தேனாம்பேட்டையை திணறடித்த விஜய்.. மிகப்பெரிய ஆபிஸ் ரெடி.. தயாரான ஐடி விங் அலுவலகம்.. அடித்து ஆடுறாரே
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி இருக்கும் நடிகர் விஜய் மிகப்பெரிய ஐடி விங் அலுவலகத்தை திறக்க உள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் மிகப்பெரிய அளவில் ஐடி விங்கிற்காக அலுவலகம் திறக்கப்பட உள்ளது.
ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஸ்டைலில் விஜய் நடைபயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 2009ல் அப்பாவின் மரணத்திற்கு பின் ஜெகன் மோகன் ரெட்டியின் அரசியல் பாதாளத்தில் இருந்தது. அதன்பின் அவர் நடத்திய யாத்திரை.. அரசியல் செயல்பாடுகள் அவரின் வெற்றிக்கு காரணமாக இருந்தது. கிரவுண்டு பணிகளை செய்தது.. மக்களிடம் தொடர்ந்து நெருக்கமாக இருக்கும் வகையில் முடிவுகளை எடுத்தது.. திட்டமிட்டு ஒவ்வொரு நகர்வையும் மேற்கொண்டது என்று ஜெகன் மோகன் ரெட்டியின் அரசியல் பெரிய அளவில் கவனிக்கப்பட்டது.

அவரின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது ஜெகன் மோகனின் பாதயாத்திரைதான். அதை செய்ய காரணம் பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம்தான். அந்த நிறுவனத்தில் அப்போது திட்டங்களை வகுத்தது ஜான் ஆரோக்கியசாமிதான். இப்போது விஜய்க்கு பின்னணியில் இருக்கும் நபரும் ஜான் ஆரோக்கியசாமி என்ற மாஸ்டர்மைண்ட்தான். தமிழக அரசியலில் மீண்டும்.. நீண்ட நாட்களுக்கு பின் ஆக்டிவ் ஆகி இருக்கும் அரசியல் ஆலோசகர்தான் ஜான் ஆரோக்கியசாமி. திருச்சியை சேர்ந்த ஜான் ஆரோக்கியசாமி ஏற்கனவே பாமகவிற்கு தேர்தல் பணிகளை செய்துள்ளார்.
விஜய் யாத்திரை:
தற்போது விஜய்க்கு இவர்தான் தேர்தல் பணிகளை செய்கிறார். இதனால் ஜெகன் மோகனை போலவே நடிகர் விஜய் தமிழ்நாட்டில் நடைபயணம் தொடங்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வருகின்றன. ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஸ்டைலில் விஜய் நடைபயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
விஜயின் பேச்சு.. அவரின் வெள்ளை சட்டை, பிரவுன் பேண்ட் ஆகியவற்றை பார்த்தவர்களுக்கு இது எங்கேயோ பார்த்த ஸ்டைல் போல இருக்கிறதே என்று தோன்றலாம். அது வேறு யாருமல்ல.. ஆந்திர பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஸ்டைலைத்தான் விஜய் பின்பற்றுகிறார் என்ற வாதம் வைக்கப்பட்டு வருகிறது.
அவரை போலவே அடுத்த வருடம் விஜய் நடைபயணம் மேற்கொள்ள போவதாக தகவல்கள் வருகின்றன. தமிழ்நாட்டில் விஜய் பிரபலமாகி இருந்தாலும் விஜய் கட்சி பிரபலம் இல்லை . விஜய் கட்சிக்கு என்று வார்டு ரீதியாக நிர்வாகிகள் இல்லை.
TVK office. https://t.co/Uhygz02Tuw pic.twitter.com/JYbwhP1kJi
— Shankar (@Shankar018) July 10, 2025
இதை எல்லாம் உருவாக்க பல வருடங்கள் ஆகும். ஆனால் அதற்கு ஒரு ஷார்ட் கட் உள்ளது. அது நடைபயணம். இதற்காக நடைப்பயணத்தை மேற்கொள்ள விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டத்தில் ஆகஸ்ட் மாதம் மாநாடு நடத்தவும், செப்டம்பர் முதல் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விக்கிரவாண்டி மாநாட்டைப் போல் பிரம்மாண்டமாக அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொள்ளும் வகையில் மாநாடு நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தவெக தலைவர் விஜய் செப்டம்பர் மாதத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், அதனை தஞ்சாவூரில் இருந்து தொடங்க இருப்பது உறுதியாகியுள்ளது. டெல்டா பகுதியில் இளைஞர்கள் மற்றும் மகளிர் மத்தியில் தவெகவுக்கு மிகப்பெரிய ஆதரவு இருப்பதால், விஜய் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்கான தொடக்கமாகவும் இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், செப்டம்பர் மாதம் பெரியாரின் பிறந்தநாளான 17ஆம் தேதியன்று விஜய் சுற்றுப்பயணத்தை தொடங்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. தவெகவின் கொள்கைத் தலைவர்களில் பெரியாரும் ஒருவர். இதனால் கொள்கைத் தலைவரின் பிறந்தநாளன்று சுற்றுப்பயணத்தை தொடங்க விஜய் முடிவெடுத்துள்ளார்.
ஐடி விங்
நடைப்பயணத்திற்கு முன்னதாக தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி இருக்கும் நடிகர் விஜய் மிகப்பெரிய ஐடி விங் அலுவலகத்தை திறக்க உள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் மிகப்பெரிய அளவில் ஐடி விங்கிற்காக அலுவலகம் திறக்கப்பட உள்ளது.
நடைபயணம் மற்றும் தேர்தல் பணிகளை கவனிக்கும் விதமாக மிகப்பெரிய ஐடி விங் அலுவலகத்தை திறக்க விஜய் முடிவு செய்துள்ளார். தேனாம்பேட்டையில் அலுவலகம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு அங்கே அலங்கார பணிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications