தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது காவல்துறை பதக்கங்கள் வழங்கும் நிகழ்ச்சி! முதல்வர் பங்கேற்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த சில நாட்களாக அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இறுதியாக பாடப்படுவதாக சர்ச்சை எழுந்த நிலையில், தற்போது தமிழ்த்தாய் வாழ்த்துடன் காவல்துறை பதக்கங்கள் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பாக செயல்பட்ட காவல் துறையினருக்கு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் பதக்கங்களை வழங்கி கவுரவித்துள்ளார்.

Tamil Thai Vazhthu

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில், 600 காவலர்களுக்கு முதல்வர் விஜய் பதக்கங்களை வழங்குகிறார். அதேபோல 42 காவல் நிலையங்களுக்கு புதிய ரோந்து வாகனங்களை வழங்குகிறார். நிகழ்ச்சிக்கு வந்த அவரை காவல்துறை அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் காவலர்களின் முழு அணிவகுப்பு மரியாதையை முதல்வர் ஏற்றுக்கொண்டார்.

  • இந்திய குடியரசுத் தலைவர் பதக்கங்கள்
  • மத்திய உள்துறை அமைச்சர் பதக்கங்கள்
  • தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்கள்

ஆகியவற்றை சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு முதலமைச்சர் விஜய் வழங்கினார். இதை தொடர்ந்து பதக்கம் வென்றவர்கள் குறித்து முதல்வர் உரையாற்றியதையடுத்து.. இறுதியாக தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு நிகழ்ச்சியின் போது, தமிழ்த்தாய் வாழ்த்து 3வதுதாக பாடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை எழுதியவரின் பெயரில் இயங்கி வரும் பல்கலைக்கழகத்தில், தமிழ்த்தாய் வாழ்த்து கடைசியாக பாடப்பட்டது ஏன்? என்று தவெக அரசுக்கு எதிராக.. எதிர்க்கட்சிகளும், தவெக அரசுக்கு ஆதரவளித்த கூட்டணி கட்சிகளும் கேள்விகளை எழுப்பியிருந்தனர்.

இந்த சலசலப்புகளுக்கு மத்தியில்தான், இன்று காவல்துறை பதக்கங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் முதன்மையாக பாடப்பட்டு.. பின்னர் நிகழ்ச்சி தொடங்கப்பட்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+