"ஆபரேஷன் V".. விஜய் களமிறக்கும் பிரம்மாண்ட பிளான்.. உருவாகும் மெகா கூட்டணி? யார் வராங்க தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், நடிகர் விஜய் அவர்களின் தலைமையில் தமிழக வெற்றி கழகம் (த.வெ.க.) ஒரு பெரிய கூட்டணியை உருவாக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நடவடிக்கைகள் அரசியல் வட்டாரங்களில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

Edappadi Palaniswami

2026 சட்டமன்றத் தேர்தல்: தமிழக வெற்றி கழகத்தின் கூட்டணி முயற்சி

விஜய்யின் த.வெ.க., தி.மு.க.வின் வாக்கு வங்கிகளான சிறுபான்மையினர் மற்றும் நடுநிலை வாக்காளர்களைக் குறிவைத்து செயல்பட திட்டமிட்டுள்ளது. அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணிக்கு எதிராக உள்ள திமுக வாக்குகளைப் பிரித்து, த.வெ.க.வை ஒரு வலிமையான அரசியல் கட்சியாக உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தேர்தல்களில் வலுவான இடத்தை பிடிக்க முடியும் என அந்த கட்சி நம்புகிறது..

விஜய் தலைமையில் அ.தி.மு.க. இல்லாத ஒரு பெரிய கூட்டணியை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, ஓ. பன்னீர்செல்வம், அன்புமணி ராமதாஸ், டி.டி.வி. தினகரன், மற்றும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோரை ஒருங்கிணைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த முயற்சிகள் அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

கூட்டணியின் பின்னணி: அரசியல் வியூகங்களும் தாக்கங்களும்

டெல்லி வட்டாரங்களின் தகவல்படி, "ஆபரேஷன் V" என்ற பெயரில் ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை ஒரு மூத்த அரசியல் தலைவர் முன்னின்று மேற்கொண்டு வருகிறார். தி.மு.க.வின் சிறுபான்மையினர் ஆதரவைக் குறைக்கும் நோக்கில் இந்தக் கூட்டணி அமைக்கப்படுவதாக கூறப்படுகிறது. இது அரசியல் அரங்கில் பரபரப்பாக பேசப்படுகிறது.

அரசியல் விமர்சகர்களின் கருத்துப்படி, 2026 சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றி கழகம், ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகியவை கூட்டணி அமைப்பதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன. ஒருவேளை கூட்டணி அமைந்தால், தென் தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணிக்கு இது ஒரு பெரிய பின்னடைவாக இருக்கும். மேலும், சிறுபான்மையினரின் வாக்குகளைப் பெறுவதில் தி.மு.க. சிரமங்களை சந்திக்க நேரிடும்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் 18% வாக்குகள் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகியோரின் பங்களிப்பால் கிடைத்தன. இவர்கள் இருவரும் அ.தி.மு.க.-வை எதிர்த்து த.வெ.க.வுடன் இணைந்தால், முக்குலத்தோர் வாக்குகளை த.வெ.க.-வுக்கு மாற்ற முடியும். நடிகர் விஜய் சரியான தொகுதியைத் தேர்ந்தெடுத்தால் தென் தமிழகத்தில் வெற்றிபெற வாய்ப்புள்ளது. அதேபோல் விஜய் கிறிஸ்துவர் என்பதால் சிறுபான்மையினர் வாக்குகள் இங்கே அதிகம் செல்லலாம்.

தற்போது பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுக மற்றும் அதிமுக இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. இதனால், அவர்கள் பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறி விஜய்யுடன் இணையலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசியல் களம் மிகவும் சூடுபிடித்துள்ள நிலையில், கூட்டணி தொடர்பான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

விஜய் கூட்டணி திட்டம்

முக்கியமாக மேலூர் தொகுதியில் விஜய் இந்த கூட்டணிக்கு கீழ் போட்டியிடலாம் என்றும் கூறுகிறார்க்ள.. நாடார் சமூகத்தின் ஆதரவு இருந்தால் திருநெல்வேலியிலும் முயற்சி செய்யலாம். ஏற்கனவே பாமகவும் தமிழக வெற்றி கழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்ற பேச்சு நிலவுகிறது. ஆனால் அவர்களின் முதல் விருப்பம் அதிமுக தான். எடப்பாடி பழனிசாமி எந்த விலை கொடுத்தும் பாமகவை விட்டுக்கொடுக்க மாட்டார். ஏனெனில் சேலத்தில் மற்றும் சில வடமாவட்டங்களில் வெற்றி பெற அவருக்கு பாமகவின் ஆதரவு தேவை. எப்படியாவது அவர்களை கூட்டணியில் தக்க வைத்துக் கொள்வார்.

ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தினால், கூட்டணி மூன்றாம் இடத்தைப் பிடிப்பதை உறுதி செய்ய முடியும். அதே சமயம் கடுமையாக அதிமுகவின் வாக்கு வங்கியை உடைக்கவும் முடியும். எனவே, 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, த.வெ.க.வின் கூட்டணி உருவாக்கும் முயற்சி அரசியல் வட்டாரங்களில் முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. இதன் விளைவுகள் தேர்தல் முடிவுகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+