தூக்குதுரையை "அடிச்சு தூக்கிய" நெட்டிசன்கள்.. ப்பா போதும்.. "தல" அஜித்தை விடுங்க! - நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோலிவுட்டில் பிளாக்பஸ்டர் படங்களில் ஒன்றான விசுவாசம் படத்தில் வரும் தூக்கு துரையை நெட்டிசன்கள் கடந்த இரண்டு நாட்களாக அடிச்சு தூக்கிக்கொண்டு இருக்கிறார்கள்.. அஜித் ரசிகர்கள் ஒரு பக்கம் கொதிப்பில் இருக்க.. வரிசையாக தூக்குதுரையை வைத்து வீடியோக்கள் வெளியாகி வருகின்றன . அப்படி என்னதான் நடக்குது பேஸ்புக்கில்?

Recommended Video

    என்னைத் தேடி காதல் என்ற வார்த்தையனுப்பு.. தூக்குதுரை உடன் Sync செய்த நெட்டிஷன் - வீடியோ

    தமிழ்நாட்டில் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கலாச்சாரம் உச்சத்தில் இருக்கும். இப்போது நெட்டிசன்கள் இடையில் உச்சத்தில் இருக்கும் இரண்டு கலாச்சாரங்கள் என்றால்.. அது வைப் செய்வது.. டேங்க் செய்வது! என்னது வைப், டேங்கா? என்னங்க சொல்றீங்க.. புரியுற மாதிரி பேசுங்க என்று சில "பூமர்" காலத்து நபர்கள் கேட்பது புரிகிறது.

    டேங்க் என்றால்.. அனைத்தையும் வகை தொகை இல்லாமல் கலாய்ப்பது. ஆனால் சாதாரண முறையில் கலாய்க்காமல்.. கொஞ்சம் ஹை லெவலில்.. அதீத அர்த்தங்களுடன், முரட்டு தனமாக கலாய்ப்பது என்று வைத்துக்கொள்ளலாம்.

    வைப் செய்வது

    வைப் செய்வது


    சரி அது என்ன வைப் என்று கேட்கிறீர்களா? ஒரு விஷயத்தோடு vibrataion செட்டாகி அப்படியே அதை கொண்டாடுவது வைப் என்று அழைக்கப்படும். உதாரணமாக உங்களுக்கு அனிரூத் பிடிக்கும் என்றால்.. நீங்கள் அவரின் பாடல்களை கேட்டு ஆடுவது, இல்லை அவரின் பாடல்களை முணுமுணுப்பது கூட வைப்தான். இந்த வைப் கலாச்சாரம் தற்போது.. மன அழுத்தத்தில் மட்டையான நெட்டிசன்களுக்கு இடையில் குதூகலத்தை ஏற்படுத்த தொடங்கி உள்ளது.

     வைப் கலாச்சாரம்

    வைப் கலாச்சாரம்

    ஏதாவது ஒரு சினிமா காட்சியை, சண்டை காட்சியை, நடிகைகள் இண்ட்ரோவை எடுத்து அப்படியே அதற்கு பேக்கிரவுண்டில்.. ரகுமான் பாட்டையோ, ராஜா பாட்டியோ.. அனிரூத் பிஜிஎம்ஐயோ போட்டு வெளியிடுவதுதான் வைப் கலாச்சாரம். இதில் ஒரு ஐந்நூறு டஜன் வீடியோக்கள் இதுவரை இணையத்தில் வெளியாகி உள்ளன. சமயங்களில் இந்த வைப் கலாச்சாரத்தை வைத்து பலரை கிண்டல் செய்வதும், ஜாலியாக வீடியோ மீம் போடுவதும் கூட வைரலாகி வருகிறது. அந்த வைபில் தற்போது சிக்கி.. வைபவம் போல கிண்டல் செய்யப்பட்டு வருபவர்தான் நம்ம விசுவாசம் படத்தின் தூக்குத்தூரை.

    அஜித் படம்

    அஜித் படம்

    விசுவாசம் படத்தில் அடிச்சு தூக்கு பாடலில் அஜித் சும்மா கை, காலை ஆட்டி டருக்கு டக்கின.. டருக்கு டக்கின.. டருக்கு டக்கின.. டருக்கு டருக்கு என்று கெட்ட குத்து ஆட்டம் போட்டு இருப்பார். அவர் வெள்ளை வேட்டி சட்டையில் ஆடும் இந்த வீடியோதான் தற்போது பிரியாணி போட காத்திருந்த பாய் வீட்டு வாசலுக்கு மசாலாவோடு வந்த மலையாடு கணக்காக மாட்டி இருக்கிறது. ஆம் இந்த ஒரு வீடியோவை வைத்து கடந்த 2 நாட்களில் மட்டும் நெட்டிசன்கள் ஏகப்பட்ட எடிட்களை அள்ளி வீசி இருக்கிறார்கள்.

    எப்படி தொடங்கியது

    எப்படி தொடங்கியது

    இந்த வைப் தொடங்கியது எல்லாம் "என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு" பாடலில் இருந்துதான். ஆம் அஜித்தின் இந்த டான்ஸை அந்த பாடலோடு வைத்து நெட்டிசன் ஒருவர் வைப் செய்ய உடனே அது இணையம் முழுக்க தீயாக பரவியது. வரிசையாக பல நெட்டிசன்கள் இந்த டிரெண்டை பிடித்துக்கொண்டு வீடியோ போட தொடங்கினார்கள். நீல வானம் .. நீயும் நானும் பாடலுக்கு தூக்கு துரை ஆடும் வீடியோ என்று பல எடிட்கள் இந்த வீடியோவை வைத்து செய்யப்பட்டது.

    நெட்டிசன்கள் கிண்டல்

    நெட்டிசன்கள் கிண்டல்

    ஆயிரத்தில் ஒருவன் பிஜிஎம், ஹலமதி ஹபீபோ, இது மதுரைடா உன்னை மிரட்டும் டா., வாரான் வாரான் பூச்சாண்டி ரயிலு வண்டியிலே, குழந்தைகளின் உருளைக்கிழங்கு செல்லகுட்டி பாடல், தேவுடா தேவுடா பாடல், சுந்தரி கண்ணால் ஒரு சேதி பாடல் தொடங்கி சென்னையில் காலையில் குப்பை வண்டி அள்ளும் வண்டியில் ஓடும் நம்ம ஊரு சென்னை பாடலுக்கு கூட இந்த வீடியோவை எடிட் செய்து நெட்டிசன்கள் போட்டு வருகிறார்கள்.

    டிரெண்ட்

    டிரெண்ட்

    இதை ஒரே டிரெண்டாகவே மாற்றி வரிசையாக வீடியோக்களாக பேஸ்புக்கில் நெட்டிசன்கள் உருவாக்கி உள்ளனர். ஏகப்பட்ட வீடியோக்கள் வெளியான நிலையில் தற்போது அஜித் ரசிகர்கள் மத்தியில் இந்த டிரெண்ட் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. அதோடு அஜித் ரசிகர்களும் விஜயின் பழைய படங்களில் இருக்கும் டான்ஸ்களை எடுத்து கிண்டலாக வீடியோ எடிட் செய்து போட்டு வருகிறார்கள்.... போதும் போதும் இப்படியே பேசிகிட்டு இருந்தா என்ன பண்றது.. யார் பெருசுன்னு அடிச்சுக்காட்டு என்று சொல்வது போல இரண்டு தரப்பும் மாறி மாறி இணையத்தில் மோதி வருகிறார்கள்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+