நெல்லை வீர தம்பதிக்கு.. 'அதீததுணிவு' விருது- நாளை வழங்குகிறார் முதல்வர் எடப்பாடி!
Recommended Video
சென்னை: கொள்ளையர்களை விரட்டிய நெல்லை வீர தம்பதிகளுக்கு நாளை சுதந்திர தின கொண்டாட்டத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அதீத துணிவு விருது வழங்கி கௌரவிக்க உள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் கடையம் கல்யாணிபுரத்தில் சண்முகவேல் என்பவரது தோட்டத்து வீட்டிற்கு கடந்த இரண்டு நாளுக்கு முன்பு முகமூடி அணிந்த கொள்ளையர்கள் நுழைந்தனர். அவர்கள் சண்முகவேலின் கழுத்தில் துண்டை இறுக்கி போட்டு கழுத்தை நெறித்து கொலை செய்ய முயன்றனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க சண்முகவேல் போராடினார்.

அபபோது அதனைபார்த்த அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி செந்தாமரை, உடனே தைரியமாக கொள்ளையர்களை நோக்கி வீட்டில் இருந்த பொருளை எடுத்து வீசினார். இதனால் கொள்ளையர்கள் சண்முகவேலை விட்டுவிட்டு செந்தாமரையை தாக்க முயன்றார்கள்.
இதன்பின்னர் சண்முகவேலும் கொள்ளையர்களை ஆவேசமாக தாக்கினார். இதையடுத்து கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் எடுத்து கொள்ளையர்கள் மீது செந்தாமரையும் சண்முகவேலும் எறிந்தனர். இதனால் ஒருகட்டத்தில் பயந்து போன கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர், இந்த சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியது.
கொள்ளையர்களை எதிர்த்து போராடி சண்டை போட்ட வயதான தம்பதிக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர். இந்நிலையில் கொள்ளையர்களை விரட்டிய நெல்லை வீர தம்பதிகளுக்கு விருது அளித்து கௌரவம் அளிக்க தமிழகஅரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி நாளை சென்னையில் நடைபெறும் சுதந்திர தின கொண்டாட்டத்தில் சண்முகவேல், செந்தாமரை தம்பதிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விருது வழங்கி கௌரவிக்கிறார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications