என் குடும்ப நிகழ்வை அரசியலாக்க முயற்சிப்பது கண்டனத்துக்குரியது.. தமிழிசை வேதனை

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    'பாஜக ஒழிக'.. தமிழிசையின் மகன் எழுப்பிய கோஷம்.. வீடியோ

    சென்னை: குடும்பசூழலை சிலர் அரசியலாக்கும் கீழ்த்தரமான நிகழ்வு கண்டனத்திற்குரியது என கோபப்பட்டுள்ளார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை.

    தமிழக பாஜக தலைவரான தமிழிசை எத்தனை சவால்கள், சர்ச்சைகள் வந்தாலும் அவற்றை அசால்ட்டாக எதிர்க்கொள்பவர். தன்னை பற்றி தவறாக மீம்ஸ் போடுபவர்களை கூட ஆக்கப்பூர்வமாக சிந்தியுங்கள் இளைஞர்களே என அன்பாக வேண்டுகோள் விடுப்பவர்.

    டிவிட்டரில் கேட்கும் கேள்விகளுக்கும் அன்பாக பதில் அளித்து வியக்க வைப்பவர். அப்படிப்பட்ட தமிழிசை சவுந்தரராஜன் டிவிட்டரில் இன்று கோபப்பட்டுள்ளார். இதற்கு காரணம் வேறு யாருமல்ல அவரது மகன்தான்.

    பாஜகவுக்கு எதிராக கோஷம்

    பாஜகவுக்கு எதிராக கோஷம்

    நேற்று தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது அங்கு வந்த அவரது மகன் சுகநாதன், பாஜகவுக்கு எதிராக கோஷம் போட்டதாக தெரிகிறது

    இமேஜை டேமேஜ் செய்த மகன்

    இமேஜை டேமேஜ் செய்த மகன்

    தமாரை மலர்ந்தே தீரும் என்ற தாரக மந்திரத்தை தமிழிசை சொல்லாத இடங்களே இல்லை. அப்படியிருக்கும் தீர்க்கமான தலைவியின் இமேஜை ஒரு நிமிடத்தில் டேமேஜ் செய்து விட்டார் அவரது மகன்.

    தமிழிசை விளக்கம்

    தமிழிசை விளக்கம்

    இதுகுறித்து ஊடகங்களில் செய்திகள் பரவின. இந்நிலையில் இதுகுறித்து கோபமாக டிவிட்டரில் விளக்கமளித்துள்ளார் தமிழிசை. கூடவே அறிக்கையும் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

    என்ன நடந்ததுன்னா?

    என்ன நடந்ததுன்னா?

    நேற்றைய தினம் திருச்சி செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு குடும்பத்துடன் சென்றேன். அப்போது உத்தரப்பிரதேச துணை முதல்வர் தினேஷ் சர்மா தமிழக பாஜக அலுவலகமான கமலாலயத்திற்கு வருவதாக திடீரென நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது

    மகன் கோபமடைந்தார்

    மகன் கோபமடைந்தார்

    இதனால் திருச்சிக்கு செல்ல மறுத்து கணவர் மற்றும் குடும்பத்தினரை அனுப்ப முயன்றேன். நான் வர மறுத்ததால் எனது மகன் குடும்பத்தைவிட கட்சி முக்கியமா என கூறி கோபமடைந்தார்.
    குடும்பசூழலை சிலர் அரசியலாக்கும் கீழ்த்தரமான நிகழ்வு கண்டனத்திற்குரியது.

    அதிகமாக அனுபவித்திருக்கிறேன்

    அதிகமாக அனுபவித்திருக்கிறேன்

    குடும்பத் தலைவவியாகவும் இருந்து கொண்டு அரசியல் தலைவியாகவும் இருக்கும்போது குடும்பத்தைவிட அரசியலுக்கு அதிக நேரம் ஒதுக்கும் போது பல தலைவர்கைள் குடும்பத்தில் சந்திக்கக்கூடிய நிகழ்வுகள் தான் இவை. அரசியல்வாதியின் மகளாக அந்த வலியை அதிகமாகவே அனுபவித்திருக்கிறேன்.

    இதுவும் ஒன்று

    இதுவும் ஒன்று

    ஆக சாதரணமாக நடந்த ஓர் குடும்ப நிகழ்வை பெரும்பாலான ஊடகங்கள் பெருந்தன்மையோடு எடுத்துக்கொண்ட போது சில ஊடகங்கள் இதை அரசியல் ரீதியாக முன்னிறுத்துவது மனதை ரணப்படுத்தினாலும் பொது வாழ்க்கையில் இருக்கும் பெண்கள் சந்திக்கும் சவால்களில் இதுவும் ஒன்று என்றே எடுத்துக்கொள்கிறேன். அக்கறையோடு விசாரித்த அனைவருக்கும் நன்றிகள்.

    சவால்களை எதிர்கொள்வதே வாழ்க்கை

    எந்த வகையிலாவது எனது அரசியல் வேகத்தை முடக்க நினைப்பவர்களுக்கு எனது பதில் இதுதான்,
    என் பணிகளும்,பயணங்களும் தொடரத்தான் செய்யும்...
    இதில் பாசப்போராட்டங்கள் இருக்கத்தான் செய்யும்...
    சவால்களை எதிர்கொள்வதே வாழ்க்கை. இவ்வாறு தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+