Vijay : மக்களுக்கு என்ன தேவையோ அதுதான் தேர்தல் அறிக்கை! தவெகவின் இணையதள தொடக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியல் களத்தில் அடியெடுத்து வைத்துள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தனது தேர்தல் அறிக்கையை பொதுமக்களின் பங்களிப்புடன் உருவாக்க அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

கட்சித் தலைவர் விஜய்யின் அறிவுறுத்தலின்படி, தேர்தல் அறிக்கை குறித்த யோசனைகளைப் பெற ஒரு தனி இணையதளத்தை தவெக இன்று முறையாகத் தொடங்கி வைத்துள்ளது.

Vijay

தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் தலைவர் அருண்ராஜ் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் இந்த இணையதளம் தொடங்கப்பட்டது. பொதுமக்கள் மட்டுமல்லாமல், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள், துறை சார்ந்த வல்லுநர்கள் என யார் வேண்டுமானாலும் தங்கள் பகுதியில் உள்ள பிரச்சனைகளையும் அதற்கான தீர்வுகளையும் இதில் நேரடியாகப் பதிவு செய்யலாம்.

12 பேர் கொண்ட குழு

இணையதளம் மூலம் பரிந்துரைகளைப் பெறுவதுடன், 12 பேர் கொண்ட ஒரு தயாரிப்புக் குழுவும் செயல்படும். இந்தக் குழு தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, வணிகச் சங்கங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் பல அமைப்புகளையும் நேரில் சந்தித்துக் கருத்துகளைச் சேகரிக்கும்.

தேர்தல் அறிக்கை

தவெகவின் தேர்தல் அறிக்கை மதச்சார்பின்மை, சமூக நீதி மற்றும் பின்தங்கிய மக்களின் வளர்ச்சி ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்படும் என திட்டக் குழு தெரிவித்துள்ளது. ஜாதி வாரியான கணக்கெடுப்பு, மாநில சுயாட்சி போன்ற முக்கிய அம்சங்கள் இதில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொள்கை அடிப்படை

மக்களுக்கான தேர்தல் அறிக்கை மக்களால் தீர்மானிக்கப்பட வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில், கிடைக்கும் பரிந்துரைகள் கவனமாக ஆராயப்பட்டு, கட்சியின் அடிப்படைப் பொருளாதார மற்றும் சமூகக் கொள்கைகளுடன் சேர்த்து தேர்தல் அறிக்கையில் இடம்பெறும்.

பொறுப்பாளர்கள்

தொகுதிகளுக்குப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தவெகவின் இந்த டிஜிட்டல் அணுகுமுறை மற்றக் கட்சிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. தவெகவின் தேர்தல் அறிக்கை என விஜய் ஏற்கெனவே காஞ்சிபுரம் கூட்டத்தில் அறிவித்திருந்தார்.

அதில் வீடுதோறும் மோட்டார் சைக்கிள், கார், வீடுதோறும் ஒரு பட்டதாரி இருக்க வேண்டும். தவெக ஆட்சிக்கு வந்தால் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும். வீட்டில் குறைந்தபட்சம் ஒருவருக்கு நிரந்தர வருமானம், அனைவருக்கும் நிரந்தரமான வீடு கட்டித் தரப்படும்.

கல்வியில் சீர்திருத்தம்

கல்வியில் சீர்திருத்தம், பருவமழையில் எதுவும் பாதிக்காமல் இருக்கும் வகையில் மேம்பாடு, மீனவர்கள், தொழிலாளர்கள், நெசவாளர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் கருத்து கேட்டு பாதுகாப்பு, வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படும். தொழில் வளர்ச்சியில் கவனம் இருக்கும். சட்டம் ஒழுங்கு கண்டிப்புடன், வலிமையாக இருக்கும். இதற்கான விரிவான திட்டங்கள் எல்லாம் எங்கள் தேர்தல் அறிக்கையில் இருக்கும் என விஜய் அறிவித்தார்.

234 தொகுதிகள்

திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் எல்லாம் குழுக்களை அமைத்து 234 தொகுதிகளுக்கும் சென்று அங்குள்ள மக்களை சந்தித்து தேர்தல் அறிக்கைகளை தயார் செய்வது வழக்கம். அந்த வகையில் தவெக லேட்டஸ்ட் மாடல் போல் இணையதளம் மூலம் மக்கள் கருத்தை அறிந்து தேர்தல் அறிக்கைகளை தயார் செய்கிறது.

அருண்ராஜ் உள்ளிட்ட அந்த 12 பேர் யார்?

இதை அருண்ராஜ் உள்ளிட்ட 12 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்து அதில் முக்கியமானதை தேர்தல் அறிக்கையில் கொண்டு வருவர் என தெரிகிறது. தமிழகத்திற்கு சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தவெக தனித்து போட்டியிடும் நிலையில் இவர்கள் தயாரிக்கும் தேர்தல் அறிக்கை ரியல் கதாநாயகனாக மாறுமா என்பதை பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+