தட்டி தூக்கும் தவெக.. முதல்வர் வேட்பாளர் விஜய்! எக்ஸ் தளத்தை தெறிக்கவிடும் நண்பா, நண்பிஸ்
சென்னை: தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நெருங்க இருக்கிறது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியிருக்கின்றன. இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் 'முதல்வர் வேட்பாளர் உங்கள் விஜய்' என்கிற பெயரில் பிரசாரம் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதற்காக சோஷியல் மீடியாக்களில் '#முதல்வர்வேட்பாளர்_விஜய்' எனும் ஹேஷ் டேக் தற்போது டிரண்ட் செய்யப்பட்டு வருகிறது.
குறிப்பாக x தளத்தில், இந்த ஹேஷ்டேக் தேசிய அளவில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. ஒவ்வொரு சட்டமன்ற தேர்தலுக்கும் ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகள் குறிப்பிட்ட வாசகத்தை 'தீம்' ஆக வைத்து தங்களை மக்கள் மத்தியில் பிரபலமாக்கிக்கொள்ளும்.

உதாரணமாக 'ஸ்டாலின்தான் வராரு விடியல் தர போறாரு', 'மாற்றம் முன்னேற்றம் அன்புமணி', 'வெற்றி நடைபோடும் தமிழகம்', 'தமிழர் உரிமை மீட்போம்; தமிழகம் காப்போம்' போன்ற முழக்கங்களை முன்வைத்திருந்தது. அந்த வகையில் தவெகவும் தங்களுக்கு என ஒரு முழக்கத்தை முன்வைத்திருக்கிறது. 'முதல்வர் வேட்பாளர் உங்கள் விஜய்' என்பதுதான் அந்த முழக்கம்.
நேற்று ஆதவ் அர்ஜுனா தலைமையில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில், இந்த முழக்கம் முன்வைக்கப்பட்டிருக்கிறது. இதனை அனைத்து மாவட்ட செயலாளர்களும் தாங்கள் அடிக்கும் போஸ்டர்கள், பேனர்கள், நோட்டீஸ்கள் உள்ளிட்டவற்றில் இந்த வாக்கியம் அச்சடிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இதன் மூலம் மக்கள் மத்தியில் விஜய்யை முதல்வர் வேட்பாளராக கொண்டு சேர்க்க முடியும் என்று கட்சி நம்பியிருக்கிறது. மட்டுமல்லாது இந்த உத்தரவு முக்கிய மெசேஜை பாஜக, அதிமுகவுக்கு கொடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.
அதாவது விஜய்யை இழுக்க அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் முயன்று வருவதாகவும், அவர்களுக்கு நோ சொல்ல, பாஜகவுடனும், அதனுடன் கூட்டணி வைத்திருக்கும் கட்சியுடனும் கூட்டணி கிடையாது என்பதை சொல்வதற்காகவும் இந்த மெசேஜ் என்று சொல்லப்படுகிறது.
விஜய் கட்சியை தொடங்கும்போது பாஜகவை கொள்கை எதிரி என்று குறிப்பிட்டாரே தவிர, பாஜகவுக்கு எதிராக பெரிய அளவில் பேசவில்லை. தவெக தமிழக அரசுக்கு எதிராக தீவிரமாக பணியாற்றும் என்பது அப்போதே தெரிய வந்ததாக பலரும் கூறியிருந்தனர். அதேபோல தவெக ஒன்றும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு சிறப்பான செயல் திட்டங்களையோ, கொள்கைகளையோ கொண்டிருக்கவில்லை என்றும் விமர்சனங்கள் எழுந்திருந்தன.
இருப்பினும் தவெக சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு குவியும் ஆட்களை பார்த்தால், ஆளும் கட்சிக்கு கடுமையான சவாலை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. இப்படி இருக்கையில்தான் தவெக தேர்தல் முழக்கத்தை முன்னெடுத்து சென்றிருக்கிறது.
-
ஆதவ் அர்ஜுனா சொன்னது நடக்குதா? ஈபிஎஸ் தலையில் இடிப்போல் இறங்கிய செய்தி.. அதிமுக எதிர்காலம்? -
விஜய் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றல.. எல்லாம் போச்சு.. அப்செட்டில் இருக்கும் அதிமுக புள்ளிகள்! -
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
தற்குறி கூட்டம், கவர்ச்சி கூட்டம்.. எல்லாத்துக்குமே திமுக காரணமா.. சென்னை மேயர் பிரியா கேள்வி -
குதிரை பேரமல்ல! யானை பேரம்! தவெகவில் அதிமுகவினர் இணைவதற்கு இபிஎஸ்தான் காரணம்! ஆதவ் அட்டாக் -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
விஜய் வென்றதும் மக்கள் மீது திடீர் பாசமா? லதா ரஜினிகாந்தின் புதிய இயக்கத்தை சீண்டிய ப்ளூ சட்டை மாறன் -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
தவெகவில் இணைந்த 5 மாஜி அமைச்சர்கள், 7 Ex MLAs! இதுவரை அதிமுகவில் இருந்து விலகியவர்கள் யார் யார்? -
ஒவ்வொரு அமைச்சருக்கும் டார்கெட் நிர்ணயித்த முதல்வர் விஜய்.. கேபினட் மீட்டிங் பற்றி நிர்மல் விளக்கம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விஜய் போல ரஜினியை ஃபாலோ பண்ணும் முதல்வர் மகன் சஞ்சய்.. பாடல் வரிகளில் பஞ்ச் கவனித்தீர்களா?












Click it and Unblock the Notifications