இனிமே எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்.. ஒர்க் ஃப்ரம் களம்! விஜய் போட்ட பக்கா ப்ளான்.. ரெடியான தவெக!
சென்னை: தமிழக அரசியலில் புதிய வரவாய் கால் பதித்திருக்கும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு தயாராகி வருகிறார். இந்த மாதத்தின் இறுதியில் இருந்து தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மதுரை அல்லது கோவையிலிருந்து தனது சுற்றுப்பயணத்தை விஜய் தொடங்குகிறார் என்கின்றனர் தமிழக வெற்றிக் கழகத்தினர்.
தமிழக அரசியல் களம் 2026 தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. ஆளும் கட்சியான திமுக அசுரத்தனமான கூட்டணி பலத்துடன் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. ஆளும் கட்சி, கூட்டணி பலம் என பல்வேறு சாதக அம்சங்கள் திமுகவுக்கு இருக்கின்றன.
அதே நேரத்தில் அடுத்தடுத்து ஆட்சியை இழந்ததில்லை என்ற பெருமையை தக்க வைக்க எடப்பாடி பழனிச்சாமி தீவிரமாக காய் நகர்த்தி வருகிறார். தமிழகத்தை பொறுத்தவரை தற்போதைய சூழலில் தனித்துப் போட்டியிட்டு வெற்றி என்பது சாத்தியமில்லாத நிலையில், கூட்டணி அமைத்து தான் தேர்தலை சந்திக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டுள்ளார்.

பாஜக அதிமுக கூட்டணியில் இணைந்து இருக்கும் நிலையில் மேலும் சில கட்சிகளை இணைய வைக்கவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதற்காக பாமக, தேமுதிகவுடன் பேச்சு நடத்தி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதால் விஜய் அந்த கூட்டணிக்கு வர வாய்ப்பில்லை. மேலும் திமுகவுடன் கூட்டணியே இல்லை என விஜய் திட்டவட்டமாக சொல்லிவிட்டார். இதனால் 2026 தேர்தலில் திமுக, அதிமுக, நாம் தமிழர், தமிழக வெற்றி கழகம் என நான்கு முனை போட்டி நிலவ போவது கிட்டத்தட்ட உறுதியாக இருக்கிறது.
அதே நேரத்தில் அதிமுக, திமுக, நாம் தமிழர் மக்களை சந்தித்து வரும் நிலையில் விஜய் இன்னும் திருச்சியை தாண்டி கூட வரவில்லை. கோவையில் பூத் கமிட்டி ஏஜென்ட் ஆலோசனைக் கூட்டம், பரந்தூர் மக்கள் சந்திப்பு, ஆகியவற்றைத் தவிர விஜய் வேறு எதையும் செய்யவில்லை. சமீபத்தில் திண்டுக்கல்லில் நடைபெற்ற ஜனநாயகன் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக மதுரை விமான நிலையத்திலிருந்து திண்டுக்கல் சென்றார் விஜய். தொடர்ந்து சிவகங்கை அஜித்குமார் வீட்டுக்கும் சென்றிருந்தார். இவை தனிப்பட்ட பயணமாக கருதப்படும் நிலையில் தேர்தலுக்கு விஜய் என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
இந்த நிலையில் 2026 தேர்தலுக்கு முன்பாக மக்களை சந்திக்கும் விஜய், தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். கோவையில் பூத் கமிட்டி ஏஜென்ட் ஆலோசனை கூட்டம் நடைபெற்று முடிந்திருக்கும் நிலையில், திருச்சி, மதுரை, நெல்லை, சென்னை மண்டலங்களில் அடுத்தடுத்து ஆலோசனை கூட்டங்கள் நடைபெற இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் தொகுதி வாரியாகவும் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
முதற்கட்டமாக இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு கூட்டம் என்ற அடிப்படையில் விஜய் மக்கள் சந்திப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை பனையூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நிலையில் அதில் விஜயின் மக்கள் சந்திப்பு குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. விஜயின் மக்கள் சந்திப்பு குறித்த அறிவிப்பு இந்த மாத இறுதியில் இருக்கும் எனவும், அதற்காக தற்போதே தயாராக வேண்டும் என மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
மொத்தம் 130க்கும் மேற்பட்ட இடங்களில் விஜய் மக்கள் சந்திப்பு நடைபெற இருக்கிறது. அதை இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க வேண்டும் என விஜய் உத்தரவிட்டுள்ளாராம். ஜனவரி மாதத்திற்கு பிறகு தேர்தல் அறிவிக்கப்பட்டதும் பிரசாரம் மார்ச், ஏப்ரல் மாதங்களில் தனியாக மேற்கொள்ள விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒர்க் ஃப்ரம் ஹோம் அரசியல்வாதி என்ற விமர்சனத்தை தவிர்க்கவே தேர்தலுக்கு முன்பாக தமிழகம் முழுவதும் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
-
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
பரந்தூர் விமான நிலையம்.. களத்தில் இறங்கிய மத்திய அரசு.. விஜய்க்கு பெரும் சிக்கல்! -
ஜான் ஆரோக்கியசாமியின் டெல்லி லாபி.. திமுகவுக்கு தூதுவிட்ட சுனில்.. சபரீசனுக்கு வந்துச்சே கோபம் -
அடிதாங்க முடியல குருநாதா.. விஜய் டெல்லிக்கு போன நேரத்தில்! பனையூருக்கு எம்எல்ஏக்களை அழைத்த புஸ்ஸி! -
மாசம் ரூ.4000 கன்பார்ம்! சிங்கப்பெண் வந்தாச்சு.. விஜய் கையில் எடுக்கும் அடுத்த முக்கிய திட்டம்! -
பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. நீலாங்கரை இல்லத்தில் திரண்ட திரையுலகினர் -
பாஸ் ஆயிட்டாரா CM விஜய்? 1 மாத கால தவெக ஆட்சி எப்படி இருக்கு? 30 நாளில் திணறடித்த 4 அமைச்சர்கள் -
3 செய்தி சேனல்களை முடக்கி ஜனநாயகத்தின் குரலை முடக்குவதா? தவெக அரசுக்கு மத்திய அமைச்சர் கண்டனம் -
மோடி தலைமையில் நிதி ஆயோக் குழு கூட்டம் தொடங்கியது.. முதல்வர் விஜய் பங்கேற்றார்! அஜெண்டா என்ன? -
தொடங்கியது இடைத்தேர்தல் ஃபீவர்.. 5 தொகுதிகளுக்கு விரைவில் தேர்தல்.. தேர்தல் ஆணையம் போட்ட உத்தரவு! -
கே.என்.நேரு மீது FIR.. உள்ளே இழுக்கப்பட்ட உதயநிதி நண்பர் ரத்தீஷ்! விஜய் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை












Click it and Unblock the Notifications