படையப்பா.. சாதனைகள் படையப்பா.. தமிழிசை வாழ்த்து.. அக்கா ரைமிங் + டைமிங்.. நெட்டிசன்கள் பூரிப்பு

நடிகர் ரஜினிக்கு தமிழிசை சவுந்தராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வாழ்நாள் சாதனையாளர் விருது பெற போகும் நடிகர் ரஜினிகாந்த்துக்கு தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார். "படையப்பா இன்னும் பல சாதனைகளை படையப்பா " என்று தமிழிசை சொல்ல.. "அக்கா ரைமிங் + டைமிங்!" என்று நெட்டிசன்கள் அந்த வாழ்த்துக்கு கமெண்ட் அளித்து வருகின்றனர்.

ரஜினிகாந்த் 1975-ம் ஆண்டு அபூர்வ ராகங்கள் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின்னர் இந்த 44 ஆண்டுகளில் 167 படங்களில் நடித்து முடித்துள்ளார்.

தொடர்ந்து பல ஆண்டுகளாகவே தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராகவே நீடித்து வருகிறார். இவருக்கு
ஏற்கனவே பத்மபூஷன், பத்ம விபூஷன், செவாலியே விருது, பிலிம்பேர் விருது, தமிழக அரசின் சிறந்த நடிகர் விருது போன்ற பல விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டு இருக்கின்றன.

 மத்திய அமைச்சர்

மத்திய அமைச்சர்

இந்நிலையில் திரைப்படத்துறைக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது அவருக்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்த அறிவிப்பை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இம்மாதம் நடைபெறவுள்ள கோவா சர்வதேச திரைப்பட விழாவின்போது இந்த விருது ரஜினிக்கு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபூர்வ ராகங்கள்

ரஜினிக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தராஜனும் வாழ்த்து தெரிவித்து ட்வீட் போட்டுள்ளார். அதில், "அபூர்வ ராகங்கள் தொடங்கி பேட்ட வரை சாதித்ததை வாழ்த்தி வாழ்நாள் சாதனையாளர் விருது. படையப்பா இன்னும் பல சாதனைகளை படையப்பா என வாழ்த்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

டைமிங்

தமிழிசையின் இந்த பதிவிற்கு ஏராளமானோர் கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர். ஒருவர், "அக்கா ரைமிங் + டைமிங்!" என்று தெரிவித்துள்ளார்.

பதிவுகள்

"ஆட்டோ...பின்னாடியே எழுதலாமே..." என்று இன்னொருவரும், "வேற லெவல் வாழ்த்துகள்... க்கா... 👌" என்று மற்றொருவரும் பதிவிட்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+