Tamil New Year Puthandu 2023 Wishes: தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள், மெசேஜ், கவிதைகள் இங்கே !!
சென்னை: மகிழ்ச்சி நிறைந்த மங்கலகரமான சோபகிருது தமிழ் புத்தாண்டு பிறந்துள்ளது. சித்திரையில் தொடங்கப்படும் பணிகள் வெற்றிகரமாக அமையும் என்பதே நம்பிக்கை. சோபகிருது தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நீங்கள் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு உங்களது வாழ்த்துக்களை தெரிவிக்க இங்கே உள்ள தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் மற்றும் புகைப்படங்கள், வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்கள் ஆகியவற்றை உபயோகித்து ஷேர் செய்யலாம்.
சித்திரை மாதம் பிறந்ததுமே இளவேனில்காலம் என்னும் வசந்த காலம் தொடங்குகிறது. வசந்த காலத்தில் மாமரங்களில் மாந்தளிர்களும், மலர்களும் பூத்துக் குலுங்கும். அச்சமயம் வேப்ப மரங்களில் வேப்பம் பூக்கள் பூத்துக் குலுங்கும். மனித வாழ்க்கை இனிப்பும், கசப்பும் கலந்தே இருக்கும் என்பதை எடுத்துக் காட்டும் அம்சமாக இது திகழ்கிறது. அந்த வகையில் சித்திரைத் திருநாள் நமக்கு வசந்தத்தை மட்டுமின்றி, வாழ்க்கை நெறிகளையும் போதிக்கும் பயனுள்ள திருவிழாவை மகிழ்ச்சியுடன் வரவேற்போம்.

மங்கலங்கள் நிறைந்த சோபகிருது..
மகிழ்ச்சி நிறையட்டும்..
புது மாற்றங்கள் மலரட்டும்
சோகங்கள் நீங்கி சந்தோஷங்கள் அதிகரிக்கட்டும்
இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

அன்பான வாழ்க்கை..
ஒற்றுமையான குடும்பம்..
நிம்மதியான வேலை..
ஆரோக்கியம் நீடித்திருக்க..
இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!!

சுபகிருது ஆண்டு
இனிய நினைவுகளுடன் கடந்தது..
இறைவனின் ஆசியுடன்
சோபகிருது புத்தாண்டு
இனிதே உதயமாகட்டும்..
அன்பும் மகிழ்ச்சியும் நிறைய
இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

சித்திரை 1 சிறப்புடன் பிறந்தது...
சிந்தனையில் தெளிவும்..
மனதில் ஒளியும்..
வாக்கில் இனிமையும்
எண்ணங்களில் நன்மையும்
மகிழ்ச்சி நிறைந்த சோபகிருது..
தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

உங்கள் வாழ்க்கையில் நல்லதே நடக்கும்..
நினைத்தது இனி நிறைவேறும்..
நிம்மதியும் சந்தோஷமும் நிறைந்த
பொற்காலம் பிறக்கட்டும்
இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
-
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications