முதல்வர்கள் வேந்தரானால்.. மா.செக்கள் துணை வேந்தர் ஆகிவிடுவார்கள்! தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்
சென்னை: பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சரை நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு கூறி வரும் நிலையில், அப்படி நடந்தால் கட்சிக்காரர்கள் ஊழலில் ஈடுபடுவார்கள் என தெலங்கானா ஆளுநரும், புதுவை துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி கொடுத்திருக்கிறார்.
பல்கலைக்கழக வேந்தர்களாக முதலமைச்சரை நியமித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 சட்ட மசோதாக்களைக் காரணம் ஏதும் குறிப்பிடாமல் ஆளுநர் திருப்பி அனுப்பியிருந்தார். அவற்றை மீண்டும் சட்டப் பேரவையில் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காகத் தமிழ்நாடு அரசு கடந்த 18ம் தேதி அனுப்பியுள்ளது.

இது குறித்து அரசியல் கட்சியினர் கூறுகையில், தேசிய அளவில் உயர்கல்வி பயிலும் மாணவர்களில் கிட்டத்தட்ட 85% பேருக்கு மாநில அரசுகள் உருவாக்கிய பல்கலைக்கழகங்கள்தாம் உயர்கல்வியை வழங்குகின்றன என 2019-20 ஆம் ஆண்டுக்கான உயர்கல்வி குறித்த அனைத்திந்திய ஆய்வறிக்கை (AISHE) தெரிவிக்கிறது. உயர்கல்வியிலும், ஆராய்ச்சிக் கல்வியிலும் இந்தியாவிலேயே முதலிடம் வகிக்கும் மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. அதுமட்டுமின்றி இந்தியாவின் முதன்மையான 100 பல்கலைக்கழகங்களில் தமிழ்நாட்டிலுள்ள 9 மாநில அரசுப் பல்கலைக்கழகங்கள் இடம் பிடித்துள்ளன.
மாநில அரசுகள் தமது நிதியைக்கொண்டு உருவாக்கும் பல்கலைக்கழகங்களுக்கு வேந்தராக ஆளுநரை நியமிக்க வேண்டுமென எந்த சட்ட நிர்ப்பந்தமும் கிடையாது. அரசமைப்புச் சட்டம் வரையறுத்திருக்கும் ஆளுநரின் பணிகளில் பல்கலைக்கழக வேந்தராக இருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்படவில்லை. தனியார் நடத்தும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் அவற்றின் உரிமையாளர்கள்தான் வேந்தர்களாக உள்ளார்கள். அவற்றில் ஆளுநருக்கு எந்த வேலையும் கிடையாது.
இந்தியா சுதந்திரமடைந்தபின் மத்தியிலும் மாநிலங்களிலும் ஒரே கட்சியே ஆட்சி செய்ததால் ஆளுநர்களை வேந்தர்களாக நியமிக்கும் மரபு அறிமுகமானது. அதன் பிறகு ஆட்சிக்கு வந்த கட்சிகளும் அதே மரபைப் பின்பற்றி வந்தன. குஜராத் முதலமைச்சராக நரேந்திர மோடி இருந்தபோது குஜராத்தில் இருக்கும் 14 மாநில அரசுப் பல்கலைக்கழகங்களில் அப்போது வேந்தராக இருந்த ஆளுநரை நீக்கிவிட்டு முதலமைச்சரான தன்னை வேந்தராக நியமித்து சட்டம் இயற்றினார். அதற்கு காங்கிரஸால் நியமிக்கப்பட்டிருந்த ஆளுநர் கமலா பெனிவால் ஒப்புதல் தரவில்லை.
மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பாஜகவைச் சேர்ந்த ஓ.பி.கோலி குஜராத்தின் ஆளுநர் ஆனதும் 2015 இல் அந்த சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் தந்தார். இப்போது முதலமைச்சர்தான் அங்கே வேந்தராக உள்ளார். அப்படியெனில் குஜராத்தில் மோடி எடுத்த நடவடிக்கை தவறு என்கிறார்களா?" என்று கேள்வியெழுப்பியுள்ளனர்.
இந்த கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக பேசியுள்ள தமிழிசை செளந்தரராஜன், "பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சரை நியமித்தால் கட்சிக்காரர்கள் ஊழலில் ஈடுபடுவார்கள்" என்று குற்றம்சாட்டியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் மேலும் பேசியதாவது,
"ஜெயலலிதா பல்கலைக்கழக வேந்தராக முதலமைச்சர் இருக்க வேண்டும் என்று அப்போது கூறியபோது திமுகவினர் எதிர்த்தார்கள். பட்டமளிப்பு விழாவில் நிதியை அறிவித்துவிட்டு முதலமைச்சர் வேந்தராக இருந்தால் இதுபோன்ற நிதியுதவி அளிக்க முடியும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறுகிறார். அரசாங்கத்தின் கீழ்தான் பல்கலைக்கழகங்கள் இயங்குகின்றன. உயர் கல்வித்துறை அமைச்சர்தான் அதனை நிர்வகித்து வருகிறார். அப்படி இருக்கையில், வேந்தராக இருந்தால்தான் உதவி செய்வேன் என்று முதல்வர் கூறுவது தவறு.
முதலமைச்சர்கள் வேந்தராக இருந்தால் மாவட்டச் செயலாளர்களை துணை வேந்தராக நியமிப்பார்கள். துணை வேந்தர்களை நியமிக்கும் உரிமை முதலமைச்சரிடம் சென்றால் கட்சி நிர்வாகிகள் துணை வேந்தராக வந்து ஊழல் செய்வார்கள். எனவே, ஆளுநர் பல்கலைக்கழக வேந்தராக இருப்பதுதான் சரி. அப்படி இல்லையென்றால் அரசியல் சாயம் பூசப்படும். உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம், என டெல்லி வரை செல்வதை விட ஆளுநருடன் அமர்ந்து பேசுவது மக்கள் நலனுக்கு நல்லது" என்று கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications