ஒழுக்கமே இல்லாதவர் கமல்.. அவர் ஊருக்கு உபதேசம் செய்கிறாரா.. தமிழிசை பாய்ச்சல்

கமல்ஹாசனின் அரவக்குறிச்சி பிரச்சார பேச்சிற்கு தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்றார் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன்

    சென்னை: "வாழ்க்கையில் ஒழுக்கமே இல்லாதவர்தான் கமல்.. இதில ஊருக்கு என்ன உபதேசமா? பள்ளப்பட்டியில் நின்றுகொண்டு கலவரம் ஏற்படுத்த மாதிரி பேசுவதா? மதவிஷத்தை கமல் பரப்பி வருவது ஓட்டுக்காகத்தான்" என்று அடுத்தடுத்து 3 ட்வீட்களை போட்டு தாக்கி உள்ளார் தமிழிசை சவுந்தராஜன்!

    நேற்று அரவக்குறிச்சி பிரச்சாரத்தில் மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் பேசும்போது, "மகாத்மா காந்தியின் சிலைக்கு முன்னால் நின்றுசொல்கிறேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே. அது (தீவிரவாதம்) இங்கே தொடங்கியது. அந்த கொலைக்கான (1948-ம் ஆண்டு காந்தியை கோட்சே துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது) விடையை தேடித்தான் நான் இங்கு வந்திருக்கிறேன்" என்றார்.

    Tamilisai Soundarajan slams Kamal hasans Aravakurichi speech

    இதுதான் இப்போது விவாதபொருளாகி உருமாறி, கமலை தாறுமாறாக விமர்சித்து வருகிறது பாஜக. அந்தவகையில், தமிழிசை சவுந்தரராஜனும் தனது கண்டனத்தை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

    "இந்து தீவிரவாதம் என்று தேர்தல் பிரச்சாரத்தில் பேசும் கமல்ஹாசனை கண்டிக்கிறோம். பள்ளபட்டியில் சிறுபான்மை மக்கள் நடுவில் நின்றுகொண்டு மத உணர்வுகளைத்தூண்டி கலவரத்தை ஏற்படுத்த நினைக்கும் இவர்மீது தேர்தல் ஆணையம் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று முதல் ட்வீட் உள்ளது.

    "தன் வாழ்க்கையில் எப்போதும் ஒழுக்கத்தையே கடைப்பிடித்த காந்தியின் கொள்ளுப்பேரன் தான் என்று கமல் சொல்லிக்கொள்ள எந்த தகுதியும் இல்லாதவர் ஏனெனில் இதுவரை அவர் வாழ்ந்த வாழ்க்கையில் எந்த ஒழுக்கத்தையும் கடைப்பிடிக்காதவர் என்பது நாடறிந்த உண்மை!ஊருக்கு உபதேசிக்க என்ன தகுதி?அரசியல்நடிப்பு???" என்று இரண்டாவது ட்வீட் பதிவாகி உள்ளது.

    "மகாத்மாவின் படுகொலையை கண்டித்து நாடே பதறியது கொலையாளி தூக்கிலிடப்பட்டார் ஆனால் அதை இந்து தீவிரவாதம் என தேர்தல் பிரச்சாரத்தில் பேசுவது விஷமத்தனமானதும் ஆபத்தானதும் கூட. புதிய அரசியலை முன்னெடுப்பதாகக் கூறும் கமல் பழையதை கையில் எடுப்பது மதவிஷம் பரப்பி வரும் ஓட்டுக்காகத்தானே?அரசியல்வேஷம்" என்று மூன்றாவது ட்வீட் உள்ளது.

    இந்த ட்வீட்டுகளுக்கு கீழே இந்துத்துவா கொள்கைக்கு எதிராகவும், ஆதரவாகவும் மாறி மாறி கமெண்ட்கள் வந்து விழுந்தாலும், "பொதுவாழ்வில் உள்ள பலரின் தனி வாழ்க்கை நாடே அறியும், அதை விமர்சிப்பது நல்லவரின் மகளுக்கு அழகல்ல" என்று பலர் தமிழிசையிடம் உரிமையோடு நெட்டிசன்கள் சொல்லி வருகிறார்கள்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+