வலிப்பு நோயால் துடித்த பாஜக நிர்வாகி.. தமிழிசை செய்த முதலுதவி.. சென்னை கமலாலயத்தில் என்ன நடந்தது?
சென்னை: சென்னை தி நகரில் உள்ள பாஜகவின் தலைமை அலுவலகம் கமலாலயத்துக்கு வந்த பாஜக நிர்வாகி திடீரென்று வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு தரையில் விழுந்தார். இதை பார்த்ததும் தமிழிசை சவுந்தரராஜன் அவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
தமிழகத்தில் பாஜக எப்படியாவது வளர வேண்டும் என்ற முனைப்பில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜக நிர்வாகிகள் தொடர்ந்து பணி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் சென்னை தி நகரில் தமிழக பாஜகவின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று முக்கிய ஆலோசனை கூட்டம் நடந்தது. அதாவது இன்று பாஜக மாநில மையக்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பல்வேறு தலைவர்கள் பங்கேற்றனர்.
பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் தருண் சுக்,மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல் முருகன், பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், மேலிட இணைப்பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மூத்த தலைவர்களான எச் ராஜா, பொன் ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்பட பலர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் பற்றி விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கு பிறகு தமிழிசை சவுந்தரராஜன் பத்திரிகையாளர்களை சந்திக்க வந்தார். அப்போது பாஜக நிர்வாகி ஒருவருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டது. அவர் பாஜக அலுவலகத்தின் தரையில் விழுந்து துடிதுடித்தார்.
இதை பார்த்ததும் தமிழிசை சவுந்தரராஜன் ஓடிவந்து அந்த பாஜக நிர்வாகிக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார். அவரை ஆசுவாசப்படுத்தும் வகையில் உடலில் ஆங்காங்கே தேய்த்து விட்டார். இதில் பாஜக நிர்வாகி மெல்ல மீண்டு வந்தார். அதன்பிறகு அந்த நிர்வாகி ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுப்பி வைக்கப்பட்டார். மருத்துவமனையில் அந்த நிர்வாகிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே பாஜக நிர்வாகிக்கு தமிழிசை சவுந்தரராஜன் முதலுதவி அளித்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. தமிழிசை சவுந்தரராஜனின் செயலுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். தமிழிசை சவுந்தரராஜன் பாஜகவின் முன்னாள் தலைவர், முன்னாள் ஆளுநராக பொறுப்பு வகித்தவராக இருந்தாலும் கூட அவர் அடிப்படையில் ஒரு டாக்டர் ஆவார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு












Click it and Unblock the Notifications