ரஜினி, அஜித் ரசிகர்களையும் விடக்கூடாது.. விஜய் கையில் எடுக்கும் வியூகம்? ஆஹா! இது லிஸ்ட்லயே இல்லையே

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய், அடுத்தடுத்து அரசியல் வியூகங்களை வகுத்து வருகிறார். 2026 தேர்தலில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற வியூகத்துடன் கவனமாக காய் நகர்த்தி வரும் விஜய், தற்போது ரஜினி, அஜித் ரசிகர்களையும் விடக்கூடாது, அவர்களது வாக்குகளையும் பெறும் வகையில் வியூகம் வகுத்து வருவதாக கூறப்படுகிறது.

தென்னிந்திய திரையுலகில் டாப் நடிகராக இருப்பவர் விஜய். தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் தனது 69 வது படத்தில் நடித்து வரும் விஜய், தனது சினிமா வாழ்க்கைக்கு முழுக்கு போட்டுவிட்டு தீவிர அரசியலில் கால் பதித்துள்ளார். தற்போது நடித்து வரும் தளபதி 69 படம் தான் தனது சினிமா வாழ்க்கையில் கடைசி படம் எனவும் இனி முழு நேரசியலில் ஈடுபட உள்ளதாகவும் அறிவித்து இருக்கிறார்.

vijay tvk tamilaga vetri kazhagam

கடந்த பிப்ரவரி மாதம் கட்சியை தொடங்கிய விஜய், கடந்த மாதம் 27 ஆம் தேதி விக்கிரவாண்டியில் கட்சியின் முதல் மாநில மாநாட்டையும் வெற்றிகரமாக நடத்தி முடித்தார். முதல் மாநாட்டில் விஜய்யின் பேச்சு தமிழக அரசியலில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. கட்சியின் முதல் செயற்குகுழு கூட்டமும் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழகத்தில் ஆளும் திமுகவையும் மத்தியில் ஆளும் பாஜகவையும் விமர்சித்து தீர்மானம் போட்டார் விஜய். 2026 தேர்தலில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற வியூகத்துடன் கவனமாக காய் நகர்த்தி வருகிறார். வரும் டிசம்பர் மாத இறுதியில் இருந்து மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தவும், மாவட்டம் முதல் கிளை வரை நிர்வாகிகள நியமிக்கவும் கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளார். திரையுலக கவர்ச்சி இருப்பதால் விஜய்யின் பேச்சுக்களும், செயல்பாடுகளும் மக்களை எளிதில் சென்றடைகின்றன. விஜய்யை பொறுத்தவரை அனைத்து தரப்பினரின் ஆதரவையும் தனதாக்கிக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

அரசியல் கட்சி தலைவர்கள் மட்டும் இன்றி திரைத்துறையில் டாப் நடிகராக இருக்கும் ரஜினி, அஜித் ரசிகர்களின் வாக்குகளையும் தம் பக்கம் இழுக்க வியூகம் வகுத்து வருகிறாராம். இதற்காகத்தான் ரஜினி, அஜித் உள்ளிட்டோர்களையும் எந்த வகையிலும் சோஷியல் மீடியாக்களில் விமர்சனம் செய்ய வேண்டாம் என நிர்வாகிகளை அறிவுறுத்தியிருக்கிறாராம்.

ரஜினி, அஜித் படங்கள் வரும் போது விஜய் ரசிகர்களும், விஜய் படம் வரும் போது அஜித், ரஜினி ரசிகர்களும் சோஷியல் மீடியாக்களில் மோதிக்கொள்வதை பார்க்க முடியும். எனவே, இத்தகைய மோதல்களை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறாராம். விஜய் மாநாடு குறித்த கேள்விக்கு பதிலளித்த ரஜினிகாந்த், வெற்றிகரமாக மாநாட்டை விஜய் நடத்தியுள்ளதாகவும் அவருக்கு வாழ்த்துக்கள் என்றும் கூறினார்.

இதை தனது செயற்குழு கூட்டத்தில் விஜய் கூறி நெகிழ்ச்சி அடைந்ததாகவும் சொல்லப்படுகிறது. தற்போது நடித்து வரும் படத்தில், அனைத்து நடிகர்களின் ரசிகர்களின் மனங்களையும் வெல்லும் அளவுக்கு காட்சி அமைப்புகள் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த படம் வெளியாகும் போது தேர்தலும் ஏறத்தாழ நெருங்கிவிடும் என்பதால், அரசியல் பாதைக்கான முன்னோட்டமாக இந்த படம் இருக்கும் என சொல்கிறார்கள்.


சினிமாத்துறையில் தனக்கு போட்டியாளர்களாக இருப்பவர்களின் ரசிகர்களையும் கவரும் விதமாக விஜய் போடும் அரசியல் கணக்கு எந்த அளவுக்கு கைகூடும் என்பது வரும் நாட்களில்தான் தெரியும். முன்பு எம்ஜிஆர் பின்பற்றிய அதே பாணியை தான் தற்போது விஜய்யும் கையில் எடுத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறும் கருத்தாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+