்ளார் இயக்குநர். போராட்டத்தால் நாடு நாசமாகும் என்பது போலவும்,
வரலாற்றுத் தவறிழைத்துவிட்டது போன்ற வசனங்களைப் புகுத்தி போராட்டத்தினையும்,போராளிகளையும் ஒட்டுமொத்தமாக கொச்சைப்படுத்தியுள்ளார்.
இந்திய திரைப்பட தணிக்கைக் குழு இதற்கு எவ்வித தயக்கமுமின்றி சான்றிதழ் வழங்கியுள்ளதென்பது தமிழர்களின் உணர்வினை அவமதிக்கும் செயலாகும். தமிழ்ச் சமூகத்தையும்,போராட்டத்தையும் கொச்சைப்படுத்தும் இத்திரைப்படத்தினை உடனடியாகத் தடைசெய்ய வேண்டும். தமிழர்களின் உணர்வுகளைக் காயப்படுத்திய இயக்குநர் புதியவன் இராசையாவிற்கும், இந்திய தணிக்கைக் குழுவினருக்கும் எனது வன்மையான கண்டனங்களை இதன் வாயிலாகப் பதிவு செய்கிறேன். இவ்வாறு வெற்றிக்குமரன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications