Singer Shakti Shanmugaraja death: பிரபல ஆன்மீக பாடகர் சக்தி சண்முகராஜா காலமானார்! பக்தர்கள் சோகம்
சென்னை: பல்வேறு ஆன்மீக பாடல்களைப் பாடிய பிரபல பாடகர் சக்தி சண்முகராஜா (Spiritual Singer Shakti Shanmugaraja death) இன்று மாலை காலமானார். அவருக்கு வயது 73. வயது மூப்பு மற்றும் அது சார்ந்த உடல்நல பிரச்சினை காரணமாக அவதிப்பட்டு வந்த சக்தி சண்முகராஜா மாலை காலமானார்.
தமிழில் பல ஆன்மீக பாடல்களைப் பாடியவர் பாடகர் சக்தி சண்முகராஜா. குறிப்பாக இவர் பாடிய அம்மன் பாடல்களை மிகவும் புகழ் பெற்றவை. தமிழகத்தில் ஆடி மாதமே வந்தாலே இவரது பாடல்கள் தான் கிராமங்கள் முழுக்க ஒலிக்கும். அந்தளவுக்கு அம்மன் பாடல்களுக்குத் தனது குரல் மூலம் உயிர் கொடுத்திருப்பார்.

மலையனூரு அங்காளியே, வேப்பிலை நாயகி, ஆடி வரா ஓடி வரா என ஏகப்பட்ட ஆன்மீக பாடல்களை இவர் பாடியுள்ளார். சிறுவயதிலிருந்தே ஆன்மிகத்தில் ஈடுபட்டு, அம்மனை வழிப்பட்டு வந்தார்.
இந்தச் சூழலில், 73 வயதான வயது மூப்பு மற்றும் அது சார்ந்த உடல்நல பிரச்சினை காரணமாகச் சக்தி சண்முகராஜா இன்று மாலை காலமானார். அவருக்கு வயது 73. தண்டையார்பேட்டையில் உள்ள இல்லத்தில் வசித்து வந்த அவர் மாலை உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு காசிமேடு மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
ஆடி மாதம் வந்தாலே இவரது பாடல்கள் தான் ஒலிக்கும். அந்த ஆடி மாதத்திலேயே இவர் மறைவு, பக்தர்களுக்கு பெரும் சோகத்தையும் வலியையும் ஏற்படுத்துவதாக இருக்கிறது
-
Vaikasi Visagam: வைகாசி விசாகம் 2026! திருவண்ணாமலையில் இன்று கிரிவலம் செல்ல உகந்த நேரம் எது? -
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 87 பக்தர்கள் மயக்கம்.. பெரும் பரபரப்பு! -
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications