நடிப்பவர்களுக்கு காஷ்மீர் பற்றி என்ன தெரியும்?.. விஜய் சேதுபதியோடு சண்டை போடும் தமிழிசை!

சினிமாவில் நடிப்பவர்களுக்கு காஷ்மீர் பிரச்சனை பற்றி என்ன தெரியும்? என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சினிமாவில் நடிப்பவர்களுக்கு காஷ்மீர் பிரச்சனை பற்றி என்ன தெரியும்? என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.

காஷ்மீர் விவகாரம் தற்போது தமிழகத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜம்மு காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டதற்கும், அதன் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆதரவு தெரிவித்தும் தமிழகத்தில் பலர் கருத்து கூறி வருகிறார்கள்.

இந்த நிலையில் காஷ்மீர் பிரச்சனை குறித்து நடிகர் விஜய் சேதுபதி கருத்து கூறினார். அதில், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது ஜனநாயகத்துக்கு விரோதமானது. இதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. காஷ்மீர் விவகாரம் குறித்து பெரியார் அன்றே கருத்து கூறிவிட்டார்.

என்ன பேசினார்

என்ன பேசினார்

அடுத்தவர் வீட்டு பிரச்னையில் மற்றொருவர் தலையிட முடியாது. தலையிட கூடாது. பக்கத்து வீட்டார் மீது அக்கறை செலுத்தலாம்; ஆளுமை செலுத்தக் கூடாது. அவர்கள் வாழ்க்கையில் தலையிட கூடாது, என்று பெரியார் பழமொழியை வைத்து விஜய் சேதுபதி பேசினார். .

என்ன பதில்

என்ன பதில்

இதற்கு பதில் அளித்த தமிழிசை சௌந்தரராஜன், காஷ்மீர் பற்றி சிலர் தவறாக கருத்து கூறுகிறார்கள். சினிமாவில் நடிப்பவர்களுக்கு காஷ்மீர் பிரச்சனை பற்றி என்ன தெரியும்? காஷ்மீரை பற்றி ஒன்றுமே தெரியாத நபர்கள் எல்லாம் கருத்து கூறுகிறார்கள்.பெரியார் பற்றி எல்லாம் தேவையில்லாமல் எடுத்துக்காட்டு கூறுகிறார்கள்.

நிறுத்த வேண்டும்

நிறுத்த வேண்டும்

அவர்கள் சினிமாவில் மட்டும் நடிப்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். காஷ்மீரில் இந்தியா செய்த நடவடிக்கையை பல கோடி பேர் வரவேற்று இருக்கிறார்கள். உலக தலைவர்கள் பலர் இந்த நடவடிக்கையை வரவேற்று இருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது நடிகர்கள் கொஞ்சம் அமைதி காப்பதே நல்லது என்று தமிழிசை சௌந்தரராஜன் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று என்ன

நேற்று என்ன

முன்னதாக நேற்று நடிகர் ரஜினிகாந்த் இந்த விஷயத்தில் கருத்து தெரிவித்தார்.ரஜினி தனது பேச்சில், காஷ்மீர் சிறப்பு அதிகாரம் நீக்கப்பட்டதற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். அதை வரவேற்கிறேன். அமித் ஷாவும் மோடியும், கிருஷ்ணனும் அர்ஜுனனும் போன்றவர்கள், என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+