மீனு மீனோய்... என்ன மீனும்மா இது.. வாளை மீனா, விலாங்கு மீனா.. கையில் மீனுடன் கலகலக்க வைத்த தமிழிசை
புன்னைக்காயல் மீன் சந்தையில் தமிழிசை தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
Recommended Video

சென்னை: அது வாளை மீனா என்று தெரியவில்லை.. இரண்டு கையிலும் பெரிய பெரிய மீன்களை பிடித்து நின்று கொண்டிருக்கிறார் தமிழிசை!
தூத்துக்குடியில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் போட்டியிடுகிறார். எதிர்த்து நிற்பது தன்னை விட அனைத்திலுமே பலம் வாய்ந்த வேட்பாளர் என்றாலும் இந்த தொகுதியில் தமிழிசை ஓட்டு கேட்கும் பாணியே அலாதிதான்!
சாமான்ய மக்களிடம் தமிழிசை காட்டும் நெருக்கத்தை வேறு எந்த வேட்பாளரும் இந்த தொகுதியில் காட்டவில்லை என்பதே உண்மை! ஆரத்தி எடுப்பதும், பூமழை தூவுவதும் அனைத்து வேட்பாளருக்குமே நடக்கக்கூடிய இயல்பான விஷயங்கள்தான்!

முத்தமழை
ஆனால் தமிழிசையை பார்த்தவுடன் குழந்தைகள், பாட்டிகள் கட்டிப்பிடித்து கொள்வதும், முத்தம் தருவதும் எதிர்பாராதது! அதிலும் தமிழிசை அவர்களுடனே ஒன்று கலப்பது அதைவிட சுவாரஸ்யமாக தென்படுகிறது!

கட்டி அணைக்கிறார்
ஏற்கனவே காய்கறி மார்க்கெட் பக்கம் போய் வாக்கு கேட்ட தமிழிசை, இன்று புன்னைக்காயல் பகுதிக்கு சென்றுள்ளார். அது ஒரு மீன் சந்தை ஆகும். உள்ளே நாம் நுழைவதற்கு முன்பேயே மீன்வாடை மூக்கை துளைத்து உள்ளே போய்விடுகிறது. இங்கு சென்ற தமிழிசை, கூடையில் மீன் விற்று கொண்டிருந்தவர்களை கட்டி அணைத்து கொள்கிறார்.

இரண்டு மீன்
மீன் கூடையை அப்படியே போட்டுவிட்டு பெண்கள் தமிழிசையிடம் ஓடி வருகிறார்கள். அதில் அங்கிருந்த பெரிய மீன்கள் இரண்டினை, இரண்டு கைகளால் தூக்கி காட்டி போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார் தமிழிசை. இந்த போட்டோவை தனது ட்வீட்டிலும் பதிவிட்டுள்ளார்.
|
சந்தோஷம் மலர்ந்தது
"தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி புன்னைக்காயல் மீன் சந்தைக்குச் சென்று மீனவச் சகோதர,சகோதரிகளை சந்தித்து தாமரை சின்னத்திற்கு வாக்குச்சேகரித்தேன்." என்று தெரிவித்துள்ளார்.
தாமரை மலருதோ இல்லையோ.. தமிழிசையைப் பார்த்ததும் மீன் வியாபாரிகளிடம் சந்தோஷம் மலர்ந்ததைக் காண முடிந்தது.-
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
பிரபல துணை நடிகை தீபாவின் தந்தைக்கு அரிவாள் வெட்டு.. டீக்கடையில் பயங்கரம்! என்ன நடந்தது? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications