EXCLUSIVE: விஜய் இதை செய்ய தவறினால்.. பெரிய விலையை கொடுக்க நேரிடும்... தமிழருவி மணியன் எச்சரிக்கை
சென்னை: அதிமுக உடன் மற்ற எதிர்க்கட்சிகள் கூட்டணி சேர வேண்டும். தவெக உள்ளிட்ட கட்சிகள் இவர்களுடன் சேர வேண்டும். அப்போதுதான் திமுகவை வீழ்த்த முடியும். விஜய் இதை செய்ய தவறினால்.. பெரிய விலையை கொடுக்க நேரிடும். பாஜக உடன் சேரலாம்.. தவறில்லை. நான் சங்கிதான். பெரிய எதிரி திமுகவை வீழ்த்த சின்ன எதிரி அதிமுக உடன் விஜய் கைகோர்க்க வேண்டும் என்று மூத்த அரசியல்வாதி தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசியல், திமுக ஆட்சி, கூட்டணி பேச்சுவார்த்தைகள் , தமிழக வெற்றிக் கழக அரசியல் குறித்து மூத்த அரசியல்வாதி தமிழருவி மணியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

மோசமான திராவிட மாடல் அரசு
அவர் அளித்த சிறப்பு பேட்டியில், இன்று நடக்க கூடிய திராவிட மாடல் அரசு போல ஊழல் மலிந்த.. மோசமான.. மக்கள் விரோத அரசை நான் பார்த்ததே இல்லை. இவ்வளவு மோசமான அரசு அகல வேண்டும் என்று நினைக்கிறேன். இதுபோன்ற எல்லா துறைகளிலும் ஊழல் மலிந்து கிடைக்கும் அரசை நான் சந்தித்தது இல்லை. நடுநிலையாக நின்று பார்த்தால் தெரியும். அரசு சார்ந்த எல்லா துறையிலும் மோசமான ஊழல் இருப்பதை அறிய முடியும். இப்போது நடப்பது வெறும் போலீஸ் ராஜ்ஜியம்தான்.
போலீஸ் லாக் அப் மரணங்கள் அதிகரித்துவிட்டன. 24 லாக் அப் மரணங்கள் நடந்து உள்ளன. அஜித் குமாரின் மரண செய்தி வெளியே வந்துவிட்டது. மற்ற பல விஷயங்கள் வெளியே வரவில்லை. இதை மறைக்க வேண்டும் என்று திமுகவில் உள்ளவர்கள் 50 லட்சம் ரூபாய் வரை கட்டப்பஞ்சாயத்து பேசினார்கள். 24 மரணங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் சாரி சொல்லவில்லையே? அவர்களின் குடும்பங்களுக்கு ஸ்டாலின் என்ன உதவி செய்தார்? கொடுத்த வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றினாரா?
மகளிர் உரிமை தொகை
மகளிர் உரிமை எல்லாம் எந்த பணத்தில் கொடுக்கிறார்கள். யாரிடம் கேட்டு கொடுக்கிறார்கள். பெண்கள் இதை கேட்டார்களா? காமராஜரின் மதிய உணவு திட்டத்துடன் இதை தொடர்புபடுத்தி பேசுகிறார்கள். அது வேறு. அது இலவசம் இல்லை. அது மாணவர்கள் படிக்க வேண்டும் என்று கொடுத்தனர். அவர்கள் பசியாற வேண்டும் என்று கொடுத்தனர். அதை துல்லியமாக கணக்கு செய்து தொடங்கினர். இப்போது திட்டமே போடாமல் மகளிர் உரிமை தொகை திட்டத்தை தொடங்கி உள்ளனர். இவர்கள் அள்ளி விடுகிறார்கள். கடன் வாங்கினால் வாங்கிக்கொள்வோம் என்று செய்கிறார்கள்.

போதுமான அளவிற்கு அரசின் தவறை எதிர்க்கட்சிகள் மக்களிடம் கொண்டு செல்லவில்லை. எடப்பாடி மட்டுமல்ல யாரும் பெரிய அளவிற்கு திமுகவை எதிர்க்கவில்லை. திமுகவின் தவறுகளை சுட்டிக்காட்டவில்லை. கூட்டணி கட்சிகளும் திமுகவை எதிர்க்கவில்லை. இது தேர்தல் நேர கூட்டணி. மற்ற நேரங்களில் ஆட்சியை எதிர்க்க வேண்டும். ஆனால் இவர்கள் ஆட்சியை எதிர்க்காமல் அமைதியாக இருக்கிறார்கள். தேர்தல் ; இல்லாத நேரத்திலும் இவர்கள் கூட்டணி வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இது எனக்கு புரியவில்லை.
