Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேட்டி வேணாம்.. வெள்ளை சட்டையே போதும்! மாஜி முதலமைச்சரை ஃபாலோ செய்யும் தவெக விஜய்! யார் அது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றி கழகத்தின் செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றிருக்கிறது, மாநாட்டுக்கு எதிர்வினையாற்றிய கட்சிகள் தற்போது செயற்குழுவை பற்றி பேசவில்லை, இந்த நிலையில் கொடி அறிமுகம் தொடங்கி செயற்குழு கூட்டம் வரை விஜய் ஒரே மாதிரியான டிரஸ் கோடை ஃபாலோ செய்து வருகிறார். இது முன்னாள் முதலமைச்சர் ஒருவரின் காப்பி என்கின்றனர்.

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி-சாலை பகுதியில் வெற்றிகரமாக நடைபெற்றது. இதனால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய்.

vijay tamilaga vettri kazhagam chennai

அடுத்ததாக எச்.வினோத் இயக்கத்தில் அவர் நடிக்க இருக்கும் படத்தின் பூஜை நடந்து முடிந்திருக்கும் நிலையில் படம் தொடர்பான வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் அரசியலில் முழுமூச்சாக இறங்கி வேலை பார்க்க விஜய் தயாராகி வருகிறார்.

இந்த நிலையில் விஜயின் மாநாட்டை தொடர்ந்து சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் அலுவலகத்தில் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. விஜய் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாவட்ட தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், மாநாட்டு பொறுப்பாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி தொடங்கியவுடன் மாநாட்டிற்கு வரும் வழியில் உயிரிழந்த தொண்டர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மாநாட்டில் சிறப்பாக பணியாற்றிய நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவித்த விஜய் யாரையும் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்யக்கூடாது, யாரையும் தாக்கி பேசக்கூடாது, கண்ணியத்துடன் பதில் அளிக்க வேண்டும் என கூறியதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து கட்சியின் அடுத்தகட்ட தலைவர்கள், மாவட்ட தலைவர்கள், புதிய நிர்வாகிகளின் பட்டியல் விரைவில் வெளியிடப்பட இருப்பதாகவும் அதன் பிறகு பொதுக்குழு கூட்டம் மக்கள் சந்திப்பு என பிசியாக இருந்தாலும் கட்சியை கவனிக்க வேண்டியது அவசியம், குடும்பத்தினரையும் கவனிக்க வேண்டியது அவசியம் என விஜய் அறிவுரை கூறியதாக கூறப்படுகிறது.

இது ஒரு புறம் இருக்க விஜய் டிரஸ் கோட் குறித்து தொடர்ந்து பேசி வருகின்றனர் அவரது கட்சியினர். பொதுவாக அரசியல் கட்சித் தலைவர்கள் எப்போதுமே தமிழகத்தில் வெள்ளை வேட்டி சட்டையுடன் காட்சியளிப்பது. வழக்கம் அண்ணா தொடங்கி கலைஞர், எம்ஜிஆர், விஜயகாந்த் என சினிமா உலகில் இருந்து யார் அரசியலுக்கு வந்தாலும் வெள்ளை வேட்டி சட்டையுடன் தான் காட்சியளிப்பார்கள். ஆனால்

மாநாட்டிலும் சரி அதற்கு முந்தைய பிந்தைய கட்சி நிகழ்ச்சிகளிலும் சரி விஜய் சிம்பிளாக பேண்ட் சர்ட் அணிந்தே காணப்பட்டார். வெள்ளை வேட்டி சட்டை தான் தமிழக அரசியலின் அடையாளம். அது பிரிக்க முடியாத ஒரு சென்டிமெண்டாக இருந்தது. ஆனால் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயோ எப்போதும் வெள்ளை நிற சட்டை சந்தன கலர் பேண்ட் அணிந்து கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை பனையூரில் நடைபெற்ற கட்சி கொடி அறிமுக நிகழ்ச்சி, விழுப்புரம் மாநாடு, சென்னை செயற்குழு கூட்டம் என அனைத்து நிகழ்ச்சிகளிலும் ஒரே நிற ஆடையே விஜய் அணிந்து இருந்தார். இதை அடுத்து இந்த புகைப்படங்களை ஒன்றாக சேர்த்து நெட்டிசன்கள் கலக்கி வருகின்றனர்.

இதற்கு ஒருபுறம் ஆதரவும் ஒருபுறம் எதிர்ப்பும் இருந்தாலும் இணையதளத்தில் இப்போது விஜய் தான் ட்ரெண்டிங். ஆந்திராவில் கட்சி தொடங்கிய ஜெகன்மோகன் ரெட்டி எப்போதும் பேண்ட் சட்டை அணிந்தே வருவார். பாரம்பரியமிக்க அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தாலும் ஜெகன் மோகன் ரெட்டி பலத்த போராட்டங்களுக்கு பிறகே முதல்வராக முடிந்தது.

கட்சி ஆரம்பித்தது, பொதுமக்களை சந்தித்தது, நடைப்பயணம், முதல்வராக பதவி ஏற்றது தற்போது ஆட்சியை இழந்தாலும் பொது நிகழ்ச்சிகளில் ஒரே மாதிரியான டிரஸ் கோடையே ஜெகன்மோகன் ரெட்டி ஃபாலோ செய்து வருகிறார். அதையே விஜயும் காப்பியடித்திருப்பதாக ஒருபுறம் விமர்சனமும் எழுந்திருக்கிறது. அதே நேரத்தில் உடை என்பது அவரது விருப்பம். அரசியலுக்கு வருபவர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என சொல்லக்கூடாது என்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+