அதிமுக வாக்கு வங்கியில்.. தமிழக வெற்றிக் கழகம் போடும் ஓட்டை.. கேம் சேஞ்சராக மாறும் விஜய்.. கணிப்பு!
சென்னை: தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் சென்னையில் உள்ள தொகுதிகளில் அதிமுகவின் வாக்குகளை பெரிய அளவில் தமிழக வெற்றிக் கழகம் கைப்பற்றும் என்று கணிப்பு ஒன்று தெரிவிக்கிறது. தமிழ்நாட்டில் தற்போது சட்டசபை தேர்தல் நடைபெற்றால், திமுக கூட்டணி 164 இடங்களில் வெற்றி பெறும் என அக்னி நியூஸ் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தக் கருத்துக் கணிப்பில் பங்கேற்ற 21,150 பேரின் கருத்துக்களின் அடிப்படையில் முடிவுகள் தொகுக்கப்பட்டுள்ளன. இந்தக் கணிப்பு அக்னி நியூஸ் சேனல் மூலம் எடுக்கப்பட்டது ஆகும். திமுக கூட்டணி 164 இடங்களில் வெற்றி பெறும் என்று கூறப்பட்டு உள்ளது.

அதிமுக கூட்டணி வெறும் 70 இடங்களை மட்டுமே பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. 2026-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தலில், அதிமுக மற்றும் அதன் தேசிய ஜனநாயகக் கூட்டணி பின்னடைவைச் சந்திக்கும் என கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது அந்த அரசியல் கட்சிகளுக்கு ஒரு எச்சரிக்கையாகும். முன்னதாக கடந்த லோக்சபா தேர்தலில் திமுக 39 இடங்களில் வெல்லும் என்று இந்த நிறுவனம் துல்லியமாக கணித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழக வெற்றிக்கழகம் அடித்து ஆடுது
இந்த சட்டசபை தேர்தலில் சென்னையில் உள்ள தொகுதிகளில் அதிமுகவின் வாக்குகளை பெரிய அளவில் தமிழக வெற்றிக் கழகம் கைப்பற்றும் என்று அந்த கணிப்பு தெரிவிக்கிறது. அதாவது 6-12 சதவிகித வாக்குகளை பல தொகுதிகளில் பெற்று அதிமுகவின் வாக்கு வங்கியில் தமிழக வெற்றிக் கழகம் ஓட்டை போடும் என்று கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மயிலாப்பூர்
திமுக கூட்டணி 43%
அதிமுக கூட்டணி 39%
தமிழக வெற்றிக் கழகம் 12%
நாம் தமிழர் 4%
மற்றவர்கள் 2%
பூந்தமல்லி
திமுக கூட்டணி 47%
அதிமுக கூட்டணி 35%
தமிழக வெற்றிக் கழகம் 10%
நாம் தமிழர் 5%
மற்றவர்கள் 3%
சைதாப்பேட்டை
திமுக கூட்டணி 42%
அதிமுக கூட்டணி 38%
தமிழக வெற்றிக் கழகம் 12%
நாம் தமிழர் 5%
மற்றவர்கள் 3%
தியாகராயநகர்
அதிமுக கூட்டணி 42%
திமுக கூட்டணி 40%
தமிழக வெற்றிக் கழகம் 12%
நாம் தமிழர் 4%
மற்றவர்கள் 2%
ஆயிரம் விளக்குகள்
திமுக கூட்டணி 45%
அதிமுக கூட்டணி 38%
தமிழக வெற்றிக் கழகம் 10%
நாம் தமிழர் 5%
மற்றவர்கள் 2%
விருகம்பாக்கம்
திமுக கூட்டணி 42%
அதிமுக கூட்டணி 38%
தமிழக வெற்றிக் கழகம் 12%
நாம் தமிழர் 5%
மற்றவர்கள் 3%
அண்ணா நகர்
திமுக கூட்டணி 46%
அதிமுக கூட்டணி 37%
தமிழக வெற்றிக் கழகம் 11%
நாம் தமிழர் 4%
மற்றவர்கள் 2%
துறைமுகம்
திமுக கூட்டணி 45%
அதிமுக கூட்டணி 39%
தமிழக வெற்றிக் கழகம் 10%
நாம் தமிழர் 4%
மற்றவர்கள் 2%
ராயபுரம்
திமுக கூட்டணி 44%
அதிமுக கூட்டணி 38%
தமிழக வெற்றிக் கழகம் 11%
நாம் தமிழர் 5%
மற்றவர்கள் 2%
எழும்பூர்
திமுக கூட்டணி 44%
அதிமுக கூட்டணி 39%
தமிழக வெற்றிக் கழகம் 11%
நாம் தமிழர் 4%
மற்றவை 2%
இந்தக் கருத்துக் கணிப்பில் பங்கேற்ற 21,150 பேரின் கருத்துக்களின் அடிப்படையில் முடிவுகள் தொகுக்கப்பட்டுள்ளன. இந்தக் கணிப்பு அக்னி நியூஸ் சேனல் மூலம் எடுக்கப்பட்டது ஆகும்.












Click it and Unblock the Notifications