பள்ளிக்கரணை வெள்ளத் தடுப்பு.. தென்சென்னை தொகுதி எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் வெளியிட்ட பதிவு
சென்னை: சமூக வலைதளங்களில் கடந்த ஒரு வாரமாகவே சாலை வசதிகள், சாக்கடை வசதிகள் சரியில்லை என கூறி, தென் சென்னை தொகுதி எம்பி தமிழச்சி தங்க பாண்டியனையும், சோழிங்கநல்லூர் தொகுதி எம்எல்எஏ அரவிந்த் ரமேஷையும் சமூக வலைதளங்களில் சிலர் கடுமையாக விமர்சித்து வந்தார்கள். இவர்களுடன் தவெக மற்றும் பாஜகவும் இணைந்து தங்கள் பங்கிற்கு விமர்சிக்க தொடங்கியது. இந்த சூழலில் பள்ளிக்கரணையில் தமிழச்சி தங்க பாண்டியன் எம்பியும், அரவிந்த் ரமேஷ் எம்எல்ஏவும் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
தமிழ்நாட்டில் ஒரு தொகுதியில் சாலை வசதி, குடிநீர் வசதி, சாக்கடை வசதி, மழைநீர் வடிகால் வசதி போன்றவை சரியில்லை என்றால், அந்தந்த மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சிகளை மக்கள் கேள்வி கேட்பார்கள். அவர்களும் சரி செய்து தருவார்கள். ஆனால் சோழிங்கநல்லூர் தொகுதியில் மட்டும் அது முற்றிலும் வித்தியசமாக இருந்து வருகிறது.

ஏனெனில் சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உள்பட்ட தென்சென்னை தொகுதி எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், சோழிங்கநல்லூர் தொகுதி எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் ஆகியோரை குறிவைத்து தான் விமர்சனங்களை பலர் எழுப்பி வருகிறார்கள்.. இன்னும் தெளிவாக சொல்வது என்றால், மற்ற எந்த எம்பி, எம்எல்ஏவையும் விட தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் அரவிந்த் ரமேஷ் ஆகியோர் சமூக வலைதளங்களில் குறிவைத்து அதிகம் விமர்சிக்கப்படுகிறார்கள். இதன் பின்னணியில் அரசியல் இருப்பதாக திமுகவினர் நம்புகிறார்கள்.
இந்த சூழலில் கடந்த ஒரு வாரமாகவே பள்ளிக்கரணை, மேடவாக்கம், துரைப்பாக்கம், பெரும்பாக்கம் பகுதியில் உள்ள மோசமான சாலைகள், குப்பைகள் நிறைந்த பகுதிகள், ஆகாயத்தாமரை நிறைந்த ஏரி, கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கும் சாலைகள், மழைநீர் வடிகால் பணிகள் நடக்கும் சாலைகளில், மழை நீர் தேங்கி நிற்பது தொடர்பான படங்கள், பல நாட்களாக நிறைவு பெறாத சாலை பணிகள் மற்றும் பள்ளம் நிறைந்த சாலைகள் என பல்வேறு படங்கள் பகிரப்படுகிறது.
தமிழக வெற்றிக்கழகத்தின்ர் இந்த புகைப்படங்களைஅதிக அளவில் பரப்பு அரசை கேள்வி கேட்டு வருகிறார்கள். அவர்களில் பலர் தென்சென்னை தொகுதி எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், சோழிங்கநல்லூர் தொகுதி எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் ஆகியோரை டேக் செய்தும் கேள்வி எழுப்புகிறார்கள். இதேபோல் அதிமுகவினரும் கேள்வி எழுப்பி வந்தார்கள். பாஜகவினரும் தங்கள் பங்குக்கு கேள்வி எழுப்ப ஆரம்பித்தார்கள். ஒரு கட்டத்தில் பள்ளிக்கரணை மற்றும் அதன சுற்றுவட்டாரங்கள் தொடர்பான புகைப்படங்களே இணையதளங்களை ஆக்கிரமித்தன.
இந்த நிலையில் சென்னை மாநகராட்சி உடனுக்குடன் குறை சொன்னவர்களுக்கு பதில் அளித்து நடவடிக்கை எடுத்தது. பல சாலைகள் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியும் தூர்வாரப்பட்டு, அந்த பகுதியில் 1000 அடி தண்ணீரை பள்ளிக்கரணை சதுப்பு நில ஏரிக்கு கொண்டு செல்லும் வகையில் கால்வாய் அமைத்து, அதனை வெளியேற்றும் வகையில் மதகும் அமைக்கப்பட்டது. அதனை அண்மையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
அதேபோல் பல்வேறு பகுதிகளில் வெள்ளத்தடுப்பு பணிகளும் நடந்து வருகின்றன . இதனை தென்சென்னை தொகுதி எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், சோழிங்கநல்லூர் தொகுதி எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் ஆகியோர் நேற்நறு ஆய்வு செய்தனர். இதுபற்றி தமிழச்சி தங்கபாண்டியன் நேற்று வெளியிட்ட பதிவில், சோழிங்கநல்லூர் - பள்ளிக்கரணை பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத் தடுப்பு மேம்பாட்டு பணிகளை அரவிந்த் ரமேஷ் , சென்னை மாநகராட்சி தெற்கு வட்டார துணை ஆணையர் திரு.அப்தாப் ரசூல் இ.ஆ.ப ஆகியோருடன் ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினேன்...ஆய்வின்போது, 14-வது மண்டலக்குழுத் தலைவர் - பகுதிச் செயலாளர் திரு.எஸ்.வி.ரவிச்சந்திரன், மாநகராட்சி அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், கலந்துகொண்டனர்"இவ்வாறு கூறியுள்ளார்.
-
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications