டிவிட்டரில் இருந்த பெரியாரின் படத்தை ஓட்டுக்காக நீக்கிய கனிமொழியை வீரமணி கண்டித்தாரா?தமிழிசை கேள்வி
சென்னை : டிவிட்டரில் இருந்த பெரியாரின் படத்தை ஓட்டுக்காக நீக்கிய கனிமொழியை கி வீரமணி கண்டித்தாரா என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ் பேராளுமைகள் குறித்த ஆய்வுக்கட்டுரைகளை கவிஞர் வைரமுத்து வெளியிட்டு வருகிறார். அதன்படி தனது 24வது மற்றும் நிறைவு ஆய்வுக்கட்டுரையான பெரியார் குறித்த தமிழாற்றுப்படை ஆய்வுக்கட்டுரையை திருச்சியில் நேற்று வெளியிட்டார்.
இதில் திராவிடர் கழகத்தலைவர் கி வீரமணி, பேராசிரியர் அருணன், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் வைரமுத்து உருக்கமாக பேசினார்.

அமைதி காத்தேன்
அப்போது தன் மீதான பழிச்சொற்களை தாங்கிக்கொள்ள பெரியாரே காரணம். தமிழாற்றுப்படை முடியட்டும் என்பதற்காக தன் மீது பழிச்சொற்கள் கூறப்பட்டபோது அமைதி காத்ததாகவும் கூறினார்.

நகல் எடுக்க முடியாத அசல் மேலும் தமிழாற்றுப்படையில் பெரியாருக்கு என்ன வேலை என கேட்பவர்கள் தமிழையே அறியாதவர்கள். நகல் எடுக்க முடியாத அசல் தலைவர் பெரியார் என்றும் வைரமுத்து உருக்கமாக பேசினார்.
மேலும் தமிழாற்றுப்படையில் பெரியாருக்கு என்ன வேலை என கேட்பவர்கள் தமிழையே அறியாதவர்கள். நகல் எடுக்க முடியாத அசல் தலைவர் பெரியார் என்றும் வைரமுத்து உருக்கமாக பேசினார்.
|
திருமாவின் வேஷம்
இந்நிலையில் வைரமுத்துவின் பேச்சுக்குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டிவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது, காற்று தண்ணீரைப்போல் தமிழர்களுக்கு எப்போதும் தேவைப்படுபவர் பெரியார்....கவிஞர் வைரமுத்து. உங்கள் தலைவரின் அரசியல் வாரிசுகள்? தேர்தல் நேரத்தில் பெரியார் படத்தை அவசரமாக நீக்கிவிட்டு பனைமரத்தை போட்டதை கண்டித்தீர்களா? சிதம்பரத்தில் திருமாவின் பக்தி வேஷம்/கலைஞர் குடும்பம் கோவில்களில்??
|
கனிமொழியை கண்டித்தாரா?
பெரியாரை இழிவுபடுத்தியவர்கள் திருந்துவார்கள்?.......வீரமணியின் கூற்று திமுக தலைவரின் தங்கை கனிமொழிக்கு பொருந்தும்???தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தலின்போது கனிமொழியின் டுவிட்டர் பக்கத்தில் இருந்த பெரியாரின் படத்தை ஓட்டுக்காக நீக்கிய கலைஞர் மகளை வீரமணி கண்டித்தாரா? இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
-
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications