“தமிழ் என்று வந்துவிட்டால் நாம் அனைவரும் ஒரே குரலில் ஒலிக்க வேண்டும்”- சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி

Subscribe to Oneindia Tamil

சென்னை: "தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என்பது ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வு. தமிழ்த்தாய் வாழ்த்து வெறும் பாடல் மட்டும் அல்ல. தமிழ் என்பது வரும்போது நாம் அனைவரும் ஒரே குரலில் ஒலிக்க வேண்டும்" என்று தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் தருவதை கட்டாயமாக்கும் தீர்மானத்தின் போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 5ஆம் தேதி தொடங்கிய நிலையில், அன்றைய தினம் நிதி அமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதனைத்தொடர்ந்து, ஆகஸ்ட் 6 ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார்.

TN assembly vijay edappadi palaniswami

ஆகஸ்ட் 7ஆம் தேதி மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்டோருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு, பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது. அதனையடுத்து, 2 நாட்களுக்கு பிறகு திங்கட்கிழமையான இன்று, சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடியது.
இன்று, அரசுத் துறை, கல்வி நிறுவன நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை கட்டாயமாக்கும் வகையில், சட்டசபையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தின் மீது அனைவரும் ஆதரவு தர வேண்டும் என முதலமைச்சர் விஜய் கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து திமுக சார்பில் கோவி.செழியன் பேசினார். அதன்பிறகு அதிமுக சார்பில், சட்டமன்ற கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார். முதலமைச்சரின் தனித்தீர்மானத்தின் மீது உரையாற்றிய அதிமுக பொதுச் செயலாளர் எடிப்பாடி பழனிசாமி, தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்நாட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் முதலில் பாடப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, தனித்தீர்மானத்திற்கு அதிமுக சார்பாக ஆதரவு தெரிவிப்பதாக தெரிவித்தார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், " தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என்பது ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வாகும். தமிழ்த்தாய் வாழ்த்து வெறும் பாடல் மட்டும் அல்ல. தமிழ் என்று வரும் நேரத்தில் நாம் அனைவரும் ஒரே குரலில் ஒலிக்க வேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது யாருக்கும் எதிரானது அல்ல. தேசப்பற்றும் மொழிப்பற்றும் வேறு வேறானது அல்ல." எனப் பேசியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+