தெலுங்கு பேசும் நீங்கள்தான் அந்நியர்! நான் தமிழ் ரத்தம் ஓடும் தமிழிச்சி.. முரசொலிக்கு தமிழிசை பதிலடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தெலுங்கு பேசி தமிழ் வேஷமிடும் தெலுங்கர்களுக்கு தமிழ் ரத்தம் ஓடும் தமிழச்சி நான் என்பதை ஜீரணித்து கொள்ள முடியவில்லை என தெலுங்கானா ஆளுநரும், புதுவை துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார். அவர் குறித்து முரசொலி நாளிதழில் வெளியான தலையங்கத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வலியுறுத்தி திமுக கூட்டணி கட்சிகள் குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளன. இது தொடர்பாக நடந்த டிவி விவாத நிகழ்ச்சியில் ஆளுநர் தமிழிசை கலந்து கொண்டு அவருடைய கருத்துகளை வெளியிட்டார்.

இதை முரசொலி கண்டித்திருந்தது. தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் குறித்து முரசொலியின் சிலந்தி கட்டுரையில் விமர்சிக்கப்பட்டிருந்தது. அதில் சிலருக்கு மைக் மேனியா இருக்கிறது. மைக் கிடைத்துவிட்டால் என்னவேண்டுமானலும் பேசுவார்கள்.

முட்டுக்கட்டை

முட்டுக்கட்டை

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசோடு ஒத்துழைத்து, மக்கள் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை போடும் அரசியல் நடத்தாமல் ஆக்கப்பூர்வ அரசியலை நடத்திட ஆளுநர்கள் முனைப்பு காட்டிட வேண்டும். தமிழ்நாட்டு ஆளுநர் ரவிக்கும், தமிழக அரசுக்கும் இடையேயுள்ள பிரச்சினையில் தமிழிசை, அவரது கூற்றுப்படி மூக்கை, உடம்பை, வாலை நீட்டுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். தெலுங்கானாவில் பட்ட அடிக்கு தமிழ்நாட்டில் வந்து வீரம் காட்டக் கூடாது!

தெலுங்கானா

தெலுங்கானா

உங்களது எல்லை தெலுங்கானா. அங்கே ஜம்பம் சாயவில்லை என்பதால், தமிழ்நாட்டு எல்லைக்குள் நுழைந்து வீரம் காட்டாதீர்கள். பொறுமையை பயம் என எண்ணி விடாதீர்கள். எரிமலைகள் பொறுமையாகத்தான் இருக்கும். வெடித்தால் என்ன விபரீதம் ஏற்படும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள் என்று முரசொலியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆளுநர் தமிழிசை பதிலடி

ஆளுநர் தமிழிசை பதிலடி

இந்த கட்டுரைக்கு ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: திமுக தங்களை எரிமலைகள் என சொல்லிக் கொள்கிறது. எரிமலைகளால் இமயங்களை ஒன்றும் செய்துவிட முடியாது. சிலந்தி வேடமிட்டு வரும் மூட்டை பூச்சிகளே உங்கள் சாயம் வெளுக்கிறது என்ற பயமா? எனவே தான் எதைக் காண்டாலும் தினம் தினமும் அஞ்சும் தெனாலி திரைப்படக் கதாநாயகன் போல் நிழலுக்கும் அஞ்சி அஞ்சி அடிக்கடி ஆளுநரை பற்றி பக்கம் பக்கமாக கட்டுரை எழுதுகிறீர்கள்.

சீரியல் சினிமா

சீரியல் சினிமா

சீரியலிலும் சினிமாவிலும் நடித்துவிட்டு பதவியில் அமர்ந்திருப்பவர்களுக்குத்தான் கேமரா மேனியா மைக் மேனியா உள்ளது. உண்மையை உரக்கச் சொல்லும் எங்களுக்கு மைக் மேனியாவும்இல்லை கேமரா மேனியாவும் இல்ல. எங்களுக்கு மைக் மேனியா என்பதைவிட உங்களுக்குத்தான் மோடி போபியா (மோடி மீது பயம்). எனவே இந்த பயத்தில் குளிர் ஜூரம் வந்து அடிக்கடி என்னைப் பற்றி கட்டுரை வருகிறது.

தெலுங்கானாவில் என்ன நடக்கிறது

தெலுங்கானாவில் என்ன நடக்கிறது

தெலுங்கானாவில் என்ன நடக்கிறது என்பதை ஒழுங்காக முழுமையாக தெரிந்து கொண்டு பேசுங்கள். தெலுங்கை பூர்வீகமாகக் கொண்டு வீட்டில் தெலுங்கு பேசி தமிழ் வேஷமிடும் தெலுங்கர்களுக்கு தெலுங்கானாவின் ஆளுநராக இருந்தாலும் தெலுங்கானா சட்டசபையில் திருக்குறளை தமிழில் ஒலிக்கச் செய்த முழுமையான தமிழ் ரத்தம் ஓடும் தமிழச்சி நான் என்பதை உங்களால் ஜீரணித்து கொள்ள முடியவில்லை.

அந்நியர் யார் நானா

அந்நியர் யார் நானா

நீங்கள் யார் என்னை தமிழகத்தில் கருத்து கூற முடியாது என்று சொல்வது. யார் அந்நியர் நீங்களா? நானா? கடந்த மூன்று ஆண்டுகள் தெலுங்கானா உள்ளூர் பத்திரிகைச் செய்திகளை ஆராய்ச்சி செய்து பார்த்தால் யார் நடுங்கிப் போயிருக்கிறார்கள் என்பது தெரியும். அங்கே தெலுங்கானா அரசை அலறவிடுவது யார் என்பதும் தெரியும். இதன் மூலம் உலகத் தமிழர்களுக்கு காப்புரிமை வாங்கிக் கொண்டதாக தம்பட்டம் கட்டிய, வீர வசனம் பேசிய உங்கள் சாயம் வெளுக்கிறது. அங்கே பண்ணை வீட்டில் நடக்கும் வாரிசு அரசியல் ஆட்சியை மக்கள் முன் தோலுரித்துக் காட்டியதால் ஆளுநர் மாளிகை மீது கோபம்.

குருவி தலையில் பனம் பழமா

குருவி தலையில் பனம் பழமா

தெலுங்கானாவில் மூன்று நாள் பாண்டிச்சேரியில் மூன்று நாள் என்று நேரம் ஒதுக்கி வழியில் தமிழ்நாட்டிலும் சில நிகழ்வுகளில் கலந்துகொண்டு பணியாற்றும் என்னை குறை காண வேண்டாம். நான் பொதுவெளியில் வைக்கும் வாதங்களுக்கு பதில் விளக்கம் சொல்ல தெம்பும் திராணியும் அற்றவர்கள்தான் என்னைப் பற்றி கட்டுரை எழுதுகிறார்கள். குருவி தலையில் பனம் பழமா என்று கேட்டிருக்கிறீர்கள்? இலவச பனங்காய்களை தலையில் சூட்டிக் கொள்ளும் வாரிசு குருவிகள் அல்ல நாங்கள். பனை விதைகளாய் மண்ணில் புதைந்து தானே வளர்ந்து உருக்கேறிய பனை மரங்கள் நாங்கள்.

சிங்கங்கள்

சிங்கங்கள்

முரசொலியின் சலசலப்புக்கு அஞ்ச மாட்டோம். இடி ஒலியே எங்களை ஒண்ணும் செய்ய முடியாத போது. முரசொலி எங்களை என்ன செய்துவிட முடியும். வதந்திகளை பரப்பும் சிலந்திகள் நசுக்கப்படலாம். உண்மையாக உழைக்கும் சிங்கங்களை ஒன்றும் செய்து விட முடியாது. சிலந்திகள் சிங்கங்களை என்ன செய்து விட முடியும் என தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+