அண்ணன் கணேசமூர்த்திக்கு ராஜ்யசபாவை ஒதுக்கியிருக்கலாமே.. வைகோவுக்கு தமிழிசை அதிரடி கேள்வி
Recommended Video
சென்னை: "நீங்க ஈரோட்டில் போட்டியிட்டு விட்டு.. அண்ணன் கணேசமூர்த்திக்கு ராஜ்யசபா தந்திருக்கலாமே.. என்று வைகோவுக்கு தமிழிசை கேள்வி எழுப்பி உள்ளார்.
எப்படா வைகோ பிரச்சாரத்துக்கு வருவார்.. வாய் திறப்பார் என்று காத்திருந்தார் போலும்.. தமிழிசை தடாலடியாக 2 ட்வீட் போட்டு தாக்கிவிட்டார்.
4 தொகுதி இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளித்ததுடன், பிரச்சாரமும் செய்ய போவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி திருப்பரங்குன்றத்தில் பிரச்சாரமும் மேற்கொண்டார். அப்போது அதிமுக-பாஜகவை கடுமையாக சாடினார்.

தமிழிசை
வைகோ என்ன பேசினார் என்பதை எல்லாம் உன்னிப்பாக கவனித்த, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் அது சம்பந்தமான ட்வீட்களை போட்டுள்ளார்.
|
திருப்பரங்குன்றம்
"அந்தப்பணம் கொள்ளையடித்த பணம்! உங்கள் பணம் பொதுப்பணித்துறையில் திருடியது. பருப்பு வாங்கியதில் கமிஷன்! என திருப்பரங்குன்றம் பிரச்சாரத்தில் சொல்கிறார் வைகோ துரைமுருகன் வீட்டில் பிடிபட்ட பணம்? தூத்துக்குடியில் கனிமொழி சார்பில் வாக்காளர்களுக்கு விநியோகித்த பணம்?யார் பணம்???மக்கள் பணம்தானே?" என்று ஒரு ட்வீட் போட்டுள்ளார்.
|
கணேசமூர்த்தி
"திமுககூட்டணி நடந்து முடிந்த தேர்தலில் தமிழகத்தில் 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெறும் என்று பிரச்சாரம் செய்யும் வைகோ அவர்களே அந்த மகத்தான நம்பிக்கையில் மதிமுக விற்கு கிடைத்த ஒரே சீட்டில் நீங்கள் போட்டியிட்டு அண்ணன் கணேசமூர்த்திக்கு ராஜ்யசபை சீட்டை ஒதுக்கியிருக்கலாமே?" என்று மற்றொரு ட்வீட் பதிவிட்டுள்ளார்.
|
சவால்
இதற்கு நெட்டிசன்கள் மாறி மாறி கமெண்ட்களை போட்டு வருகிறார்கள். "துரைமுருகன் பேட்டி வருமாறு: 13 கோடி என்னுடைய பணம் என்று நிருபித்தால் அரசியலை விட்டே விலகிகொள்கிறேன் என்று முதல்வர்க்கு சவால் விடுத்துள்ளார். அதற்கே இன்னும் பதிலைக் காணும்" என்கிறார் ஒருவர்.

அன்புநாதன்
"அந்த சேகர் ரெட்டியிடம் பிடிபட்ட பணம் எங்கிருந்து வந்தது என்ற ரகசியம் உங்களுக்கு தெரியுமா? அன்புநாதன் வீட்டில் பிடிபட்ட பணம் என்னவாயிற்று என்று உங்களால் சொல்ல முடியுமா?" என்று இன்னொருத்தர் கேள்வி எழுப்புகிறார்.
"கணேச மூர்த்தி நின்றாலே ஜெயித்து விடுவார் எனும்போது வைகோ எதற்காக நிக்கனும்" என்று தமிழிசைக்கு கேள்வி மேல் எழுப்பி வருகிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications