விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக களம் இறங்கும் வேல்முருகனின் வாழ்வுரிமை கட்சி
சென்னை: இடைத்தேர்தல் நடைபெறவுள்ள விக்கிரவாண்டி தொகுதியில் திமுக கூட்டணியே வெற்றி வாகை சூடும் என்றும் திமுக வேட்பாளர்களின் வெற்றிக்குக் களப்பணியாற்றிடுவோம் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி அறிவித்துள்ளது.
வரும் அக்டோபர் 21ம் தேதி காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி, காமராஜர் நகர் (புதுச்சேரி) சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதில் திமுக கூட்டணியில் திமுக விக்கிரவாண்டி தொகுதியிலும், காங்கிரஸ் கட்சி நாங்குநேரி மற்றும் காமராஜர் நகர் தொகுதியிலும் (புதுச்சேரி போட்டியிடுகிறது. விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் நா. புகழேந்தி போட்டியிடுகிறார். இவருக்கு வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆதரவு அளித்துள்ளது
இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் "விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி காலியாகவுள்ள நிலையில் வரும் அக்டோபர் 21ந் தேதியன்று இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அத்தேர்தலில் தமிழகத்தின் எதிர்க்கட்சியான திமுகவின் தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் போட்டியிடவுள்ளன. கடந்த மக்களவைத் தேர்தலைப் போலவே இந்த முறையும் இடைத்தேர்தல்களிலும் திமுக வேட்பாளர்களின் வெற்றிக்குக் களப்பணியாற்றிடும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வன்னியர்கள் அதிகம் நிறைந்த விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுகவுக்கு பாமக ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், வேல்முருகனின் வாழ்வுரிமை கட்சி திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் களம் இறங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
-
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications