அதிமுக கூட்டணிக்கு அச்சாரம் போட்ட விஜய்.. ஆனால் இது இடிக்குதே.. அப்போ மும்முனை போட்டி கன்பார்ம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொள்கை எதிரியான பாஜக, அரசியல் எதிரியான திமுக இரண்டும் தங்களின் எதிரி என்று விஜய் அடித்து கூறிவிட்டார். அதோடு பாஜக உடன் கூட்டணி கிடையாது என்றும் கூறிவிட்டார். இதனால் அவர் எங்கே அதிமுக பக்கம் செல்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் அதே சமயம் முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகம் எடுத்துள்ள முடிவு அதிமுகவிற்கு நெருடலாக மாறும் வாய்ப்புகள் உள்ளன.

பாஜகவுடன் கூட்டணி இல்லை

தவெக தலைமையில் அமையும் கூட்டணி திமுக, பாஜகவிற்கு எதிரானதாகத்தான் எப்போதும் இருக்கும். அதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. கொள்கை எதிரியான பா.ஜ.க-வுடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் என்றைக்கும் கூட்டணி கிடையாது; தமிழ்நாட்டின் தலைவர்களை வைத்து பா.ஜ.க அரசியல் செய்வதை ஏற்க முடியாது

vijay tamilaga vetri kazhagam

சுயநல அரசியல் லாபங்களுக்காக பா.ஜ.க-வுடன் கூடிக் குலைந்து கூட்டணி வைக்க த.வெ.க ஒன்றும் தி.மு.க-வோ, அ.தி.மு.க-வோ இல்லை. தவெக தலைமையில் அமையும் கூட்டணி எப்போதும் திமுக மற்றும்
பாஜகவிற்கு எதிரானதாகதான் இருக்கும்.

இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிக்கும் பாஜகவின் அரசின் செயலை தவெக ஏற்றுக் கொள்ளாது, கீழடி விவகாரத்தில் தமிழர்களின் உண்மையை மறைக்கும் பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கிறோம். தவெக கூட்டணி எப்போதும் திமுக, பாஜகவுக்கு எதிராகவே இருக்கும்; பாஜகவுடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கூட்டணி இல்லை. இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிக்கும் பாஜகவின் அரசின் செயலை தவெக ஏற்றுக் கொள்ளாது, என்று த.வெ.க தலைவர் விஜய் பேசி உள்ளார்.

அதிமுக என்ற வார்த்தையே இல்லை

இதில் ஒரு இடத்தில் கூட அதிமுக என்ற வார்த்தையே இல்லை. இதனால் அதிமுக - விஜய் கூட்டணி உருவாகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே ஒரு பக்கம் பாஜக - அதிமுக கூட்டணியில் தமிழக வெற்றிக் கழகம் இணையப் போவதாக தகவல்கள் வர தொடங்கி இருந்தன. இதற்கான பேச்சுவார்த்தைகளும் நடந்து வந்ததாக. ஆகஸ்ட் இறுதிக்குள் இதில் முடிவெடுக்க டெல்லி உத்தரவிட்டு உள்ளதாம். அதாவது ஆகஸ்ட் இறுதிக்குள் ஆம் - இல்லை என்று முடிவெடுக்க வேண்டும். ஏனென்றால் அப்போதுதான் களப்பணிகளை செய்ய முடியும் என்பதால் இந்த நாள் குறிக்கப்பட்டு உள்ளதாம்.

சமீபத்தில் எடப்பாடி - பாஜக நயினார் நாகேந்திரன் ஆகியோர் ஆலோசனை செய்தனர். அதில், திமுக ஆட்சியை வீழ்த்துவதற்காக ஒன்றிணைந்திருக்கிறோம். ஒத்த சிந்தனையுள்ளவர்கள் ஓரணியில் ஒன்றாகியிருக்கிறோம் என்பதை நாம் இணைந்து மக்கள் மத்தியில் முன்னெடுத்துச் செல்லவேண்டும். இருக்கிற 10 மாதங்களில் இதனை நாம் அழுத்தமாக செய்ய வேண்டும்.

விஜய் கட்சியை கூட்டணிக்குள் கொண்டு வர உங்கள் மேலிடம் எடுக்கும் முயற்சி எந்த அளவில் இருக்கிறது? என்று எடப்பாடி கேட்க, பாஜகவுக்கு தொடர்பில்லாத நபர்கள் மூலம் சில முயற்சி கள் எடுக்கப்பட்டன. அந்த முயற்சி அடுத்தக் கட்டத்துக்கு நகரவில்லை. தற்போது விஜய் பற்றி யோசிக்காமல் இருக்கின்றனர். நிச்சயம் அவரை நம் கூட்டணிக்குள் எங்கள் தேசிய தலைவர்கள் கொண்டு வந்துவிடுவார்கள் என நயினார் பகிர்ந்திருக்கிறார்.. அதோடு விஜய்க்கு 50 தொகுதிகளுக்கு மேல் தரப்படாதும் என்றெல்லாம் பேசி இருக்கிறார்கள்.

பாஜகவிற்கு நோ

ஆனால் இப்போது பாஜகவிற்கு விஜய் நோ சொல்லி உள்ளார். எனவே பாஜக லிஸ்டில் இல்லை. இதனால் ஒருவேளை பாஜக இல்லாத.. அதிமுக - விஜய் என்ற புதிய கூட்டணி உருவாகுமோ என்ற கேள்வி எழாமல் இல்லை. ஏனென்றால் அண்ணா, பெரியாரை விமர்சனம் செய்தது, முருகர் மாநாடு என்று பல விஷயங்களில் பாஜக - அதிமுக இடையே கருத்து வேறுபாடு உள்ளது.

இதனால் அதிமுக பாஜக கூட்டணியை உடைத்து தமிழக வெற்றிக் கழகம் உடன் கூட்டணி வைத்தாலும் வியப்பில்லை. ஆனால் இங்குதான் வேறு ஒரு சிக்கல் எழுந்துள்ளது. அதே சமயம் முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகம் எடுத்துள்ள முடிவு அதிமுகவிற்கு சிக்கலாக மாறும் வாய்ப்புகள் உள்ளன.

முதல்வர் வேட்பாளராக விஜய்

முன்னதாக தவெக செயற்குழு கூட்டத்தில் 2026 சட்டசபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக விஜய் அறிவிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் அதிமுக - பாஜகவின் கூட்டணி அழைப்பு நிராகரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மெகா கூட்டணி அமைக்க பாஜக திட்டமிட்டு வந்த நிலையில், அந்தக் கூட்டணியில் தவெக இணையாது எனத் தெரிகிறது. அதிமுக உடனும் இதனால் கூட்டணி அமைக்க வாய்ப்பு குறைவுதான் என்பதால் தமிழ்நாட்டில் மும்முனை போட்டி நடக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+