தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் தமிழிலேயே அர்ச்சனை.. வேகம் காட்டும் அமைச்சர் சேகர் பாபு.. ஆலோசனை!
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட வேண்டும் என்பது தொடர்பாக நாளை மறுநாள் ஆலோசனை நடைபெற உள்ளது.
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் அமைச்சராக சேகர் பாபு பொறுப்பேற்றதில் இருந்தே முக்கியமான பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். கோவில்கள் சீரமைப்பு, நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை என்று சேகர் பாபு தொடர்ந்து முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

கோவில்
கோவில் சொத்துக்கள் அனைத்தும் இணைத்ததில் பதிவேற்றப்படும் என்று ஏற்கனவே சேகர் பாபு அறிவித்து இருந்தார். அதன்படியே கோயிகளுக்கு சொந்தமான 3,43,647 ஏக்கர் நிலங்கள் தொடர்பான விவரங்கள் இணையத்தில் பதிவேற்றப்பட்டது.

பதிவேற்றம்
அதன்பின் சாலிகிராமம், காந்தி நகர் பகுதியில் வடபழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான 5.5 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ.250 கோடி ஆகும். அமைச்சரின் முயற்சியால் இந்த நிலம் மீட்கப்பட்டது. இதேபோல் தமிழ்நாடு முழுக்க இருக்கும் கோவில் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

அர்ச்சகர்
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் திட்டம் விரிவாக்கப்படும். பயிற்சி பெற்ற அர்ச்சகர்கள் 100 நாட்களுக்குள் பணி நியமனம் செய்யப்படுவார்கள். இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று அமைச்சர் சேகர் பாபு குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட வேண்டும் என்பது தொடர்பாக நாளை மறுநாள் அமைச்சர் சேகர் ஆலோசனை நடத்த உள்ளார்.

ஆலோசனை
தமிழில் அர்ச்சனை செய்யும் நடைமுறை, அறங்காவலர்கள் நியமனம், இதற்கான தகுதிகள், கோவில்களை நிர்வகிக்கும் மாவட்ட அளவிலான குழுக்கள் உள்ளிட்ட விஷயங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தும் வகையில் இந்து சமய அறநிலையத்துறையின் அமைச்சர் சேகர் பாபு கூட்டம் நடத்த உள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications