தமிழச்சி தங்கபாண்டியன் அழகோ அழகு.. அவருக்கு வாக்களியுங்கள்.. அட உதயநிதி பிரச்சாரத்தை பாருங்க!
திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் அழகானவர் அவருக்கு வாக்களிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலினின் மகன் நடிகர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்துள்ளார்.
சென்னை: திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் அழகானவர் அவருக்கு வாக்களிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலினின் மகன் நடிகர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்துள்ளார்.
தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதியின் திமுக வேட்பாளராக தமிழச்சி தங்கபாண்டியன் நிறுத்தப்பட்டு உள்ளார். இந்த நிலையில் இன்றில் இருந்து தமிழச்சி தங்கபாண்டியன் பிரச்சாரம் செய்து வருகிறார்.
தமிழச்சி தங்கபாண்டியனுக்கு வாக்கு கேட்டு திமுக தலைவர் மு.க ஸ்டாலினின் மகன் நடிகர் உதயநிதி ஸ்டாலின் இன்று பிரச்சாரம் செய்தார். தென் சென்னை பகுதியில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.

உதயநிதி ஸ்டாலின் பேச்சு
உதயநிதி ஸ்டாலின் தனது பிரச்சாரத்தில், திமுகவில் வாரிசு என்பதற்காக மட்டுமே யாருக்கும் தேர்தலில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. திமுகவில் அனைவருக்கும் தகுதி அடிப்படையில்தான் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. உழைப்பு மற்றும் கட்சி பணியை மனதில் வைத்தே வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

நான் வாரிசு
என்னை வாரிசு என்று கூறி விமர்சனம் செய்கிறார்கள். வாரிசு என்பதற்காக எனக்கு பதவி கொடுக்க மாட்டார்கள். என் பெயரில் விருப்பமனு அளிக்கப்பட்டது உண்மைதான். ஆனால் அதற்காக, என்னை நேர்காணலுக்கு அழைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

தொண்டர்களின் எழுச்சி
தொண்டர்களின் எழுச்சியை பார்க்கும் போதே தமிழச்சியின் வெற்றி உறுதியாகி இருக்கிறது. அழகான வேட்பாளர்களை வெற்றிபெற வையுங்கள். அழகான வேட்பாளரை பிரதிநிதியாக அனுப்பாமல் இருந்து விடாதீர்கள். அழகு என்பது தமிழ் மீது அவர் கொண்ட பற்றை சொல்கிறேன்.

அழகு
அவரின் பாசத்தை, மொழியை, அரசியல் அறிவை அழகு என்று குறிப்பிடுகிறேன். அவரை மக்கள் வெற்றிபெற செய்ய வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டார். உதயநிதி ஸ்டாலினின் பேச்சால் தமிழச்சி தங்கபாண்டியன் வெட்கத்தில் நெளிந்தார். இதையடுத்து தொண்டர்கள் கரகோஷம் எழுப்பினார்கள்.
-
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்!












Click it and Unblock the Notifications