மாற்று அரசியல் - விஜய்
என்னுடைய பார்வை மாற்று அரசியல் வர வேண்டும். மக்கள் நலக்கூட்டணி திட்டம் வென்று இருந்தால்.. இப்போது மாற்ற கட்சிகளின் தேவையே இருந்திருக்காது. நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் போன்ற கட்சிகளின் தேவையே இருக்காது . ஒரு மோசமான எதிரியை வீழ்த்த வேண்டும் என்றால் அதைவிட குறைவாக ஒரு எதிரியை உடன் சேர்த்துக்கொள் என்று சாணக்கிய சாஸ்திரம் சொல்கிறது. திமுக என்ற பெரிய சக்தியை வீழ்த்த வேண்டும் என்றால்.. எதிரியை வீழ்த்த வேண்டும் என்றால்.. அதிமுக உடன் சேர வேண்டும்.
அதிமுக என்ற குறைவான எதிரியிடம் மற்ற எதிர்க்கட்சிகள் கூட்டணி சேர வேண்டும். தவெக உள்ளிட்ட கட்சிகள் இவர்களுடன் சேர வேண்டும். அப்போதுதான் திமுகவை வீழ்த்த முடியும். விஜய் இதை செய்ய தவறினால்.. பெரிய விலையை கொடுக்க நேரிடும். பாஜக உடன் சேரலாம் தவறில்லை. நான் சங்கிதான். பெரிய எதிரி திமுகவை வீழ்த்த சின்ன எதிரி அதிமுக உடன் விஜய் கைகோர்க்க வேண்டும். பாஜக என்பது தீண்டத்தகாத கட்சி இல்லை. இது திமுக, அதிமுக எதற்கும் தீண்ட தகாத கட்சி கிடையாது.
விஜய் வாக்கு சதவிகிதம்
இதை எல்லாம் நான் ஆய்வு செய்துவிட்டு சொல்கிறேன். திமுகவை முற்றிலுமாக வீழ்த்த இது போதாது. இருந்தாலும் தொடர்ந்து செய்ய வேண்டும். இப்போது கூட எதிரணியை வீழ்த்த வேண்டும் என்று என்னிடம் ஒருவர் பேசினார் . எப்படி வீழ்த்த வேண்டும் என்று பேசினார். எதிர்கட்சிகளை ஒன்றிணைக்க வேண்டும் என்று என்னிடம் பெரிய தலை ஒருவர் பேசினார். அவர் யார் என்று சொல்ல மாட்டேன்.
விஜய் பற்றி சந்தேகமே வேண்டாம். விஜய் முதல்வராக வர சாத்தியம் உண்டா என்று சமீபத்தில் பேசினேன். திமுக அனுதாபிகள் கூட அவருக்கு வாக்கு அளிப்பார்கள். அவர் முதல்வர் ஆவார் என்றும் சிலர் சொல்கிறார்கள். நான் தெளிவாக சொல்கிறேன். நான் தமிழ்நாடு முழுக்க பயணம் செய்தவன். என்னை பொறுத்தவரை விஜய்க்கு 20 சதவிகிதம் வாக்கு கிடைக்கும். நான் பார்த்தவரை சொல்கிறேன். 3வது அணியை உருவாக்க வேண்டும் என்றால் விஜய் தனியாக போக வேண்டும். விஜய் தனியாக அதிமுக இல்லாமல் 3வது அணி உருவாக்கி ஆட்சி செய்ய முடியுமா என்று பார்க்கலாம். காங்கிரஸ் விஜயுடன் இணைகிறது என்று வைக்கலாம்.
5 சதவிகிதம் காங்கிரஸ் வைத்துள்ளது என்று பார்த்தால் விஜய் - காங்கிரஸ் கூட்டணிக்கு 25 சதவிகிதம் வாக்கு வரும். ஏற்கனவே அதிமுக கூட்டணிக்கு பாமக இல்லாமல் 35 சதவிகிதம் இருக்கும். உபரிகள் எல்லாம் விஜய் பக்கம் வந்தால் கூட அவருக்கு 26- 27 சதவிகிதம்தான் வரும். விஜய்க்கு அதிமுகவை மீறிய வாக்கு வங்கி இல்லை. இதனால் விஜய் 3வது கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க முடியாது. திமுகவிற்கு எதிராக விஜய் மற்ற எதிரி கட்சிகளுடன் இணைய வேண்டும் என்று தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications