தமிழன்..திரையில் சொன்னதை தரையில் செய்யும் விஜய்.! வக்கீல் வீடு தேடி வருவாங்களே! தட்டி தூக்கும் தவெக!
சென்னை: சினிமாவில் இயக்குனரின் மகன் என்று அடையாளத்தோடு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகர் விஜய், தற்போது தளபதி விஜய் என்ற மாபெரும் அடையாளத்தோடு தமிழக அரசியலில் கால் பதித்திருக்கிறார். தமிழக வெற்றிக் கழகத்தின் மூலம் 2026 சட்டமன்ற தேர்தலில் சந்திக்கப் போகும் விஜய் தற்போது புதிய திட்டம் ஒன்றை மக்களுக்காக தீட்டி இருக்கிறார். அது ஏற்கனவே அவர் திரைப்படத்தில் சொன்னது தான்? அது என்ன? என விரிவாக பார்க்கலாம்..
இன்றைக்கு தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் விஜய். நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் தனது தந்தை சந்திரசேகரால் நாயகனாக அறிமுகப்படுத்தப்பட்ட விஜய், ஆரம்பத்தில் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டி இருந்தது.

இரட்டை அர்த்த வசனங்கள், ஆபாச நடனம் என மேக்கிங்கிலும், நடிப்பு வரவில்லை இதெல்லாம் ஒரு முகமா என எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தாலும் அதற்கு பிறகு தனது கடின உழைப்பால் நாயகன் இடத்திற்கு உயர்ந்தார்.
நடிகர் விஜய்: காதல் காமெடி ஆக்சன் என பல்வேறு தரப்புகளிலும் கலந்து கட்டி அடித்து தற்போதைய சூழலில் நம்பர் ஒன் நாயகனாக விஜய் தான் இருக்கிறார் என அடித்துச் சொல்கின்றனர் திரையுலகினர். காரணம் விஜய் படம் அறிவிப்பு வெளிவந்தாலே கோடிக்கணக்கில் வியாபாரம் நடக்கும் என்பது தான். திரையுலகிலும் சரி பொதுவாழ்விலும் சரி விஜய் எப்போதுமே மிகவும் கவனமாக செயல்பட்டு முடிவெடுக்க கூடியவர் அப்படித்தான் அவரது அரசியல் பயணமும் அமைந்திருக்கிறது.
அரசியல் ஈடுபாடு: ரசிகர் மன்றங்கள் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வந்த விஜய் அதன் பிறகு சமூக அக்கறை உள்ள விஷயங்களிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். மீனவர் பிரச்சனை, இலங்கை தமிழர் விவகாரம் உள்ளிட்ட பிரச்சனைகள் எழுந்து போதெல்லாம் விஜய் உண்ணாவிரதம் போராட்டங்களை அறிவித்து தானும் பங்கெடுத்தார். அதிலிருந்து இளைஞர்களின் ஆதரவு விஜய்க்கு அதிகரிக்க தொடங்கியது.
மக்கள் இயக்கம்: இதை அடுத்து தனது ரசிகர் மன்றங்களை விஜய், விஜய் மக்கள் இயக்கமாக மாற்றி அரசியல் கட்சி தொடங்கப் போவதாக சூசகமாக அறிவித்தார். அரசியலுக்கு ஏனோதானோ என்று வரக்கூடாது என தீர்க்கமாக இருந்த விஜய் தான் நற்பணி இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றுவதற்கான முன்னெடுப்புகளை தொடர்ந்து செய்து வந்தார்.
தமிழக வெற்றிக் கழகம்: மாநில நிர்வாகிகள் நியமனம் மாவட்ட தலைவர்கள் நியமனம் அடிக்கடி ஆலோசனை மாணவர்களுக்கு திட்ட உதவிகள் வழங்குவது என தொடர்ந்து திட்டமிட்டு தனது அரசியல் பயணத்தை தொடங்கிய விஜய் ஒரு வழியாக கட்சி பெயரையும் அறிவித்தார். 'தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் நடிகர் விஜய், புதிய கட்சி தொடங்கியுள்ளார்.
2024 மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை. இத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று தெரிவித்துள்ள விஜய், 2026 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதுதான் இலக்கு என்று அறிவித்துள்ளார்.
மாணவர்களுடன் சந்திப்பு: இப்போது கோட் படத்தின் போஸ்ட் ப்ரொடக்சன் பணிகளில் தீவிரம் காட்டி வரும் விஜய் தனது அடுத்த திரைப்படத்தில் நடிப்பதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறார். இந்த இரு திரைப்படங்களும் முடிவடைந்த பின்னர் தான் அவரது முழு அரசியல் பயணம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தற்போது பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கும் நிலையில் கடந்த ஆண்டு போலவே மாணவர்களை நேரில் வரவழைத்து அவர்களுக்கு பரிசு வழங்க விஜய் திட்டமிட்டு இருக்கிறார்.
நிர்வாகிகள் ஏற்பாடு: இதை அடுத்து தொகுதி வாரியாக முதல் மூன்று மதிப்பெண்களை பெற்ற மாணவ மாணவிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு பிரியாணி விருந்து உடன் பரிசு வழங்க திட்டமிட்டு இருக்கிறார் நடிகர் விஜய். இதற்கான ஏற்பாடுகளை விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஏற்கனவே செய்து வருகின்றனர்.
விரைவில் அந்த நிகழ்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மக்களுக்காக மற்றொரு புதிய திட்டத்தை கையில் எடுத்திருக்கிறார் விஜய். ஏற்கனவே விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் படிப்பகங்கள் சட்ட உதவி மையங்கள் செயல்பட்டு வருகிறது.
வழக்கறிஞர்கள்: இதற்கிடையே ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் காவல் நிலையத்திற்கு இரண்டு வழக்கறிஞர்கள் என பொதுமக்களுக்கு வழக்கறிஞர் சேவையை வழங்க நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளார். மாவட்ட அளவில் அனைத்து மாவட்டங்களிலும் 10 சிறந்த வழக்கறிஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களை கட்சி சார்பில் மக்களுக்கு இலவச சட்ட உதவி வழங்க திட்டமிட்டு இருக்கிறார்.
சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டு இருக்கும் நிலையில் அடுத்ததாக ஒரு காவல் நிலையத்திற்கு இரண்டு விஜய் வெற்றிக் கழக வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட இருக்கிறார்கள்.
மக்களுக்கு உதவி: கட்சி பிரச்சனை மட்டுமல்லாது மக்களுக்கு செய்யவும் சட்ட உதவி வழங்கவும் திட்டமிடப்பட்டிருக்கிறது ஏழை எளிய வசதி வாய்ப்பு இல்லாத பொதுமக்கள் தமிழக வெற்றிக்கழக வழக்கறிஞர்களை அணுகும் போது அவர்கள் சட்ட உதவிகளை வழங்குவார்கள். இதற்கிடையே வழக்கறிஞர்கள் நியமனம் இந்த வாரத்திற்குள் நிறைவடையும் எனவும் அவர்களை அழைத்து ஆலோசனை நடத்திய பின் வழக்கறிஞர் பட்டியல் வெளியாகும் என்கின்றனர் தமிழக வெற்றி கழகத்தினர். தமிழன் படத்தில் சொன்னதை செய்துள்ளார் என்கின்றனர் விஜய் ரசிகர்கள்.
-
‘நம்மை புறக்கணித்தவர்களை நாம் புறக்கணிப்போம்’ கிருஷ்ணசாமி அதிரடி அறிவிப்பு., கிலியில் எடப்பாடி -
என்னங்க சொல்றீங்க? அப்போ எல்லா கணக்கும் தப்பா போகுதா? ஷாக்கான விஜய்.. காரணமான அந்த ரிப்போர்ட் -
164 தொகுதிகளில் களமிறங்கும் திமுக! வேட்பாளர்கள் யார்? மாலையில் அறிவிக்கும் ஸ்டாலின்? -
“வருத்தத்தில் இருக்கிறேனா? வதந்தியை பரப்பாதீங்க.. நம்பிக்கை இருக்கு!” - சீனுக்குள் வந்த கவுதமி -
அறிவாலயம் vs சத்தியமூர்த்தி பவன்.. ராகுல் மீது கடும் கோபத்தில் ஸ்டாலின்.. வெடித்தது யுத்தம்? -
வடக்கில் தொடங்கும் விஜய்.. பெரம்பூரில் மாஸ் காட்ட பலே ப்ளான்! 2026ல் கைகொடுக்குமா? திடீர் கோரிக்கை! -
தலைமை செயலகத்திற்கு திடீர் விசிட் வந்த செங்கோட்டையன்.. தேர்தல் அதிகாரியிடம் மனு -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
அதிமுகவில் 5 தொகுதிகள் தருவதாக சொல்லிவிட்டு பின்னர் மறுத்துவிட்டனர் - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு! -
SV Shekher: 'புதருக்கு பின்னால் ஏன் அந்த பொண்ணு போகணும்' சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார் எஸ்வி சேகர் -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications