ரஜினியிடமிருந்து என்னை பிரிக்க சதி.. தமிழருவி மணியன் பரபரப்பு குற்றச்சாட்டு
சென்னை: ரஜினியிடமிருந்து என்னை பிரிக்க சதி நடக்கிறது என ரஜினி கட்சியின் மேற்பார்வையாளரும் மூத்த அரசியல்வாதியுமான தமிழருவி மணியன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து தமிழருவி மணியன் தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் ரஜினியிடமிருந்து என்னை பிரிக்க சதி நடக்கிறது. ரஜினி முதல்வர் வேட்பாளரா இல்லையா என்பது குறித்து நான் எந்த ஊடகத்திடமும் பேசவில்லை என்றார்.

2017-ஆம் ஆண்டு ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்த போதிலிருந்தே அவருக்கு ஆலோசராக இருந்து வந்தவர் தமிழருவி மணியன். அவர் திருச்சியில் மாபெரும் மாநாட்டை நடத்தி அதில் ரஜினி அரசியலுக்கு வர வேண்டிய அவசியம் குறித்து விளக்கினார்.
இந்த நிலையில் ரஜினிகாந்த் ஜனவரி மாதம் கட்சித் தொடங்குவதாக அறிவித்துள்ளார். கட்சி குறித்து டிசம்பர் 31-ஆம் தேதி அறிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் ரஜினி புதிதாக தொடங்க போகும் கட்சிக்கு மேற்பார்வையாளராக தமிழருவி மணியன் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
