இது லிஸ்டுலேயே இல்லையே.. அவருக்கு போனை போடுங்க.. விஜய் பேசிய கால்.. ஆனால் நெகட்டிவாக வந்த பதில்!
சென்னை: தமிழ்நாட்டில் அரசியல் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரம் அடைந்து வருகின்றன. 3வது அணியை அமைப்பதற்கான பணிகளை விஜய் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில்தான் விஜய் முக்கியமான நபர் ஒருவருக்கு போன் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் விஜய்க்கு பின் ஆலோசகராக இருப்பது ஜான் ஆரோக்கியசாமி என்ற அரசியல் ஆலோசகர். விஜயின் அரசியல் பேச்சுக்கள், அவரின் நடவடிக்கைகள் தொடங்கி அவரின் உடை அனைத்திற்கும் பின் இருப்பது ஜான் ஆரோக்கியசாமிதான். விஜய் எடுக்கும் முடிவுகளுக்கு பின்னணியில் இருப்பது ஜான் ஆரோக்கியசாமி என்ற மாஸ்டர்மைண்ட்.

பாமகவிற்கு தேர்தல் பணிகளை செய்தார்
தமிழக அரசியலில் மீண்டும்.. நீண்ட நாட்களுக்கு பின் ஆக்டிவ் ஆகி இருக்கும் அரசியல் ஆலோசகர்தான் ஜான் ஆரோக்கியசாமி. திருச்சியை சேர்ந்த ஜான் ஆரோக்கியசாமி ஏற்கனவே பாமகவிற்கு தேர்தல் பணிகளை செய்துள்ளார்.
ஜான் ஆரோக்கியசாமி பாமகவின் பிரபலமான.. மாற்றம் முன்னேற்றம் அன்புமணி பிரச்சாரத்தை முன்னெடுத்தார். பாமக அந்த தேர்தலில் சறுக்கினாலும்.. ஜான் ஆரோக்கியசாமி முன்னெடுத்த அந்த பிரச்சாரம் இப்போதும் பிரபலம். வெளிநாடுகளில் பல நிறுவனங்களில் வேலை பார்த்த ஜான் ஆரோக்கியசாமி திருச்சிக்காரர்.
திராவிட கட்சிகளுக்கு மாற்றமாக பாமகவை அப்போது கொண்டு வந்த ஜான் ஆரோக்கியசாமி அதை பெரிய அளவில் டிரெண்ட் செய்தார். வடக்கிலும் கூட இவர் தேர்தல் பணிகளை செய்துள்ளார். மகாராஷ்டிராவில் தேர்தல் பணிகளை செய்த ஜான் ஆரோக்கியசாமி.. தேசியவாத காங்கிரஸ் அங்கே தேர்தலில் அதிக இடங்களை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.
தற்போது ஜான் ஆரோக்கியசாமிதான் விஜய்க்கு பின் இருக்கும் அந்த மாஸ்டர்மைண்ட். கட்சி பணிகளை புஸ்ஸி ஆனந்த்தும், ஆதவ் அர்ஜுனாவும் கவனித்தாலும்.. வியூக வகுப்புகளை கவனிப்பது என்னவோ ஜான் ஆரோக்கியசாமிதான் என்கிறார்கள்.
ஜான் ஆரோக்கியசாமி
இப்படிப்பட்ட நிலையில்தான ஜான் ஆரோக்கியசாமி மூலம் விஜய் முக்கியமான கூட்டணி பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தி உள்ளாராம். தமிழ்நாட்டில் அரசியல் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரம் அடைந்து வருகின்றன. 3வது அணியை அமைப்பதற்கான பணிகளை விஜய் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில்தான் விஜய் முக்கியமான நபர் ஒருவருக்கு போன் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஜான் ஆரோக்கியசாமி மூலம் விஜய் போன் செய்த நபர்.. பாமக அன்புமணி ராமதாஸ்.. சாரி அன்புமணி (ராமதாஸ்ன்னு சொன்ன ராமதாஸ் கோச்சிப்பார்). அன்புமணியிடம் அன்பாக பேசிய ஜான் - விஜய் டீம்.. உட்கட்சி பிரச்சனைகளை கேட்டறிந்தனர். விஜய் - அன்புமணி இரண்டு பேருக்குமே.. அவரவர் அப்பாக்களுடன் பெரிய நெருக்கம் இல்லாததால் என்னவோ.. இந்த போன் காலில் அவர்கள் நெருக்கம் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது.
இரண்டு தரப்பும் தமிழக அரசியல், திமுக செய்த தவறுகள், திமுகவை எதிர்க்க வேண்டிய விஷயங்கள் என்று பல விஷயங்கள் பற்றி ஒரே கருத்துடன் பேசி உள்ளனர். பல விஷயங்களில் இவர்களுக்குள் ஒற்றை கருத்து நிலவ இருக்கிறதாம். ஆனால் விஜய் கூட்டணி பற்றி பேசியதற்கு அன்புமணி பதில் சொல்லவில்லையாம். அதற்கு மட்டும் அப்படியே பட்டும் படாமல்.. மாம்பழம் போல அப்படியே வழுக்கி சென்றுவிட்டாராம் அன்புமணி..
ஓபிஎஸ் வராங்க.. டிடிவி தினகரன் வராங்க.. இன்னும் பல சொந்த பந்தங்கள் எல்லாம் வராங்க.. நீங்களும் வாங்களேன் என்று விஜய் நைசாக கேட்டதற்கு ஜனநாயகனுக்கு வேணும்னா வரேன் கூட்டணிக்கு எல்லாம் இப்போ வேண்டாம் என்று சொல்லாமல் சொல்லி நழுவி விட்டாராம் அன்புமணி! அப்போ இப்போதைக்கு "கச்சேரி" இல்லை என்று தளபதியும் சைலன்ட் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது!












Click it and Unblock the Notifications