"ஏன் அப்படி சொன்னே.. அப்படி சொல்ல கூடாதும்மா.. வற்புறுத்திய தாய்.. பூரிக்க வைத்த மகள் தமிழிசை
தாயை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் தமிழிசை சவுந்தரராஜன்
Recommended Video
சென்னை: ஆயிரம் வாழ்த்துக்கள் கிடைத்தாலும், அம்மாவின் வாழ்த்து போல கிடைக்குமா என்ன.. பெற்ற தாயை சந்தித்து மிக்க மகிழ்ச்சியுடன் ஆசீர்வாதம் வாங்கி உள்ளார் தெலுங்கானா ஆளுநராக பொறுப்பேற்கும் தமிழிசை சவுந்தராஜன்!
அப்பாவுடன் கருத்து வேறுபாடு, மன ரீதியான தாக்கம், அப்பா பேசாததால் தாங்க முடியாத மன பாரத்துடனே அரசியல் பயணம் ஆரம்பமானாலும், தமிழிசையை அவரது தாயார் ஒருபோதும் கைவிட்டு விடவில்லை.
இன்றைக்கு ஒரு டாக்டராக தமிழிசை உருவாகி நிற்க காரணமே அவரது அம்மாதான். சின்ன வயதில், தமிழிசைக்கு அப்பாவை பார்த்து, வியந்து.. தானும் அரசியலுக்கு நுழைய வேண்டும் என்பது ஆசை, ஆனால் தமிழிசையின் அம்மாவுக்கோ மகள் டாக்டர் ஆக வேண்டும் என்பதுதான் ஆசை.

எம்எல்ஏ
ஒருமுறை ஸ்கூலில், "நீ பெரியவளானதும் என்னவாக போறே?" என்று ஒரு டீச்சர் கேட்டதும், கண்ணை மூடிக்கொண்டு படக்கென்று "எம்எல்ஏ" என்று சொன்னார் தமிழிசை. வீட்டிற்கு வந்து அம்மாவிடம் இதை சொன்னதும், மகளை கடிந்து கொண்டார் அவர்.

டாக்டர்
"ஏன் இப்படி சொல்றே.. அப்படியெல்லாம் சொல்லாதே.. யாராவது பெரியவள் ஆனதும் என்னவா ஆகப்போறேன்னு கேட்டால், டாக்டர் ஆக போறேன்னு சொல்லணும்" என்று வற்புறுத்தியவர் இந்த தாய்தான். இவரது ஆசைப்படியே மருத்துவர் ஆகிவிட்டாலும், தன் ஆசைப்படியே அரசியலுக்குள்ளும் நுழைந்தார் தமிழிசை.

பாட்டி
ஆனாலும் அரசியலுக்குள் நுழைந்த மகளை வாழ்த்தி மகிழ்ந்தவரும் இதே தாய்தான். தமிழிசையின் குழந்தைகளை வளர்த்தெடுத்ததும் இவரேதான். அதனால்தானோ என்னவோ, அவர்கள் இன்றுவரை பாட்டியை 'அம்மா' என்றே அழைக்கின்றனர்.

புத்துணர்ச்சி
இன்று அரசியலில் அடுத்த கட்டத்துக்கு நுழைந்துள்ளார் தமிழிசை. தந்தையின் வாழ்த்து தமிழிசைக்கு கிடைத்துள்ளது புத்துணர்ச்சியாக இருந்தாலும், அன்றுமுதல் இன்றுவரை தன்னை வாரி அணைத்து கொள்ளும் தாயை, இப்போது நேரில் சந்தித்து தமிழிசை வாழ்த்து பெற்றுள்ளார்.
|
ட்வீட்
"தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதை கூறி என் அன்னையிடம் ஆசி பெற்றேன்..." என்று சொல்லி ட்வீட் போட்டு மகிழ்ந்துள்ளார்.அந்த ட்வீட்டில் உள்ள போட்டோவில் தாயின் முகத்தில் உள்ள பூரிப்பு... இன்னும் நிறைய அர்த்தத்தை நமக்கு உணர்த்துகிறது.
-
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய்












Click it and Unblock the Notifications