எங்காச்சும் தனக்குத்தானே ஆரத்தி எடுத்து பொட்டையும் வச்சுப்பாங்களா.. தமிழிசைக்கு நடந்திருக்கே!

தூத்துக்குடியில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: யாராவது தங்களுக்கு தாங்களே ஆரத்தி எடுத்து பொட்டையும் வைத்து கொள்வார்களா.. ஆனால் நம்ம தமிழிசை அப்படித்தான் செய்துள்ளார்!

தூத்துக்குடியில் 2 பெண்கள் நேருக்கு நேராக மோத உள்ளார்கள். இருவருமே தமிழகம் அறிந்த வாரிசுகள் என்றாலும் அவர்கள் பழகும் விதங்களும், மக்களிடம் அணுகும் முறைகளும் வெவ்வேறாக இருக்கின்றன! அதில் ஒருவர் ஆழமான சிந்தனைகளுடன், தீர்க்கமான செயல்பாடுகளை கொண்டிருந்தாலும் வார்த்தைகளில் எப்போதுமே ஒரு லிமிட் தென்படும்.

ஆனால் தமிழிசை அப்படி இல்லை. மனதில் நினைப்பதை அப்படியே பிரதிபலிப்பவர்... சொல்லுக்கும் செயலுக்கும் வேறுபாடு நிறைய இருக்காது. தொகுதி மக்களிடம் இவர் பழகும் முறைதான் இப்போதைக்கு டாப்! இது சம்பந்தமாக தமிழிசை ட்விட்டரில் பதிவிடும் புகைப்படங்களோ அதைவிட டக்கர்!

 குழந்தை

குழந்தை

இப்படித்தான் ஓட்டு கேட்க போகும் தமிழிசைக்கு ஆரத்தி எடுக்கிறார்கள். ஆரத்தி எடுக்கும் பெண்ணின் இடுப்பில் ஒரு குழந்தை உள்ளது. ஆரத்திய காட்டியதும், தமிழிசைக்கு பொட்டு வைக்கும்படி அந்த குழந்தையின் அம்மா சொல்கிறார்.

ஆரத்தி தட்டு

குழந்தையோ திருதிருவென விழிக்கிறது. கடைசியில், தமிழிசையே அந்த குழந்தையின் கையை பிடித்து.. ஆரத்தி தட்டில் வைத்து.. பொட்டை எடுத்து தன் நெற்றியிலேயே தானே வைத்து கொள்ளுகிறார்! அங்கிருந்து நகர முயன்றவர், ஒரு விஷயத்தை மறந்துவிட்டார் போலும்.. திடீரென ஞாபகம் வந்ததும்.. அந்த குழந்தையை தூக்கி இடுப்பில் வைத்து கொண்டார்.

அதிமுக கொடி

இன்னொரு இடத்தில் ஒரு பாட்டி தமிழிசையின் கையை பிடித்து கட்டியணைக்கிறது. ஆனால் கையிலோ அதிமுக கொடி. வேறு வழியில்லை.. கூட்டணி கட்சியாச்சே.. அதான் இறுக்கமாக தமிழிசை பாட்டியை கட்டிப்பிடித்து கொண்டார்!

காவி நிற உடை

பிரச்சாரத்தின்போது ஒரு ஓட்டலுக்குள் தமிழிசை சாப்பிடுகிறார். அது ஒரு சாதாரண ஓட்டல்தான். அவருடன் வந்த நிர்வாகிகளும் தமிழிசையுடன் சேர்ந்து சாப்பிடுகிறார்கள். ஆனால் இங்க ஒரு மேட்டர் என்னவென்றால், அங்கிருக்கும் ஓட்டர் சர்வர்கள் காவி நிற யூனிபார்மில் இருந்தார்கள். இது யதேச்சையாக நடந்ததா? அல்லது அவர்கள் யூனிபார்மே அந்த கலர்தானா? என்று தெரியவில்லை.

 கையில் தட்டு

கையில் தட்டு

இன்னொரு போட்டோ! மருத்துவ முகாமுக்கு தமிழிசை சென்றாரா என்று தெரியவில்லை... கழுத்தில் ஸ்டெதஸ்கோப் தொங்குகிறது. ஆனால் கையில் சாப்பாடு பிளேட் உள்ளது. அங்கிருந்தவர்களுடன் தரையில் உட்கார்ந்து, அந்த பிளேட்டில் சாப்பாடு போட்டு, சாப்பிட்டு கொண்டிருக்கிறார் தமிழிசை! எப்படியோ தூத்துக்குடியை ஒரு கலக்கு கலக்கி வருகிறார் தமிழிசை!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+